Vaa Vaathiyar Box Office: வா வாத்தியார் 5வது நாள் வசூல் இவ்வளவு தானா? நிலைமை இப்படி மாறிடுச்சு! காரணம் இதுதானா?
சென்னை: வா வாத்தியார் படம் பற்றிய பேச்சு இப்போ கதையோ, விமர்சனமோ இல்ல... முழுக்க முழுக்க வசூல்தான். ஏனெனில் இத்தனை தடைகளை கடந்து, இத்தனை வருடங்களுக்குப் பிறகு ரிலீஸான ஒரு படத்திற்கு இப்படியான பாக்ஸ் ஆஃபீஸ் நிலவரமா என்ற ஆச்சரியம்தான் எல்லாருக்கும்.
நலன் குமாரசாமி - கார்த்தி கூட்டணி என்றதாலேயே படத்துக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்பு அதிகம். அதுவும் பொங்கல் ரிலீஸ், பெரிய திரையரங்கு வெளியீடு என எல்லாமே செட் ஆன மாதிரி தான் இருந்தது. ஆனாலும் படம் வெளியான பிறகு விமர்சனம் கடுமையாக மாறியதும், அதன் தாக்கம் நேரடியாக வசூலில் தெரிந்தது.

ரிலீஸான முதல் சில நாட்களிலேயே படம் வேகம் இழக்க ஆரம்பிச்சுடுச்சு. நான்காவது நாளில் 1.45 கோடி ரூபாய் வசூல் செய்த படம், அடுத்த நாளே பெரிய சரிவை சந்தித்தது தான் பாக்ஸ் ஆஃபிஸை கவலைப்பட வைக்கும் விஷயம். ஐந்தாவது நாளான நேற்று, இந்திய அளவில் வெறும் 46 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பொங்கல் வெளியீட்டு படத்திற்கு இது ரொம்பவே குறைவான எண்ணிக்கைன்னு தான் சொல்லணும்.
மொத்தமாக பார்த்தால், ஐந்து நாட்களில் "வா வாத்தியார்" இந்தியாவில் வசூல் செய்திருப்பது சுமார் 7.46 கோடி ரூபாய் தான். கார்த்தி மாதிரி ஒரு முன்னணி நடிகருக்கு, அதுவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த படம் என்ற நிலையில், இந்த வசூல் நிச்சயமாக திருப்தி தரக்கூடியது இல்லை.
சினிமா வட்டாரத்தில் பேசப்படுவது என்னன்னா, நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமல்ல, அதே நேரத்தில் "தலைவர் தம்பி தலைமையில்" போன்ற மற்ற பொங்கல் படங்களுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக திரும்பியதும் "வா வாத்தியார்" வசூலுக்கு பெரிய அடியாக அமைந்திருக்கிறது. தியேட்டர் எண்ணிக்கையும், ஷோக்களும் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மொத்தத்தில், பல ஆண்டுகளாக காத்திருந்த "வா வாத்தியார்" படம், பாக்ஸ் ஆஃபிஸில் அந்த காத்திருப்புக்கு ஏற்ற பலனை தரவில்லை என்பதுதான் இப்போதைய நிஜம். இனி வரும் நாட்களில் ஏதாவது பெரிய டர்ன்அரவுண்ட் நடக்குமா, இல்ல மெதுவாக திரையரங்குகளை விட்டு வெளியேறுமா என்பதுதான் அடுத்த கேள்வி. ஆனால் தற்போதைய வசூல் நிலவரம் பார்த்தால், "வா வாத்தியார்"க்கு பாக்ஸ் ஆஃபிஸில் நிலைமை ரொம்பவே கஷ்டமானதுதான்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications