Vijay Trisha: த்ரிஷா விவகாரம்! விஜய் மட்டும் புனிதரா? அந்தணன் கொடுத்த விளக்கம்.. குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: சமீப நாட்களாக நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து மீண்டும் கிசுகிசுக்கள் பேசுபொருளாகி வருகின்றன. பல வருடங்களாகவே கோலிவுட் வட்டாரத்தில் இந்த இரண்டு பேருக்கிடையிலான நட்பு பற்றி பேசப்பட்டு வந்தாலும், இருவரும் இதை நேரடியாக உறுதிப்படுத்தியதுமில்லை, மறுத்ததுமில்லை. அதனால் அவ்வப்போது ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது கருத்து வந்தாலே, இந்த விஷயம் மீண்டும் சூடுபிடித்து விடுகிறது.

நயினார் நாகேந்திரன் கருத்து
இந்த முறை அந்த விவாதம் சினிமாவை தாண்டி அரசியல் தளத்திலும் பேசப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து தான் இதற்குக் காரணம். விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்த பிறகு, தனிப்பட்ட வாழ்க்கையையும் "சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்ற வகையில் அவர் பேசியது அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசியல் தொண்டர்கள் மட்டுமல்ல, சினிமா ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இதை வைத்து வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
அந்தணன் விளக்கம்
இந்த சூழலில், சினிம விமர்சகரான அந்தணன் இது பற்றி பேசிய வீடியோ வைரலாகி வருகின்றன. அவர் பேசும்போது, "ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தார் என்பதற்காக அவரை மனிதர் இல்லாதது போல பார்க்க முடியாது. அரசியலில் இருக்கும் பல தலைவர்களுக்கே அவரவர் வாழ்க்கையில் பல விஷயங்கள் இருந்திருக்கிறது. அப்படி இருக்கையில், விஜய் மட்டும் புனிதமான ஒரு உருவம் போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா?" என்ற ரீதியில் கேள்வி எழுப்பினார்.
விளக்கம் கொடுக்காத த்ரிஷா
இந்த பேச்சு, நேரடியாக விஜய் - த்ரிஷா உறவை உறுதி செய்வது போல இல்லாவிட்டாலும், "ஒரு மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலோடு சேர்த்து இழுத்து வருவது நியாயமா?" என்ற கேள்வியை முன்வைத்ததாகவே பலர் பார்க்கிறார்கள். ஆனால் சமூக வலைதளங்களில் சிலர் இதை வேறு கோணத்தில் எடுத்துக் கொண்டு, அந்தணன் ஏதோ ஒரு மறைமுக தகவலை சொல்ல வருகிறார் போல என்று பேச ஆரம்பித்துள்ளனர்.
ரசிகர்கள் கருத்து
அதனால் தான் இந்த வீடியோவுக்கு கீழே "அவர் உண்மையிலேயே என்ன சொல்ல வருகிறார்?" என்ற கேள்விகள் அதிகமாக கமெண்ட்களில் தெரிகிறது. இன்னொரு பக்கம், இந்த விவகாரத்தில் விஜய் தரப்பிலிருந்தோ, த்ரிஷா தரப்பிலிருந்தோ எந்த விளக்கமும் வராதது கூட பேசுபொருளாகியுள்ளது.
புரியாத புதிர்
பொதுவாக இப்படி கிசுகிசுக்கள் அதிகமாக பேசப்படும்போது ஏதாவது ஒரு மறுப்பு வரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இந்த முறை இருவரும் அமைதியாக இருப்பது, தேவையில்லாமல் விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்ற மனநிலையில்தான் இருக்கிறார்கள் என்றே சிலர் கருதுகின்றனர்.
மொத்தத்தில், ஒரு நடிகரின் அரசியல் பயணத்தை வைத்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை வரை இழுத்து பேசுவது சரியா என்ற கேள்வியை இந்த விவாதம் மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்திருக்கிறது. இது உண்மையா, வதந்தியா என்பதை விட, ஒரு பிரபலத்தின் தனிப்பட்ட விஷயங்கள் பொதுவெளியில் விவாதமாக மாறும் போது அது எவ்வளவு தூரம் நியாயம் என்ற கேள்விதான் இப்போது பலரின் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.
-
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications