Vijay Antony: விஜய் சொன்ன அந்த வார்த்தை என் வாழ்க்கையே மாத்திடுச்சு.. விஜய் ஆண்டனி உருக்கம்
சென்னை: சமீபத்தில் விஜய் ஆண்டனி கொடுத்த ஒரு பேட்டி தான் இப்ப சோஷியல் மீடியாவில் ரொம்ப வைரலா போய்க்கிட்டு இருக்கு. அதுல அவர் நடிகர் விஜய் பற்றி மனம் திறந்து பேசிய விஷயங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்துது. பொதுவா விஜய் ஆண்டனியை நாம எல்லாரும் ஒரு மியூசிக் டைரக்டராகத்தான் முதல்ல அறிமுகம். "நாக்க முக்கா", "உசுரே போகுதே", "சின்னத்தாமரை", "மச்சி ஓபன் தி பாட்டில்" மாதிரி பாடல்கள் வந்த காலத்துல, 'இந்த மியூசிக் டைரக்டர் யாரு?'ன்னு எல்லாரும் தேடி தெரிஞ்சுக்கிட்டது விஜய் ஆண்டனியைப் பற்றித்தான்.
ஆனா ஒரு வித்தியாசமான விஷயம் என்னன்னா, அவர் இசையமைத்த பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆனாலும், அந்தப் படங்கள் பெரும்பாலும் பெரிய அளவில் வெற்றி அடையல. அதனால அவருக்கு மியூசிக் டைரக்டராக கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கொஞ்சம் தாமதமா தான் கிடைச்சது. "பாடல் ஹிட்டாகுது, படம் ஓடல"ன்னு சொல்ற அந்த கட்டம் அவருக்கே ஒரு பெரிய சோர்வை கொடுத்ததாம். அந்த சமயத்துல தான் 'நாமே நடிச்சு பார்க்கலாமே'ன்னு அவர் யோசிக்க ஆரம்பிச்சார்.

அந்த திருப்புமுனை நேரத்துல தான் விஜய்யுடன் ஒரு சந்திப்பு நடந்ததாம். ஒரு படத்தோட இசை வெளியீட்டு விழாவுக்கு ஸ்பெஷல் கெஸ்ட்டா விஜய் வந்திருந்தாரு. அப்ப தான் விஜய் ஆண்டனிக்கு அவரோட பேச வாய்ப்பு கிடைச்சதாம். அப்ப விஜய், "இந்த பையன் நல்லா மியூசிக் போடுறான். நம்ம படத்துக்கு இவரையே போட்டுக்கலாம்"ன்னு வேட்டைக்காரன் படத்துக்கு விஜய் ஆண்டனியை ரெக்கமண்ட் பண்ணியிருக்கார். அது தான் விஜய் ஆண்டனிக்கு பெரிய பிரேக்.
வேட்டைக்காரன் படத்துல வந்த பாடல்கள் எல்லாமே பெரிய ஹிட். "சின்னத்தாமரை"ன்னு சொல்லும் போதே இப்பவும் நிறைய பேருக்கு அந்த மெலடி நியாபகம் வரும். அந்த பாடலை யார் பாடணும்னு தேர்வு செய்ததிலும் விஜய்யோட பங்கு இருந்ததாம். "இந்தப் பாடல் சுசித்ரா பாடினா தான் சரியா வரும். அவங்க வாய்ஸ்ல ஒரு தனி ஃபீல் இருக்கு"ன்னு விஜயே சொல்லி சுசித்ராவை பாட வைத்தாராம். இப்பவும் அந்த பாடலை கேட்டா, ஒரு விதமான வைப் வரும், அது விஜயோட சென்ஸ்னால தான் வந்தது என்று விஜய் ஆண்டனி சொல்லியிருக்கார்.
அதுக்குப் பிறகு சுக்கிரன், வேலாயுதம் மாதிரி படங்களுக்கும் விஜய் ஆண்டனிக்கு வாய்ப்பு வந்தது. அந்த கட்டத்துல தான், "நான் நடிக்கப் போகிறேன்"ன்னு ஒருவருக்கு வாக்கு கொடுத்துட்டேன். அந்த வாக்கை காப்பாத்தணும் என்பதால தான் நான் ஹீரோவா நடிக்க வந்தேன்"ன்னு அவர் வெளிப்படையா சொல்லியிருக்கார். உண்மையிலேயே விஜய் படங்கள் மாதிரி பெரிய ஹிட்கள் அவருக்கு மியூசிக் டைரக்டராக முன்பே தொடர்ந்து வந்திருந்தா, ஒருவேளை அவர் முழுக்க முழுக்க இசையமைப்பாளராகவே பயணிச்சிருப்பார். ஆனா வாழ்க்கை நடிப்புக்கும் இழுத்து வந்துடுச்சு.
விஜய் ஆண்டனியின் நடிப்பு பயணம் ஆரம்பிச்சதும், 'நான்', 'சலீம்', 'பிச்சைக்காரன்' மாதிரி படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக 'பிச்சைக்காரன்' அவரை நடிகராக மக்கள் மனசுல உறுதி பண்ணியது. ஒருபக்கம் மியூசிக், இன்னொரு பக்கம் நடிப்பு - இரண்டு ரோலையும் சமாளிச்சு வர்ற ஒரே நடிகர்-இசையமைப்பாளர் என்ற தனி இடத்தை அவர் பிடிச்சுட்டார்.
மொத்தத்துல பார்த்தா, விஜய் ஆண்டனியின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான டர்னிங் பாயிண்ட்டாக விஜய் இருந்திருக்கார். "அந்த நேரத்துல விஜய் எனக்கு கை கொடுத்திருக்கலனா, ஒருவேளை நான் இன்னும் பல வருடம் பின்னாடி தான் அந்த இடத்துக்கு வந்திருப்பேன்"ன்னு விஜயைப் பற்றி பேசும்போது ஒரு தனி மரியாதையோட, நன்றியோட பேசுறது ரசிகர்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications