Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பராசக்தி தந்த அரசியல் ஆட்டம் ஹைப்.. அசத்தும் அதர்வா, ஜெயம் ரவி.. 1965 கற்பகம் போஸ்டரை கவனிச்சீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் படம் டிரெயிலரை பார்த்தால் மாஸாக உள்ளது.. ஆனால் இது ஏற்கனவே வந்த படம் போல உள்ளதே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. எனினும் ரசிகர்களுக்கு பிடிக்கும்.. ஆனால் பராசக்தி டிரெயிலரை பார்த்தாலே, இது எப்போது வரும் ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து கூறியிருக்கிறார்.

Fine Time Cine என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, சிவகார்த்திகேயன் பராசக்தி ஆடியோ வெளியீட்டு விழாவில் இது "அண்ணன் தம்பி பொங்கல்" என்று பேசியிருக்கிறார்... இந்த பொங்கல் ஒரு "அரசியல் ஆட்டமாக" இருக்கும்.. விஜய் தன்னுடைய 'ஜனநாயகன்' படத்தில் திமுகவை எதிர்த்து அரசியல் செய்துள்ளார். பக்கா அரசியல் படமாக உள்ளது.

Parasakthi Atharvaa Jayam Ravi Karpagam Poster

பராசக்தி டிரெய்லர் பாராட்டு:

அதேபோல மறுபுறம் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படம் 1965-ல் நடந்த உண்மைச் சம்பவமான "இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை" மையமாகக் கொண்டது. அந்த காலக்கட்டத்தில் திமுக முக்கிய பங்கு வகித்ததால், இதுவும் ஒரு அரசியலை பேசும் படமே.. அதனால் இந்த பொங்கலுக்கு அரசியல் ஆட்டமாகவே இருக்க போகிறது.

சன் டிவியில் 'பராசக்தி' ஆடியோ வெளியீடும், ஜீ தமிழில் 'ஜனநாயகன்' ஆடியோ வெளியீடும் ஒளிபரப்பானது.. இதில் ஜனநாயகன் நிகழ்ச்சியைத்தான் அதிக மக்கள் பார்த்துள்ளனர். அன்றைய TRP யில் ஜீ தமிழ் முதலிடத்தில் உள்ளது... சிவகார்த்திகேயன் மேடையில் "நாங்கள் அண்ணன் தம்பி தான்" என்று பேசிய காட்சிகளை சன் டிவி ஒளிபரப்பவில்லை, அவற்றை கட் பண்ணிட்டாங்க... இதிலிருந்தே அங்கு ஒரு அரசியல் இருப்பது தெரிகிறது என்கிறார்.

நெருப்பு பரவட்டும்

பராசக்தி' டிரெய்லர் மிகவும் வித்தியாசமாகவும் நேர்த்தியாகவும் உள்ளது. இதைப் பார்த்துவிட்டு யாரும் குறை சொல்ல முடியாது, அந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்துள்ளார்கள். படமும் நன்றாக வந்திருப்பதாக சொல்கிறார்கள்,., 'அமரன்' படம் சிவகார்த்திகேயனுக்கு எப்படி ஒரு மைல்கல்லாக அமைந்ததோ, அதேபோல 'பராசக்தி'யும் அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும்.

இது வெறும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் கிடையாது,... "ஹிந்தி திணிப்பை" எதிர்க்கும் போராட்டம் என்பதைப் படக்குழுவினர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். 1965-67 காலக்கட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை இந்த படம் பிரதிபலிக்கிறது.

டிரெய்லரில் அதர்வா பேசும் "நெருப்பு பரவட்டும்" என்ற வசனம், அன்னைக்கு மாணவர்களிடையே எழுந்த எழுச்சியையும் போராட்டத்தையும் சரியாக காட்டுகிறது. அன்று அப்படித்தான் எழுச்சி நடந்தது,..

சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம்

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு மத்திய அரசின் ரயில்வே ஊழியராக நடித்துள்ளார். டிரெய்லரில் வரும் ஒரு காட்சியில், "மதராசி நீ ஹிந்தியில பேசு" என்று ஒருவர் சொல்லும்போது, "நாங்க டெல்லிக்கு வரும்போது ஹிந்தியில பேசுறோம், இப்ப நீங்க மதுரைக்கு வந்துருக்கீங்க, நீங்க தமிழ்ல பேசுங்க" என்று சிவகார்த்திகேயன் பதிலடி கொடுக்கும் வசனம் மொழிப்போராட்டத்தையே மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதுபோக அதர்வா, சிவகார்த்திகேயன் இருவரும் அண்ணன்-தம்பி பாசப்பிணைப்பும் இந்த படத்தில் உள்ளது..

மிரட்டும் கேரக்டரில் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக வில்லன் கேரக்டரில் மிரட்டியிருக்கிறார். இதுவரை அவரை மிகவும் மென்மையான கதாபாத்திரங்களில் பார்த்த நமக்கு, இது மிகவும் வித்தியாசமான மற்றும் அட்டகாசமான நடிப்பாக இருக்கும்.

தெலுங்கில் பிரபலமான ஸ்ரீலீலாவுக்கு இதுவே முதல் நேரடித் தமிழ் படம். அவர் வட இந்தியாவிலிருந்து வந்த பெண்ணாக நடித்துள்ளார். அவரிடம் சிவகார்த்திகேயன் ஹிந்தி கற்றுக்கொள்ளப் போவது போன்றும், அவர்களுக்குள் மலரும் காதல் போன்றும் கதை நகர்கிறது.

கற்பகம் படம் போஸ்டர்கள்

படத்தின் கலர் டோன் மற்றும் 1965 காலக்கட்டத்தைக் காட்டும் விதம் மிகவும் எக்ஸ்ட்ரா-ஆர்டினரியாக உள்ளது. 1963-ல் வெளியான 'கற்பகம்' பட போஸ்டர்கள் சுவர்களில் ஒட்டப்பட்டிருப்பது வரை மிகவும் நுணுக்கமாக கவனித்து ஷூட் செய்திருக்கிறார்கள்.. அந்த காலத்து ரயில்கள், பஸ்கள், காஸ்ட்யூம்கள், வீடுகள் என அனைத்தையும் தத்ரூபமாகத் திரையில் கொண்டு வந்துள்ளனர். ஆர்ட் டைரக்டரின் பணி அபாரமாக உள்ளது...

தேவையற்ற சத்தங்கள் இல்லாமல், மெல்லிய இசையாகவும் அதே சமயம் போராட்டக் களத்திற்குத் தேவையான வீரியத்துடனும் இசையமைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். மியூசிக் ஆல்பமாக இல்லாமல் படத்தின் உணர்வை பிரதிபலிப்பதாக இசை அமைந்துள்ளது.

ஜனநாயகன் படம் டிரெயிலரை பார்த்தால் மாஸாக உள்ளது.. ஆனால் இது ஏற்கனவே வந்த படம் போல உள்ளதே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. எனினும் ரசிகர்களுக்கு பிடிக்கும்.. ஆனால் பராசக்தி டிரெயிலரை பார்த்தாலே, இது எப்போது வரும் ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+