Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்போ எம்ஜிஆர் இருந்திருந்தா சவுக்கடி தான்.. என்ன தைரியம்? வா வாத்தியார் படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் ரிலீஸ் பட்டியலில் ஜனவரி 14ஆம் தேதி மெதுவாக, ஆனால் சத்தமில்லாமல் திரையரங்குகளை அடைந்த படம் தான் 'வா வாத்தியார்'. கார்த்தி ஹீரோ, நலன் குமாரசாமி இயக்கம், சந்தோஷ் நாராயணன் இசை, ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு என்றதும் "இது சும்மா படம் இல்ல... ஏதோ பெரிய கிளாஸ் இருக்கும்" என ரசிகர்கள் நினைத்தது இயல்பே. ஆனால் கிளாஸ் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே, "வாத்தியார் எங்க போயிட்டார்?" என்ற கேள்வி தான் அதிகமாக எழுந்தது.

இந்த படம் திரைக்கு வந்த பயணம் itself ஒரு சீரியல். கடந்த வருடமே ரிலீஸ் ஆக வேண்டிய படம், எப்போது பார்த்தாலும் 'போஸ்ட் போன்' எனும் டயலாக் மட்டுமே கேட்டுக்கொண்டே இருந்தது. பைனான்ஸ் பிரச்சினை, கோர்ட் கேஸ், தயாரிப்பு குழப்பம் என 'வா வாத்தியார்' பெட்டிக்குள் அடைக்கப்பட்டு டிடென்ஷனில் இருந்தது. ஒருபக்கம் வழக்கு ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் "எப்படியாவது இந்த படத்தை வெளியே விட்டே ஆகணும்" என்ற பரிதாப முயற்சி நடந்துகொண்டே இருந்தது.

Vaa Vaathiyaar box office Karthi

இந்த நிலையில் விஜய் நடித்த ஜனநாயகன் படம் பொங்கல் ரேஸிலிருந்து வெளியேறியதே 'வா வாத்தியார்'க்கு வந்த தேவ தூதன் போல அமைந்தது. ஜனநாயகன் வந்திருந்தால், இந்த படமும் இன்னும் "அடுத்த வருடம் பார்க்கலாம்" லிஸ்டில்தான் இருந்திருக்கும். அந்த இடைவெளியை பிடித்து, "இப்போ இல்லனா எப்போ?" என்ற முடிவில் பொங்கலுக்கு படத்தை இறக்கிவிட்டார்கள்.

கதைன்னா... கொஞ்சம் பழசு, கொஞ்சம் குழப்பு
படத்தில் ராஜ்கிரண், எம்ஜிஆரை உயிர் மூச்சாக நேசிக்கும் ரசிகராக வருகிறார். பேரன் கார்த்தியை எம்ஜிஆர் மாதிரி ஹீரோவாக மாற்ற வேண்டும் என்பது அவரின் கனவு. ஆனால் கார்த்திக்கோ ஹீரோ ஆகணும் என்ற ஆசையே இல்லை. மாறாக, "ஹீரோவெல்லாம் போங்க... வில்லனே போதும்" என்ற மனநிலை. எம்ஜிஆர் மீது வெறுப்பு, நம்பியார் மீது ஈர்ப்பு. ஹீரோயிசம் குறைந்து, வில்லன் குணங்கள் அதிகரிக்க, "இதுக்குத்தான் நான் ஆசைப்பட்டேனா?" என்ற நிலைக்கு ராஜ்கிரண் வருகிறார். அதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை... அதைவிட "இதெல்லாம் எதுக்கு?" என்பதே ரசிகர்களின் கேள்வி.

நலன் ஸ்டைல் காணாமல் போன மர்மம்

நலன் குமாரசாமி என்றாலே டார்க் காமெடி, கூர்மையான நையாண்டி, புத்திசாலித்தனமான எழுத்து. ஆனால் இந்த படத்தில் அந்த நலனை காண ரசிகர்கள் பெரிதும் கஷ்டப்பட்டார்கள். "இது நலன் படமா, இல்ல நலன் பெயர் மட்டும் போட்ட படமா?" என்று பலர் கேட்கும் நிலை. காமெடி வர வேண்டிய இடத்தில் அமைதி, ட்விஸ்ட் வர வேண்டிய இடத்தில் டயலாக், எங்கும் ஒரு மிஸ்ஸிங் ஃபீல்.

கார்த்தி வழக்கம்போல் உழைத்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் அந்த உழைப்பே "பாஸ்... போதும்" என்ற நிலைக்கு ரசிகர்களை கொண்டு சென்றுவிடுகிறது. கீர்த்தி ஷெட்டிக்கு கதையில் பெருசா வேலை இல்லை. ராஜ்கிரண் கதாபாத்திரம் வலுவாக ஆரம்பித்து, பின்னர் மெதுவாக காணாமல் போய்விடுகிறது. சந்தோஷ் நாராயணன் இசை சில காட்சிகளை காப்பாற்ற முயற்சிக்கிறது, ஆனால் முழு படத்தையும் தூக்க முடியவில்லை.

ப்ளூ சட்டை மாறன் கலாய்

இந்த எல்லாவற்றுக்கும் மேலாக, திரை விமர்சகர் புளூ சட்டை மாறன் போட்ட கலாய்ப்பு பதிவு தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. "நலன் சொன்னா கேட்டிருக்கணும்" என்ற அர்த்தத்தில், எம்ஜிஆர் கார்த்தியை மிரட்டுவது போல உருவாக்கப்பட்ட மீம் சமூக வலைதளங்களில் வைரலானது. படம் பார்த்தவர்களுக்கு அது மீம் இல்லை... ஒரு ரிவ்யூ போலவே தெரிந்தது என்பதே உண்மை.

அந்தப் பதிவில், 'ஏன்டா உனக்கு என்ன கொழுப்பு இருந்தா என்னை மாதிரி நடிச்சு.. அந்த படத்தை பிளாப் வேற பண்ணுவ?'

' நீங்க எம்ஜிஆர் மாதிரி தகதகன்னு மின்னுறீங்கன்னு அந்த நலன் குமாரசாமி பயந்தாங்க என்னை கோர்த்து விட்டான்'

' அவன் சொன்னா.. உனக்கு எங்கடா போச்சு அறிவு?' என்று எம்ஜிஆர் கார்த்தியை சாட்டையால் அடிப்பது போல மீம்ஸ் போட்டு இருக்கிறார். இதுதான் இப்போது சோசியல் மீடியாவில் கலாய்க்கப்பட்டு வருகிறது.

மொத்தத்தில், நீண்ட காலம் டிடென்ஷனில் இருந்த 'வா வாத்தியார்', திரைக்கு வந்ததும் "கிளாஸ் எடுப்பார்" என்ற நம்பிக்கையுடன் சென்ற மாணவர்களுக்கு, "இன்னைக்கு ஃப்ரீ பீரியட்" என்ற உணர்வையே கொடுத்திருக்கிறது. வாத்தியார் வந்தார்... ஆனால் பாடம் மட்டும் மனசில் ஏறவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+