Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணீரோடு தான் ரசிகர்கள் வெளியே வருவாங்க.. ஜன நாயகன் கிளைமேக்ஸில் இப்படியொரு விஷயம் இருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி படமாக ஜன நாயகன் மாறியுள்ளது. சினிமாவில் இருந்து விடைபெற்று அரசியல் களத்தில் இறங்கி மக்களுக்காக உழைப்பதற்காக 250 கோடி ரூபாய் சம்பளத்தைக் கூட தனது மகன் விட்டு விட்டு வருகிறார் என சமீபத்தில், நடைபெற்ற கொம்புசீவி படத்தின் நிகழ்ச்சியில் கூட எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியுள்ளார்.

அப்பாவை போல இயக்குநராகாமல் எம்ஜிஆர், ரஜினிகாந்த், விஜயகாந்த் போல சினிமாவில் நடிகராக வேண்டும் என நினைத்த நடிகர் விஜய் ஏகப்பட்ட விமர்சனங்களை எல்லாம் கடந்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாறிய நிலையில், அரசியல் பக்கம் தனது அடுத்த அடியை வைக்க முடிவெடுத்துள்ளார்.

Vijay s Jana Nayagan Run time and Climax Tribute details are here in Tamil
Photo Credit:

ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், ஜன நாயகன் படத்தின் ரன் டைம் மற்றும் கதை குறித்த தகவல்களும் கசிந்துள்ளன.

ஒன் லாஸ்ட் டைம்: கண்டிப்பாக ஜனநாயகன் படத்தை காண எந்தளவுக்கு சந்தோஷமாக விஜய் ரசிகர்கள் போகிறார்களோ அதை விட அதிக வலியுடனும் கண்ணீருடனும் தியேட்டரை விட்டு வரமாட்டோம் என்கிற ரீதியிலும், அடுத்தடுத்த ஷோக்களை தொடர்ந்து பார்க்கும் நிகழ்வுகளும் விஜய்யின் கடைசி படம் ஜன நாயகன் என அறிவிக்கப்பட்ட நிலையில், நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜன நாயகன் ரன் டைம்: கேவிஎன் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான தளபதி கச்சேரி பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வரும் டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் மற்ற பாடல்களும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் ரன் டைம் 3 மணி நேரம் 5 நிமிடம் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய்க்கான ட்ரிப்யூட்: 3 மணி நேரம் 5 நிமிடங்கள் என்றதும் படம் இழுவையாக இருக்கப் போகிறதோ என்கிற அச்சமே தேவையில்லை. படத்தின் நீளம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடைசியாக கிளைமேக்ஸ் முடிந்ததும் தளபதி விஜய்க்கான ட்ரிப்யூட்டாக சில காட்சிகள், அவரது சினிமா வாழ்க்கை உள்ளிட்டவை ரசிகர்களுக்காக திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கதை, இயக்கம் எல்லாம் தாண்டி: ஜன நாயகன் திரைப்படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கா? இல்லையா? என்ன கதை? அஜித்தை வைத்து படங்களை இயக்கிய எச். வினோத் இயக்குகிறாரே என்பதை பற்றியெல்லாம் ரசிகர்களுக்கு கவலையே இல்லை. ஏனென்றால், எப்படியும் தளபதி விஜய் தனது ரசிகர்களை ஒன் லாஸ்ட் டைம் என்டர்டெயின் செய்து அனுப்புவது நிச்சயம். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜாலியாக குடும்பத்துடன் ஜன நாயகன் படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளை கொண்டாட்ட திருவிழா களமாக மாற்றிவிடுவார்கள் என்பது நிச்சயம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+