அறிவுக்கொழுந்துகளே! “அதை” செய்ததே உங்க சுறாவின் மனைவிதான்.. விஜய் ரசிகைகளை வெளுத்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் கவனம் ஈர்த்து வருபவர் நடிகர் விஜய். சமீப காலமாக அவரைச் சுற்றி பல்வேறு விவாதங்களும் சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக விஜய்யின் விவாகரத்து வழக்கு பற்றி அதிகமாக பேசப்படும் நிலையில் விஜய்க்கு சப்போட்டாக சில ரசிகைகள் பேசியதை பார்த்து கடுப்பான ப்ளூ சட்டை மாறன் அவர்களை கலாய்த்து போஸ்ட் போட்டிருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தஞ்சாவூரில் விஜய் கூட்டம்
இந்நிலையில், தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் சார்பில் நடிகர் விஜய் தஞ்சாவூரில் மக்களை சந்தித்து பேசி இருந்தார். அந்த கூட்டத்திற்கு எவ்வளவு மக்கள் வருவார்கள், குறிப்பாக பெண்கள் ஆதரவு குறைந்திருக்கும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் நிகழ்ந்தது அதற்கு முற்றிலும் மாறானது. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பெண்கள் அணி அணியாக திரண்டு வந்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். பலர் வழக்கம்போல கை குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு கூட்டத்திற்கு வந்த காட்சிகள் கூட அங்கு கவனத்தை ஈர்த்தன.
சில பெண்கள் விஜயை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கூட்டம் முடிந்த பிறகும் அவர் சென்ற வாகனத்தை இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தனர். அந்த அவசரத்தில் சில இடங்களில் சிறிய விபத்துகளும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, "எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் பெண்கள் ஆதரவு விஜய்க்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது" என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
விவாகரத்து விவகாரம்
இந்த நிகழ்ச்சியுடன் இணைத்து பேசப்படும் முக்கியமான விஷயம், நடிகர் விஜய்யின் குடும்ப வாழ்க்கையைச் சுற்றியுள்ள விவாகரத்து விவகாரம் தான். விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா பல ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்தாலும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதன்பின்னர் சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக மனு தாக்கல் செய்ததாகவும் செய்திகள் பரவின.
இந்த தகவல் ஆரம்பத்தில் மிகச் சிறிய அளவில் மட்டுமே பேசப்பட்டது. ஆனால் பிப்ரவரி மாத இறுதியில் அந்த மனு குறித்த விவரங்கள் சமூக வலைதளங்களில் கசிந்த பிறகு, அது பெரிய அளவில் விவாதமாக மாறியது.
இதையடுத்து பல்வேறு யூகங்களும் வதந்திகளும் பரவத் தொடங்கின. சிலர் ஒரு நடிகை பெயரையும் இந்த விவகாரத்துடன் இணைத்து பேசத் தொடங்கினர். எந்த உறுதியான ஆதாரமும் இல்லாமல் இப்படியான தகவல்கள் பரவியதால் ரசிகர்கள் மத்தியில் கூட பெரிய விவாதம் எழுந்தது.
ரசிகைகள் பேட்டி
இந்த நிலையில் தஞ்சாவூர் கூட்டத்தில் கலந்து கொண்ட சில பெண்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, "விஜய் எங்களை கையை பிடித்து இழுத்தார், எங்க கிட்ட தப்பாக பேசினார், தப்பாக நடந்து கொண்டார் என்று எந்த நடிகையாவது நேரடியாக குற்றச்சாட்டு சொன்னார்களா?" என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது அருகில் இருந்த மற்றொரு பெண், "விஜய் மற்றும் ஒரு நடிகை பற்றி பலர் பேசுகிறார்கள். அவர்கள் ஒன்றாக ரூம் எடுத்தார்கள் என்கிறார்கள். அவர்களின் படுக்கையறைக்குள் போய் விளக்கு வைத்து பார்த்தார்களா?" என்று கேள்வி எழுப்பியதும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக உருவாக்கியது. சிலர் அந்த பெண்களின் உணர்ச்சிப் பூர்வமான ஆதரவை பாராட்டியபோதும், மற்றொரு பக்கம் இது தேவையற்ற விவாதத்தை தூண்டுவதாகவும் கூறினர்.
ப்ளூ சட்டை மாறன் பதிலடி
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது வழக்கமான கடுமையான ஸ்டைலில் அதற்கு பதிலடி கொடுத்தார்.
அவர் தனது சமூக வலைதள பதிவில், "அறிவுக்கொழுந்துகளே... விவாகரத்து வழக்கு தொடுத்ததே சுறாவின் மனைவிதான். அதில் உங்கள் தலைவரின் விஷயங்களை எல்லாம் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். அவர் அமைதியாக இருக்கிறார். ஆனால் நீங்கள் ஏன் இப்படி பேசுகிறீர்கள்?" என்று விமர்சித்தார்.
இந்த பதிவு வெளியானதும், அதற்கும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். விஜய் ரசிகர்கள் சிலர் அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். மற்றவர்கள் "ரசிகர்கள் தேவையற்ற அளவுக்கு தனிப்பட்ட விஷயங்களை விவாதிக்கக் கூடாது" என்ற கருத்தையும் முன்வைத்தனர்.
மெளனம் காக்கும் சங்கீதா
இந்த விவகாரத்தில் மிகவும் கவனத்தை ஈர்க்கும் விஷயம், விஜய்யின் மனைவி சங்கீதா இதுவரை பொதுவெளியில் எந்த கருத்தையும் வெளியிடாமல் அமைதியாக இருப்பது தான்.
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானாலும், அந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் யாரும் விவாதிக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில்தான் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
விவாகரத்து தொடர்பான விவரங்கள் சமூக வலைதளங்களில் பரவி, பலர் பலவிதமாக கருத்து கூறிக் கொண்டிருந்தாலும், சங்கீதா எந்தவிதமான பதிலும் அளிக்காமல் அமைதியாக இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அறிவுக்கொழுந்துகளே... விவாகரத்து வழக்கு தொடுத்தே சுறாவின் மனைவிதான். அதில் உங்கள் தலைவரின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றியுள்ளார்.
— Blue Sattai Maran (@tamiltalkies) March 4, 2026
அவரே அமைதியாக மிக்சர் சாப்பிடுகிறார். நீங்கள் ஏன் உளறுகிறீர்கள்? pic.twitter.com/jqiuXbK6z1
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications