Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vikram Prabhu: ‘டாணாகாரன்’ படத்திற்காக தமிழக அரசு விருது… விக்ரம் பிரபுவின் நெகிழ்ச்சியான பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு நேற்று அறிவித்த திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள் பட்டியல் தமிழ் திரையுலகில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அந்த வரிசையில், டாணாகாரன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதுக்கு செலக்ட் ஆன நடிகர் விக்ரம் பிரபு, தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவாக பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

விக்ரம் பிரபு வெளியிட்ட பதிவில், "டாணாகாரன் படம் - ரத்தம், வியர்வை, உண்மையான கடின உழைப்பு. இது என்னுடையது மட்டும் அல்ல; இந்த பயணத்தில் இணைந்த முழு குழுவினுடைய உழைப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.

Vikram Prabhu Taanakkaran Tamil Nadu Government Awards

மேலும், "தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருதை பெறுவதில் நான் உண்மையிலேயே பெருமை கொள்கிறேன். இந்த அங்கீகாரத்திற்கு தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி" என்றும் தெரிவித்துள்ளார்.

வாழ்த்து

மேலும், "இந்த பயணத்தில் என்னுடன் இருந்த என் அருமையான குழுவினருக்கு என் இதயம் கனிந்த நன்றி. விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்" என இந்த விருதுக்குப் பின்னால் தனக்கு உறுதுணையாக நின்ற குழுவினருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

"நேர்மையான கதைகளும் உண்மையான முயற்சிகளும் எப்போதும் வெளிச்சம் காண வேண்டும்" என்ற அவரது வரிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.

சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்

இந்த பதிவை தொடர்ந்து, ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், சக நடிகர்கள் என பலரும் விக்ரம் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். "தகுதியான விருது", "உழைப்புக்கான அங்கீகாரம்", "இன்னும் உயரங்கள் உங்களை காத்திருக்கின்றன" என சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொடர்ச்சியான வெற்றிகள்

சமீப காலமாக, விக்ரம் பிரபு ஒவ்வொரு படத்திலும் இயல்பான, நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் வெளியான 'சிறை' திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த படத்தில் அவரது நடிப்பு பார்வையாளர்கள் மட்டுமின்றி விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றது.

"விக்ரம் பிரபு திரையில் மாஸ் காட்டுவதற்காக அல்ல... கதாபாத்திரமாக வாழ்கிறார்" என்பதே தற்போது ரசிகர்களின் கருத்தாக மாறியுள்ளது.

அடுத்தடுத்து வெற்றி படங்கள்

'கும்கி', 'இறுகப்பற்று', 'டாணாகாரன்', 'சிறை' போன்ற படங்கள், விக்ரம் பிரபுவின் நடிப்பு வாழ்க்கையில் முக்கியமான மைல்கற்களாக அமைந்துள்ளன. குறிப்பாக, இன்றைய காலகட்டத்தில் மாஸ் ஹீரோக்களாக வலம் வரும் பலரும் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுக்க முடியாமல் தடுமாறும் நிலையில், விக்ரம் பிரபு நடித்த பெரும்பாலான படங்கள் விமர்சன ரீதியாகவும், ரசிகர் வரவேற்பிலும் வெற்றியை பெற்றுள்ளன.

ரசிகர்களின் நம்பிக்கை

விக்ரம் பிரபு குறித்து தற்போது திரையுலகிலும் ரசிகர்களிடமும் நிலவும் பொதுவான கருத்து, "இவர் மெதுவாக, ஆனால் ஸ்ட்ராங்கான ஒரு பெரிய நடிகராக உருவாகிக் கொண்டிருக்கிறார்" என்பதுதான்.

நடிகர் விக்ரம் பிரபு, நடிகர் பிரபுவின் மகனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் ஆவார். 2012-ஆம் ஆண்டு வெளியான 'கும்கி' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தன்னுடைய தனித்துவமான பாதையை உருவாக்கி வருகிறார்.

'டாணாகாரன்' திரைப்படத்திற்காக கிடைத்த தமிழக அரசு விருது, விக்ரம் பிரபுவின் கடின உழைப்புக்கும், செலைட்டிவான கதைகளுக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது. ஆரவாரம் இல்லாமல், அமைதியாக தன் பாதையில் பயணிக்கும் இந்த நடிகருக்கு, எதிர்காலத்தில் இன்னும் பல உயரிய விருதுகளும், பெரிய வெற்றிகளும் காத்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+