விஜயை சுற்றும் பிரச்சனை.. பெற்றோர் பார்த்த பொண்ணை கல்யாணம் பண்ணுங்க! ரசிகர்களுக்கு கொடுத்த அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வரும் விஜய் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சர்ச்சைகளின் மையமாகி இருக்கிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியானது. அந்த மனுவில் விஜய் மீது சில குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதம் தொடங்கியது.

Vijay Sangeetha Trisha

விவாகரத்து வழக்கு

இந்த விவகாரம் இன்னும் நீதிமன்றத்தில் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கும்போது, விஜயை சுற்றி இன்னொரு விஷயம் அதிகமாக பேசப்பட்டது. அதாவது சமீபத்தில் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு அவர் நடிகை த்ரிஷா உடன் ஒரே காரில் வந்ததாகவும், இருவரும் ஒன்றாகவே மணமக்களை சந்தித்து வாழ்த்தியதாகவும் கூறப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் வீடியோ வெளியானதும் அது இணையத்தில் வேகமாக வைரலானது.

விஜய் திரிஷா ஜோடி

விஜய் - திரிஷா ஜோடி தமிழ் சினிமாவில் ஏற்கனவே ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது. இருவரும் சேர்ந்து நடித்த கில்லி, திருப்பாச்சி, குருவி போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றவை. அதனால் அவர்கள் இருவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ரசிகர்களிடையே கூடுதல் கவனத்தை பெற்றது.

ஆனால் இந்த நிகழ்வு விவாகரத்து சர்ச்சைக்கு நடுவில் நடந்ததால், சமூக வலைதளங்களில் பலரும் இதை வைத்து பலவிதமான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். சிலர் இதை சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொண்டாலும், சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் ரசிகர்களே கொஞ்சம் குழப்பமான மனநிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய் பேட்டி

இந்த சூழ்நிலையில் இன்னொரு விஷயம் இணையத்தில் வைரலாக ஆரம்பித்தது. அது விஜய் பல வருடங்களுக்கு முன்பு கொடுத்த ஒரு பழைய பேட்டி. அந்த பேட்டியில் திருமணம் குறித்து அவர் ரசிகர்களுக்கு ஒரு அறிவுரை கூறியிருந்தார். அந்த பேட்டியில் விஜய், "நான் என் அப்பா அம்மாவை எதிர்த்து ஒரு பெண்ணை காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டிருந்தால் நீங்கள் என்னை கேள்வி கேட்கலாம். ஆனால் என் அப்பா அம்மா பார்த்து வைத்த பெண்ணைத்தான் நான் திருமணம் செய்துகொண்டேன். அதில் எந்த தவறும் இல்லை என்று நான் நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

விஜய் அட்வைஸ்

அதோடு மட்டும் இல்லாமல், "என் ரசிகர்களுக்கும் நான் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். அம்மா - அப்பா பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் பெரிய பிரச்சனை வராது. அதையே நீங்கள் பின்பற்ற வேண்டும்" என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

இப்போது அந்த பழைய வீடியோ தான் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. விஜயின் விவாகரத்து விவகாரம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வீடியோ வெளிவந்ததால், பல நெட்டிசன்கள் அதை பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் "அப்போது இப்படிச் சொன்னார், இப்போது என்ன நடக்கிறது?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் மனைவி சங்கீதா பேட்டி

இதற்கிடையில், விஜயின் மனைவி சங்கீதா ஒரு யூடியூப் சேனலுக்கு நீண்ட நேர பேட்டி அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பேட்டி விரைவில் வெளியாவதாகவும் கூறப்படுகிறது. அது வெளியான பிறகு இந்த விவகாரம் இன்னும் அதிகமாக பேசப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் பார்த்தால், ஒரு பக்கம் விவாகரத்து வழக்கு, இன்னொரு பக்கம் த்ரிஷாவுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, அதோடு பழைய பேட்டிகள் மீண்டும் வைரலாகுவது - இப்படி பல விஷயங்கள் சேர்ந்து தற்போது விஜயை சுற்றி பெரிய அளவில் சர்ச்சைகள் உருவாகி இருக்கின்றன. இந்த விவகாரம் அடுத்தடுத்த நாட்களில் எப்படி நகரும் என்று ரசிகர்களும் சினிமா வட்டாரமும் கவனித்து பார்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+