Thalaivar 173: ரஜினியின் தலைவர் 173 புதிய இயக்குநர் யார்? கோலிவுட்டில் நடக்கும் போட்டி! அந்த லக்கி நபர் இவரா?
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருந்த தலைவர் 173 திரைப்படத்திலிருந்து, இயக்குநர் சுந்தர். சி விலகியதன் அதிர்வலை இன்னும் ஓயவில்லை! 'தவிர்க்க முடியாத காரணங்கள்' என்று அவர் விலகியதை அடுத்து, இப்போது அந்தப் படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற கேள்விதான் கோலிவுட்டின் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது!

பரவிய புரளி
சுந்தர். சி விலகியதை அடுத்து, தலைவர் 173 திரைப்படம் கைவிடப்பட்டு விட்டதாக ஒரு தகவல் வேகமாகப் பரவியது. இதற்கு முன்னர், கொரோனா காலத்திலேயே ரஜினி, கமல் இருவரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி, பின்னர் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதனால், இந்த முறையும் அதேபோல் படம் டிராப் ஆகி இருக்குமோ என்று ரசிகர்கள் பயந்தனர்.
உண்மை
ஆனால், அந்தத் தகவல் உண்மையில்லையாம். சுந்தர். சி விலகினாலும், கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படம் நிச்சயம் உருவாகும் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போது இந்த படத்தை பற்றிப் புரியாத புதிர் என்னவென்றால், அடுத்த இயக்குநர் யார்? என்பதுதான்.
ரஜினியின் புது பிளான்
ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே, நடிகர் விஜய்யின் படங்களை இயக்கிய இயக்குநர்களை தேர்ந்தெடுத்து பணியாற்றுவதை ஒரு உத்தியாகவே (ஸ்ட்ராடஜி) வைத்திருக்கிறார்.
சர்க்கார் முடித்த ஏ.ஆர். முருகதாஸ் உடன் தர்பார், பீஸ்ட் முடிந்த நெல்சன் உடன் ஜெயிலர், லியோ முடிந்த லோகேஷ் கனகராஜ் உடன் கூலி எனத் தொடர்ந்து பாலோ பண்ணி வருகிறார். இந்த ட்ரெண்ட் டைப் பார்த்தால், தலைவர் 173 படத்துக்காக ரஜினி மீண்டும் விஜய் பட இயக்குநர்களைத் டார்கெட் செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறதாம்! இதில் வெங்கட் பிரபு மற்றும் எச். வினோத் ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்வு செய்யச் சந்தர்ப்பம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
வெங்கட் பிரபுவுக்கு கூடுதல் வாய்ப்பு
வெங்கட் பிரபு ஏற்கனவே அஜித், விஜய் என இருவரையும் இயக்கியவர். அவருக்கும் தலைவர் 173 வாய்ப்பு அதிகம் இருக்கிறதாம். அவர் மங்காத்தா போன்ற தரமானப் படங்களை வழங்கியவர். கோட் படத்திலும் தன் பாணியை விட்டுவிடவில்லை. ரஜினிக்கு வாய்ப்பு கிடைத்தால், தனது பாணியில் கொஞ்சம் ஜாலியாகவும், அதே நேரம் ஸ்டைலாகவும் மாஸ்+கிளாஸ் ஆகவும் கொடுக்கக்கூடியவர்.
சிவகார்த்திகேயன் சம்மதம்
வெங்கட் பிரபு இப்போ சிவகார்த்திகேயன் பட வேலைகளில் இருந்தாலும், ரஜினி அழைத்தால் சிவகார்த்திகேயனே அவரை இந்தப் படத்துக்கு அனுப்பி வைப்பார். ரஜினியின் படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபுவுடன் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைவது, சிவகார்த்திகேயனுக்கேப் பெரிய பலமாக அமையும் என்று கூறப்படுகிறது.
எச். வினோத் ரேஸில்
அடுத்து பட்டியலில் இருப்பவர் எச். வினோத். இவரும் ரஜினியை ஹேண்டில் பண்ணக்கூடியத் தரமான இயக்குநர் தான். தரமான படங்களை இயக்கிய பின்னர், அஜித்தை வைத்து 3 படங்களை இயக்கினார். கடைசியாக, துணிவு படத்தில் அஜித்தைச் செம ஸ்டைலாகவும் மாஸாகவும் காட்டினார். இப்போ ஜனநாயகன் மூலம் விஜய்யை இயக்கி இருக்கிறார். அது பகவந்த் கேசரி ரீமேக் என்று சொல்லப்பட்டாலும், அதில் தன்னுடைய முத்திரையைக் கண்டிப்பாக வைத்திருப்பார் என்று நம்பலாம். ரஜினி, வினோத்துடன் இணைந்தால், அது கண்டிப்பாக ஒரு நல்ல கதை + மாஸ் படமாக அமையும்னு எதிர்பார்க்கலாம். ஜனநாயகன் படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டதால், வினோத்தை அழைத்தாலும் உடனே களத்தில் இறங்க வாய்ப்பு உண்டு.
சுந்தர். சி விலகிய இந்த அரிய வாய்ப்பை யார் தட்டித்தூக்குகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications