Va Vaathiyaar Twitter Review: பாராட்டு வாங்கும் வா வாத்தியார்! லாஜிக் இல்லா கார்த்தியின் மேஜிக்.. ரிவ்யூ இதோ
சென்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படம், பல தடைகளை தாண்டி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வெளியாக வேண்டிய இந்தபடம், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை சுற்றிய பிரச்சினைகள் காரணமாக தள்ளிப் போக, தற்போது அந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டு ரசிகர்களின் முன்னே வந்துள்ளது.
இந்த ஆண்டு பொங்கலுக்கு எதிர்பார்க்கப்பட்ட ஜன நாயகன் திரைப்படம் வெளியாகாததால், ரிலீஸ் தேதிக்காக காத்திருந்த சில படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் முக்கியமாக இடம்பிடித்துள்ளது வா வாத்தியார்.

ஒருபக்கம் பராசக்தி படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தாலும், அது ரசிகர்களுக்கான கொண்டாட்டத் திரைப்படமாக அமையவில்லை என்ற கருத்துகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் - எண்டர்டெயின்மெண்ட் அனுபவத்தை வா வாத்தியார் கொடுக்குமா என்பதே முக்கியமான கேள்வியாக இருந்தது. இந்த படத்தை பார்த்த ரசிகர்களின் ட்விட்டர் ரிவ்யூ பற்றி விரிவா பார்க்கலாம்.
வா வாத்தியார் கதை
வா வாத்தியார் ஒரு வழக்கமான ஹீரோ கதையாக தொடங்கினாலும், அது மெதுவாக ஒரு ஃபேண்டஸி + ஆல்டர் ஈகோ கான்செப்ட் நோக்கி நகர்கிறது என ரசிகர்கள் கூறுகிறார்கள். ஆரம்பத்தில் டெம்ப்ளேட் சினிமா போல் தோன்றினாலும், கதைக்குள் செல்லச் செல்ல அது வேறு பாதையை எடுப்பதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் வரும் ஃப்ளாஷ்பேக் பகுதி அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக பலர் குறிப்பிட்டுள்ளனர். அந்த ஃப்ளாஷ்பேக் தான் கதையோடு ரசிகர்களை இணைக்கும் முக்கிய புள்ளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இடைவேளை காட்சியில் வரும் கார்த்தியின் மாஸ் என்ட்ரி தியேட்டரில் விசில்களை அள்ளுவதாகவும், முதல் பாதி முழுக்க ரசிகர்களை கட்டிப்போடுவதாகவும் எக்ஸ் தள விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

கார்த்தியின் ஒன் மேன் ஷோ
ரசிகர்களின் பெரும்பாலான கருத்துகளின் மையத்தில் இருப்பது கார்த்தியின் நடிப்பு.
"வா வாத்தியார் கார்த்தியின் ஒன் மேன் ஷோ" என பலரும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இரண்டாம் பாதியில் வாத்தியாராக அவர் வரும் டிரான்ஸ்பர்மேஷன், மேனரிசங்கள், உடல் மொழி ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
எம்ஜிஆர் அம்சம் படத்தில் முக்கியமான இடம் பிடித்துள்ளதாகவும், அந்த பகுதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருப்பதாகவும் சிலர் கூறுகிறார்கள். இதனால், புரட்சித் தலைவர் ரசிகர்கள் இந்த படத்தை ரசிப்பார்கள் என்றும் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

வா வாத்தியார் குறைகள்
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை பலரால் பாராட்டப்பட்டுள்ளதாலும், பாடல்கள் படத்தின் வேகத்துக்கு தடையாக இருப்பதாகவும் சில விமர்சனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. "பாடல்களை இன்னும் ட்ரிம் பண்ணியிருக்கலாம்" என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
வில்லன் கதாபாத்திரம் இன்னும் அழுத்தமாக எழுதப்பட்டிருக்கலாம் என்ற குறையும் முன்வைக்கப்படுகிறது. சிலர் இதை ஒரு லாஜிக் இல்லா மேஜிக் திரைப்படம் என்றும், பழைய கருத்துகளை புதிய வடிவில் சொல்ல முயன்றுள்ளதாகவும் விமர்சிக்கிறார்கள்.
அதே நேரத்தில், இது ஒரு வழக்கமான நலன் குமாரசாமி படம் போல் இல்லாமல், முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருப்பதாகவும் பலர் கூறுகிறார்கள்.

ரசிகர்களின் மொத்த தீர்ப்பு
வா வாத்தியார் திரைப்படம் அனைவருக்கும் ஒரே மாதிரியான அனுபவத்தை கொடுக்கவில்லை என்றாலும், கார்த்தியின் நடிப்பு, முதல் பாதியின் வேகம், ஃபேண்டஸி கலந்த கான்செப்ட் ஆகியவை ரசிகர்களை தியேட்டரில் கட்டி வைக்கும் அம்சங்களாக இருக்கின்றன.
பொங்கல் விடுமுறையில் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று ஒரு வித்தியாசமான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் பெற விரும்புவோருக்கு வா வாத்தியார் ஒரு முயற்சி செய்யக்கூடிய படமாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications