ஆசைப்பட்டு நடிக்கவிருந்த ரஜினிகாந்த்துக்கு நோ சொன்ன நடிகை? அட, ஸ்பாட்டில் ரெடியான படையப்பா கிளைமேக்ஸ்
சென்னை: கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மறைந்த நடிகை சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்த படம் படையப்பா.. இது கடந்த 1999ல் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது.. இப்போது அந்த படம் 25 வருடங்கள் கழித்து ரஜினிகாந்தின் பிறந்தநாளில் ரீ ரிலீஸாகவிருக்கிறது. இந்த படம் குறித்து பிரபலங்கள் பலர் தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில், சினிமா விமர்சகர் திண்டுக்கல் வெங்கடேசன் பேட்டி ஒன்றில் படையப்பா குறித்து பேசியிருக்கிறார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சினிமா விமர்சகர் திண்டுக்கல் வெங்கடேசன், 1999-ல் வெளியான படம் படையப்பா குறித்து பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார்.

ரஜினிகாந்த் சினிமா துறையில் நுழைந்து 25 வருடங்கள் ஆகியிருந்த நிலையில், அந்த நேரத்தில் மறக்க முடியாத ஒரு படத்தை கொடுக்க விரும்பினார்.. அந்தவகையில், பொன்னியின் செல்வன் நாவல் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும்.. அதிலும் அந்த நாவலில் வரும் நந்தினி கதாபாத்திரம் மிகவும் அவருக்கு பிடித்திருந்தது.. எனவே இதனை படமாக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக ரஜினிக்கு இருந்தது.
நந்தினி கேரக்டர்
அதேபோல கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா ஆட்சி காலத்தில், ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களையும் ரஜினிகாந்த் எதிர்கொண்டார்.. பிறகு 1996-ல் வாய்ஸ் தந்து, திமுக ஆட்சிக்கு வந்தது..
இதையடுத்து, நந்தினி கேரக்டரின் சாயலில் நீலாம்பரி கேரக்டர் உருவாக்கப்பட்டது.. இது ரஜினியின் சொந்த ஸ்கிரிப்ட் ஆகும்.. இதில் எந்தவிதமான பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக, ரஜினிகாந்த் தனது சொந்த நிறுவனமான ஞ7அருணாச்சல கிரியேஷன்ஸ்' மூலம் இந்த படத்தை தயாரித்தார்.. இதற்கு முன்பு, ரஜினிகாந்துடன் 'முத்து' படத்தில் இணக்கமான அணுகுமுறை இருந்ததால், படையப்பா படத்துக்கும் கே.எஸ். ரவிகுமார் இயக்குனர் ஆனார்.
பவர்ஃபுல் நீலாம்பரி
ஸ்கிரீன்பிளே அமைக்கும்போது நீலாம்பரி கேரக்டர் ரஜினியின் கேரக்டரை விட பவர்புல்லாக மாறியது.. உடனே கேஎஸ் ரவிக்குமார், இதென்ன நீலாம்பரி கேரக்டர், உங்கள் கேரக்டரை விட வேற லெவலில் உள்ளதே என்றாராம்.
அதற்கு ரஜினி, "இதுதான் எனக்கு வேண்டும்.. ரஜினிகாந்த் என்பதை மனதிலிருந்து அழித்துவிடுங்கள், வெறும் கேரக்டரை மட்டும் பாருங்கள்" என்றாராம். ஆனாலும், கே.எஸ். ரவிக்குமார் எழுதியிருந்த கிளைமாக்ஸ் ரஜினிக்கு திருப்தி தரவில்லையாம். அதனால் ரஜினியே ஒரு மாறுபட்ட கிளைமாக்ஸை ஸ்பாட்டில் எழுதினார்...
அந்த கிளைமேக்ஸ் என்னவென்று, அப்போது யாருக்குமே தெரியாது.. ஷூட்டிங்கில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், கேஎஸ் ரவிக்குமார் மூவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது,..
ரஜினி நடிக்க ஆசைப்பட்ட 2 நடிகைகள்
ரஜினிகாந்த் 2 நடிகைகளுடன் சேர்ந்து இந்த படையப்பா படத்தில் நடிக்க ஆசைப்பட்டார்.. நீலாம்பரி கேரக்டரில், ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க ஆசைப்பட்டார் ரஜினிகாந்த். ஆனால் அவருக்கு விருப்பமில்லாததால், ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமானார்..
அதேபோல லட்சுமி மேடத்துடன் நடிக்க ஆசைப்பட்டார்.. ஏற்கனவே பொல்லாதவன் படத்தில் நடித்திருந்தபோதே அவரது திறமையை நேரில் பார்த்தவர் ரஜினி.. ஆனால் அந்த படத்தில் ஜோடியாக நடிக்கவில்லை.. இதற்கு பிறகு நெற்றிக்கண் படத்தில் லட்சுமியுடன் ஜோடியாக நடித்திருந்தார்..
சொதப்பினாலும்...
எப்போதுமே லட்சுமியுடன் நடிக்க வேண்டும் என்றாலே ரஜினி டென்ஷன் ஆகிவிடுவாராம்.. காரணம், கடினமான பாத்திரத்தையும் அசால்ட்டாக நடித்துவிடுவாராம்.
அந்தவகையில் படையப்பா படத்திலும், ரஜினியின் அம்மாவாக நடிகை லட்சுமி நடிக்க முடிவானது.. அப்போதே லட்சுமியிடம் சொன்னாராம் ரஜினி, "மேடம் நான் ஏதாவது சீனில் சொதப்பினாலும் அட்ஜெஸ்ட் செய்துக்கங்க" என்றாராம்.. நீங்கள் சூப்பர் ஸ்டார், உங்கள் நடிப்புக்கென்ன? என்றாராம் லட்சுமி" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications