ரஜினி படத்தில் நடிக்க நான் கேட்டேன்! வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்! விஜய் இப்படி சொல்லி இருக்காரே
சென்னை: நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன்பு பேசிய பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் படையப்பா படத்தில் நீங்க நடிப்பீங்களா? என்று கேட்ட கேள்விக்கு அந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பா நான் நடிப்பேன் என்று விஜய் சொல்லி இருக்கிறார். இதுதான் இப்போ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக ஒரு சில சினிமா நடிகர்களுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்த நடிகர்கள் இன்னொரு நடிகருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அதேபோல சினிமாவில் பல நடிகர்கள் ரஜினிக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் சில வருடங்களுக்கு முன்புவரைக்கும் தான் ரஜினியின் தீவிரமான ரசிகர் என்று விஜய் பல இடங்களில் சொல்லி இருக்கிறார்.

ஆனால் சில வருடங்களாகவே ரஜினி மற்றும் விஜய் இருவருக்கும் இடையே பிரச்சனை இருக்கிறது என்ற அரசல் புரசலான பேச்சுகள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. காரணம் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதிலும் விஜய் ரஜினியை தாக்குவது போல பேசிக் கொண்டிருக்கிறார். அவர் ரஜினி விஜயை தாக்குவது போல பேசிக் கொண்டிருக்கிறார். கழுகு காகம் கதை கூட இதற்கு ஒரு உதாரணம் தான். இதனால் இப்போது இவர்கள் இருவருடைய ரசிகர்களும் கருத்து மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இது ஒருபக்கம் இருக்க ரஜினி நடித்த படையப்பா படம் 25 வருடங்களுக்குப் பிறகு வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் படையப்பா படம் வந்த சமயத்தில் விஜய் ரஜினி பற்றி பேசிய பேட்டியும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த பேட்டியில் பல கல்லூரி மாணவிகள் விஜய்யிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அப்போது ஒரு மாணவி நீங்க படையப்பா படத்தில் நடித்து இருக்கீங்களா? உங்களுக்கு படையப்பா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததா? அப்படி வந்தால் நீங்கள் நடிப்பீங்களா? என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு விஜய் எனக்கு படையப்பா படத்தில் நடிக்க வாய்ப்பு வரல. நான் தான் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்று கேட்டேன். ஆனால் கண்டிப்பாக வாய்ப்பு வந்தால் நான் நடிப்பேன் என்று சொல்லி இருக்கிறார். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு ரஜினி வெளியிட்ட வீடியோவில் படையப்பா படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என்று சொல்லி இருக்கும் நிலையில் அப்போ விஜய் இரண்டாவது பாகத்தில் நடிப்பாரா? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.












Click it and Unblock the Notifications