அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா?
சென்னை: நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள "TN 2026" படம், ரிலீஸ்க்கு முன்பே பெரிய பரபரப்பை கிளப்பி விட்டது. உமாபதி ராமையா இயக்கிய இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே நேற்று மாலை வெளியான ட்ரெய்லர் தான் இப்போது சோசியல் மீடியாவை முழுக்க ஆக்கிரமித்திருக்கிறது.

ட்ரெய்லர் வந்ததும் கிளம்பிய கலக்கம்
ட்ரெய்லர் ஆரம்பிக்கும்போதே, நட்டிக்கு வைக்கப்பட்ட பிரமாண்ட கட்அவுட்டுக்கு ரசிகர்கள் மாலை அணிவித்து பால் அபிஷேகம் செய்வது போல காட்சிகள் வருகிறது. அதிலேயே "தங்க நட்சத்திரம்" என்ற பெயரில் ஒரு பெரிய நடிகர் அரசியலுக்கு வருகிறார் என்று அறிவிக்கப்படுகிறது. இதைப் பார்த்தவுடன் பலருக்கும் நடிகர் விஜய் நினைவுக்கு வந்துவிட்டது.
அதற்குப் பிறகு வரும் வசனங்கள் தான் இன்னும் தீயில் எண்ணெய் ஊற்றிய மாதிரி இருந்தது. "இப்போ வரை உங்களை தவிர்த்து சினிமா நியூஸ் இல்லை... இனிமேல் உங்களை தவிர்த்து அரசியல் நியூஸும் இல்லை" என்று தம்பி ராமையா பேசும் காட்சி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கேரக்டர்களின் ஒற்றுமை
எம்.எஸ். பாஸ்கர் வரும் கேரக்டர், பலருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நினைவூட்டுகிறது என்று பேசப்படுகிறது. அதேபோல ரெடின் கிங்ஸ்லி பேசும் அரசியல் வசனங்கள், நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமானை ஒத்திருக்கிறது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.
தம்பி ராமையா வரும் கேரக்டர், விஜய்யின் நம்பிக்கை நட்சத்திரமான புஸ்ஸி ஆனந்த் போல அமைந்துள்ளது. அதுவும் நிஜ அரசியல் சூழலை பிரதிபலிப்பது போலவே தெரிகிறது.
சர்ச்சையை கிளப்பிய காட்சிகள்
ட்ரெய்லரில் நட்டி ஒரு பெண்ணுடன் கடற்கரையில் நடந்து செல்லும் காட்சியும், நீச்சல் குளத்தில் இருக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இதுதான் தற்போது அதிகமாக பேசப்படும் விஷயமாகி இருக்கிறது.
"கூத்தாட வந்தவனை எல்லாம் தலைவனாக்கி தலைமேல் வைத்து கொண்டாடுகிறீர்கள்" என்ற வசனமும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இது நேரடியாக அரசியல் நடிகர்களை குறிவைத்து சொல்வது போல இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யை நினைவூட்டும் லுக்
ட்ரெய்லரில் நட்டி நரைத்த தாடி, ஹேர் ஸ்டைல், கை வளையம், உடை-எல்லாமே விஜய்யை நினைவூட்டும் விதமாக உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதோடு அவருக்காக வைக்கப்பட்ட கட்அவுட்டும் "புலி" படத்தில் விஜய்க்கு வைக்கப்பட்ட கட்அவுட் மாதிரியே இருப்பதாகவும் பேசப்படுகிறது.
மேலும், "எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆனார்... எங்க தங்க தலைவன் அதே மாஸாக இருக்கிறார்" என்ற வசனம், விஜய்யின் அரசியல் ஆசையை சுட்டிக்காட்டுவது போலவே இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகிறது.
போஸ்டர்கள் கூட பேசுது
ட்ரெய்லரில் காட்டப்பட்ட போஸ்டர்களும் கவனத்தை ஈர்த்திருக்கிறது: "Time to Lead", "சாதி மதம் இல்லையடி பாப்பா... எங்க படத்துக்கு தேதிய தாப்பா", "சினிமாவுக்கு அரசியல் எதற்கு?" இந்த வாசகங்கள் அனைத்தும் நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்தையும், அவரது பட ரிலீஸ் பிரச்சனைகளையும் கலாய்க்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.
படம் பற்றிய தகவல்கள்
இந்த படம் அரசியல் பின்னணியில் காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ளது. நட்டி நட்ராஜுடன், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, இளவரசு, சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாண்டி மாஸ்டர் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்த படத்தை கண்ணன் ரவி குழு மற்றும் கந்தாரா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் வந்த ட்ரெய்லர்
தமிழகத்தில் தேர்தல் சூடு அதிகமாக இருக்கும் நேரத்தில் இந்த ட்ரெய்லர் வெளியானது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. இதனால் சிலர் "இந்த படம் ஒரு அரசியல் விமர்சன படம்" என்று கூற, மற்றவர்கள் "இது விஜய்யை குறிவைத்து எடுக்கப்பட்ட படம்" என்றும் விமர்சித்து வருகின்றனர்.
சில தளபதி ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இப்படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்றும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், "இதைக் கண்டிப்பாக பார்க்கணும்" என்று ஆர்வமாக காத்திருக்கும் ரசிகர்களும் அதிகம்.
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
காலம் எவ்ளோ வேகமாக சுத்துது! அன்று கடம்பூர் ராஜூவுக்காக விஜய் காத்திருந்தார்! இன்று அப்படியே உல்டா! -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்!












Click it and Unblock the Notifications