விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தெலுங்கு மாநிலங்களில் வந்த சிக்கல்!
சென்னை: நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் 2026 ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அரசியல் ஆக்ஷன் திரில்லர், விஜயின் அரசியல் பயணத்திற்கு முன் அவரது இறுதி நடிப்பு திரைப்படமாகும். பூஜா ஹெக்டே, பாபி டியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் பாடல்கள் பெரும் ஹிட்டாகியுள்ளன.
தெலுங்கு மாநிலங்களில் சிக்கல்?
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சங்கராந்தி போட்டி படங்களால் (பிரபாஸ், சிரஞ்சீவி படங்கள்) ஜன நாயகன் படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு தெலுங்கு விநியோகஸ்தர் பின்வாங்கியதாகவும் தகவல்கள் உள்ளன. இருப்பினும், தமிழ்நாட்டில் படத்திற்கு பெரும் ஆதரவு உள்ளது. ஹிந்தி விநியோக உரிமையை முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் போதிய அளவுக்கு ஹிந்தி மாநிலங்களில் பிரமோஷன் செய்தாதது படத்தின் வெற்றியை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

ரசிகர்கள் உற்சாகம்!
வெளிநாடுகளில் முன்பதிவு தொடங்கிய ஒரே நாளில் ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. டிவி உரிமையை ஜீ தமிழ் கைப்பற்றியுள்ளது. படத்தின் டிரெய்லர் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்ப்பு. ரசிகர்கள் #JanaNayagan ஹேஷ்டேக்கில் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால் பராசக்தி படம் ஜனவரி 10ல் ரிலீஸ் ஆவதுதான் சற்று திக் திக் என்று இருக்கிறதாம் ரசிகர்களுக்கு.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications