விஜயின் ஜனநாயகன் Vs பராசக்தி: சிவகார்த்திகேயனின் படக்குழு பதிவால் கோபத்தில் விஜய் ரசிகர்கள்! பின்னணி
சென்னை: அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பெரிய சண்டை உறுதி! நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படமும், நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால், இப்போதே சமூக ஊடகங்களில் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்திருக்கிறது! இதற்கு காரணம், பராசக்தி படக்குழுவின் ஒரு வார்த்தை விளையாட்டுதான்!
தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்று கலக்கி கொண்டு இருக்கும் விஜய்க்கு ஜனநாயகன் திரைப்படம் இவரது சினிமா வாழ்க்கையின் கடைசிப் படம் என்று கூறப்படுவதால், இது விஜய் ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமான படமாக உள்ளது. இந்தப் படத்தை அப்டேட் பற்றி தெரிந்து கொள்வதற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர் இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதேபோல சிவகார்த்திகேயன் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கி, தொலைக்காட்சி தொகுப்பாளர், பின்னர் நகைச்சுவை நடிகர், இப்போதைய இளம் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். தனது குடும்பப் பாங்கான நகைச்சுவை மற்றும் எளியக் கதைகள் மூலம் 'மக்கள் செல்லப்பிள்ளை' என்ற பெயரைப் பெற்றவர். நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தில், "துப்பாக்கியைப் பிடிங்க சிவா" என்று விஜய் பேசிய காட்சி, சிவகார்த்திகேயன்தான் தனது சினிமா பயணத்தைத் தொடர்ந்து அடுத்த இடம் பிடிப்பார் என்பதை விஜய் சொல்லாமல் சொன்னதாக பேசப்பட்டது.
பராசக்தி படக்குழுவின் வார்த்தை
இந்த நிலையில் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் பாடலான 'தளபதி கச்சேரி' சமீபத்தில் வெளியாகி சில நாட்களில் 33 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், "இவ்வளவு விரைவாக 33 மில்லியன் பார்வையாளர்களைப் பெறுவது சாத்தியமா?" என்று சிலர் இணையத்தில் விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இந்தப் பின்னணியில் தான், பராசக்தி திரைப்படத்தின் முதல் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அது யூடியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளதாகப் படக்குழு அறிவித்தது. இந்த பதிவில் தான் பராசக்தி படக்குழு இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்தியது: ஒன்று, 'இயற்கை' (ஆர்கானிக்), மற்றொன்று 'உனக்குத் தெரிந்தால் தெரியும்' (ஐ.ஒய்.கே.ஒய்.கே). அதாவது ஆர்கானிக் முறையில் தங்களுக்கு அதிகமான வியூஸ் வந்ததாக அதில் சொல்லப்பட்டு இருக்கிறது.
விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு
தளபதி கச்சேரி பாடலின் யூடியூப் எண்ணிக்கை விமர்சனங்களைச் சந்தித்து வந்த நிலையில், பராசக்தி படக்குழு இந்த ஆர்கானிக் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது, ஜனநாயகன் பாடலின் பார்வைகள் உண்மையானதல்ல என்று கிண்டலடிப்பதாக விஜய் ரசிகர்கள் கருதிவிட்டனர். மேலும், 'உனக்குத் தெரிந்தால் தெரியும்' என்ற வார்த்தை அந்த விமர்சனத்தை மறைமுகமாகக் கேலி செய்வதாகக் கருதி, விஜய் ரசிகர்கள் மிகுந்த கோபத்துடன் சிவகார்த்திகேயனை விமர்சித்து வருகின்றனர்.
பொங்கலில் மோதல்
விஜய்யின் கடைசிப் படத்துடன் சிவகார்த்திகேயனின் படம் மோதும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்காத நிலையில், இந்தச் சமூக ஊடக மோதல் சூடுபிடித்துள்ளது. படங்கள் வெளியாக இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதே இந்தச் சலசலப்பு உருவாகி இருப்பது, பொங்கல் வெளியீட்டுச் சமயத்தில் இந்த மோதலும் பரபரப்பும் மேலும் அதிகரிக்கும் என்பதைக் காட்டுகிறது.
உண்மையில், இந்த 'ஆர்கானிக்' பதிவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; வெளியீட்டுத் தேதியையும் படத் தயாரிப்பு நிறுவனமே முடிவு செய்கிறது. ஆனாலும், இரு பெரிய ரசிகர் பட்டாளம் மத்தியில் உண்டான இந்தச் சண்டை, இப்போதைய சினிமா மோதல்களின் ஒரு புதிய துவக்கமாக உள்ளது.
-
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
மாறுவேடத்தில் நள்ளிரவு ரவுண்ட்ஸ் போகிறாரா முதல்வர் விஜய்? தவெக ஆனந்த்ஜீத் உடைத்த அதிரடி ரகசியம்! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
மகனின் 2வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. பாராட்டு குவியுது -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட்












Click it and Unblock the Notifications