ரூ. 90 ல் உருவான விஜயகாந்த் பட கிளைமேக்ஸ்.. மை டியர் குட்டிச்சாத்தான் சக்சஸ்.. நம்ப முடியாத உண்மை
சென்னை: திரைப்பட இயக்குநர், திரையரங்க உரிமையாளர், திரைப்பட விநியோகஸ்தர், திரைப்பட தயாரிப்பாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளுக்கு உரியவர் கேயார்.. சினிமா விஷயங்களை கரைத்து குடித்தவரும்கூட. இவர் தன்னுடைய பேட்டி ஒன்றில், திரைப்பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இணையத்தில் இந்த பேட்டிதான் வைரலாகி கொண்டிருக்கிறது.
மூத்த பத்திரிகையாளரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனின் Touring Talkies என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள கேயார், "திரைப்பட கல்லூரியில் 'பிராசஸிங்' பிரிவில் படித்தாலும், இயக்குநராவதுதான் என்னுடைய இலக்காக இருந்தது.. கிடைத்த வாய்ப்புகளை வைத்து படிப்படியாக, விநியோகம், தியேட்டர் உரிமையாளர், தயாரிப்பாளர், அதற்குபிறகு டைரக்ஷன் என்று இறங்கினேன்.

மை டியர் குட்டிச்சாத்தான்
கமலின் ராம் லட்சுமணன், ரஜினியின் பில்லா உட்பட பல படங்களில் விநியோகஸ்தர் பணியில் இருந்தேன்.. மை டியர் குட்டிச்சாத்தான் (3D) படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை பெற்று 1984-ல் ரிலீஸ் செய்தேன்.
அந்த படம் அசாதாரணமான வெற்றியை பெற்றது. இது எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த படமாக அமைந்ததுடன், கிட்டத்தட்ட ஒன்றரை முதல் 2 வருடங்கள் வரை ஓடியது. அன்றைய காலகட்டத்தில் ரஜினிகாந்தின் படத்துக்கு என்ன விலையோ, அதைவிட அதிகமான விலைக்கு அதன் விநியோக உரிமையை பெற்றேன்..
அதாவது ரஜினி படத்துக்கு மொத்த தமிழ்நாடு விற்பனையே ரூ.36 லட்சம் இருந்தபோது, நான் ரூ.40 லட்சத்திற்கு மை டியர் குட்டிச்சாத்தான் வாங்கினேன்..
அதில் கண்ணாடி மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் மட்டுமே முதலீட்டை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாகவே இருந்தது. நூறு நாட்கள் ஓடினால்கூட, ஒரு தியேட்டருக்கு 40 லட்சம் ரூபாய் வந்துவிடும் என்று உறுதியாக நம்பினேன்..
வனஜா கிரிஜா ஊர்வதி
சென்னையில் சத்யம் தியேட்டரில் அப்போது தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது.. ஆனால் அந்த நேரத்தில் சத்யம் தியேட்டர் மோசமாக இருந்தது.. வவ்வால் ஓடும் அந்த தியேட்டரில்.. எனவே லீசுக்கு தியேட்டரை எடுத்து, தொழில் நுட்ப மாற்றங்களை செய்து அந்த படத்தை வெளியிட்டேன்.. கடைசியில் மை டியர் குட்டிச்சாத்தான் படம் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஓடியது..
வனஜா கிரிஜா படத்தில் நடிகை ஊர்வசியின் வித்தியாசமான குரல் வித்தியாசமாக இருக்கும். இதற்கு காரணம், அந்த நேரத்தில் அவருக்கு தொண்டையில் இன்பெக்ஷன் ஆகிவிட்டது.. அதனால் பேச முடியாமல் சிரமப்பட்டார்.. இருந்தாலும் அந்த குரலிலேயே பேசியிருந்தார்.. அதுதான் அவருக்கு பலமாக மாற்றியது..
விஜயகாந்தின் ரூ. 90 கிளைமேக்ஸ்
விஜயகாந்த்தின் அலெக்சாண்டர் படம் அவரது படங்களிலேயே வித்தியாசமாக இருக்கும்.. அது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராக, அமைந்தது.. பஞ்சு அருணாசலம்தான் அப்படத்தின் தயாரிப்பாளர்.. 4 லைனில் கதையை சொன்னார்.. அதனால்தான், அந்த படத்தை திரில்லிங் கதையாக செய்ய முடிந்தது.. குறைவான ஃபுட்டேஜில், வீணடிப்பு இல்லாமல் படத்தை இயக்கினேன்..
படத்தின் கிளைமாக்ஸ்கூட குறைந்த செலவில் எடுக்கப்பட்டது.. காரணம், படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்ற சந்தேகம் இருந்ததால், கிளைமேக்ஸ் சீன்களை பெரிதாக எடுக்க முடியவில்லை.
அந்த நேரத்தில், கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்த போது, ஒரு திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடந்த நிகழ்வின் ஃபிலிம் டிவிஷன் புட்டேஜ்ஜை பயன்படுத்தினேன்..
அந்த ஃபுட்டேஜை எடுத்து, சினிமாஸ்கோப் வடிவத்திற்கு மாற்றி, ஸ்டெப் ஃப்ரீஸ் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தினேன்.. இந்த சின்ன பிட்டை கிளைமேக்ஸில் சேர்த்தபோது, அந்த காட்சிக்கு தியேட்டரில் அப்ளாஸ் விழுந்தது.. அந்த பிட்டை வாங்குவதற்கு ஆன செலவு வெறும் 96 ரூபாய் மட்டுமே" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications