Vijay: விஜயால் பிரபல நடிகர் வீட்டுக்குள்ளேயே பஞ்சாயத்து.. சோசியல் மீடியாவில் வெடித்த வாக்குவாதம்!
சென்னை: தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் விவகாரம் - தவெக தலைவர் விஜய் மற்றும் திமுகவுடன் இணைந்துள்ள ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் இடையிலான வார்த்தை மோதல் தான். திவ்யா தொடர்ந்து விஜய் குறித்து கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறார். ஆனால் இப்போது அவருடைய வீட்டில் இருந்தே அதற்கு பதில் கிடைத்திருக்கிறது.

திவ்யா சத்யராஜின் கேள்வி
இன்ஸ்டாகிராமில் திவ்யா சத்யராஜ் வெளியிட்ட வீடியோவில், "நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே என் அம்மா பெயரில் அறக்கட்டளை தொடங்கி, ஏழைகளுக்கு சத்தான உணவு, வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கி வருகிறேன். நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு என்ன செய்தீர்கள் என்பதை லிஸ்ட் போட்டு சமர்ப்பிக்கவும்" என்று நேரடியாக விஜயிடம் கேள்வி எழுப்பினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன், தவெகவினரும் விஜய் ரசிகர்களும் இதற்கு பதிலடி அளித்தனர். சிலர் திவ்யாவை விமர்சித்ததுடன், அவரை உருவக்கேலி செய்த சம்பவங்களும் பேசுபொருளானது.
சிபி சத்யராஜின் 'பதிலடி' வீடியோ
இந்த நிலையில், திவ்யாவின் அண்ணனும் நடிகருமான சிபி சத்யராஜ் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்ட வீடியோ தான் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், அமைதிப்படை படத்தில் தனது தந்தை சத்யராஜ் மணிவண்ணனிடம் பேசும் "மணியா, நீ வரலாறு தெரிஞ்சுக்கோணும்" என்ற புகழ்பெற்ற டயலாக் இடம்பெற்றுள்ளது. அந்த டயலாக்குடன், விஜய் பல ஆண்டுகளாக செய்த நற்பணிகள், உதவிகள், செய்தித்தாள் கட்டுரைகள், புகைப்படங்கள் ஆகியவற்றை இணைத்து தொகுத்த வீடியோவை சிபி வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த தவெகவினர், "சிபி தான் உண்மையான விஜய் ரசிகர்", "தங்கைக்கு புரியும்படி அண்ணன் பதில் சொல்லிட்டார்", "விஜய் பேசவே தேவையில்லை, சிபியே பதில் சொல்லிட்டார்" என்று பாராட்டி வருகின்றனர்.

நோஸ்கட்
ஆனால், சமூக வலைதளங்களில் மற்றொரு தரப்பு வேறு கேள்வி எழுப்புகிறது. "தங்கச்சி கேள்வி கேட்டிருக்கிறார். உடன்பிறந்த அண்ணனே இப்படி மறைமுகமாக பதில் கொடுப்பது சரியா?" என்று சிலர் விமர்சித்து வருகின்றனர்.
சிபி சத்யராஜ் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுப்பது இது முதல் முறை அல்ல. முன்னதாகவும் அவர் விஜயின் அரசியல் முடிவுகள், திரைப்பட விவகாரங்கள் குறித்து ஆதரவாக பதிவுகள் வெளியிட்டுள்ளார். குறிப்பாக, ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாதபோது, "இன்று ஜனநாயகனும் இல்லை, இங்கு ஜனநாயகமும் இல்லை" என்று எக்ஸ் தளத்தில் பதிவு செய்தது பேசப்பட்டது.

விஜயின் அரசியல் பயணம்
திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நிலையிலேயே அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஜய், "எனக்கு பணம் முக்கியமில்லை, மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வருகிறேன்" என்று பலமுறை கூறியுள்ளார். வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவிருப்பதும் அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்படுகிறது.
விவாகரத்து சர்ச்சை
இதற்கிடையில், விஜயின் குடும்ப வாழ்க்கையும் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின. டிசம்பர் மாதமே மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் விவரம் பிப்ரவரி இறுதியில் வெளிவந்ததாக கூறப்படுகிறது. வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சங்கீதா தேர்தல் நேரத்தில் திட்டமிட்டே இவ்வாறு செய்கிறார் என விஜய் ரசிகர்களில் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். மறுபுறம், "தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களை அரசியலுடன் இணைத்து பேச வேண்டாம்" என்ற கருத்தும் எழுகிறது.
மேலும், மனைவி இருந்தபோதும் வேறு நடிகையுடன் தொடர்பு வைத்திருப்பதாக பரவும் குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன. இதற்கிடையில், சில தவெக பெண்கள் "விஜய்க்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்" என்று வெளிப்படையாக கூறியிருப்பதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
திவ்யா சத்யராஜின் கேள்வி, சிபி சத்யராஜின் பதிலடி வீடியோ, விஜயின் அரசியல் வரவு, குடும்ப சர்ச்சை-இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து தற்போது பெரிய அரசியல்-திரை உலக விவாதமாக மாறியுள்ளது.
Real OG fan Boy @Sibi_Sathyaraj anna 🥳💥💯🫶🙏@TVKVijayHQ pic.twitter.com/ZfDP3qN8f0
— Sachein ❤️ (@sachien_kannan) March 3, 2026
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி












Click it and Unblock the Notifications