“ஒரே கல்யாணத்தில் ஜெகன் , ஸ்டாலின்,விஜய் எல்லாரும் சேர்ந்தது எப்படி?” சாஹில் ரெட்டி கல்யாணம் பற்றிய பின்னணி
சென்னை: சென்னையில் நடந்த ஒரு கல்யாணம் இப்படி அரசியல், சினிமா, பிஸினஸ் எல்லாத்தையும் ஒரே கூரையின் கீழ் கூட்டிட்டு வந்துச்சுன்னா நம்புவீங்களா? ஆனா சமீபத்தில் நடந்த சாஹில் ரெட்டியின் திருமணம் அப்படித்தான் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது.
முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் (டிவிகே தலைவர்), உதயநிதி ஸ்டாலின், சூர்யா, கார்த்தி என ஒரே மேடையில் பல முக்கிய முகங்களை மக்கள் பார்த்ததும், "இது யாரோ பெரிய அரசியல்வாதியின் கல்யாணமா?" "யாரப்பா இந்த சாஹில் ரெட்டி?" என்கிற கேள்வி தான் முதல்ல எல்லாருக்கும் வந்தது.

இந்த சாஹில் ரெட்டி யார்?
சாஹில் ரெட்டி யாருன்னா, ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான். சாஹிலின் அப்பா சுனில் ரெட்டி. அவருடைய அப்பா தான் மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சகோதரர் ஜார்ஜ் ரெட்டி. அதாவது, சுனில் ரெட்டி - ஜெகன் மோகன் ரெட்டியின் கசின். சாஹில் ரெட்டி - ஜகன் மோகன் ரெட்டிக்கு அண்ணன் மகன் மாதிரி உறவு
இதனால தான் ஜெகன் மோகன் ரெட்டியும் அவருடைய மனைவி பாரதி ரெட்டியும் நேரடியாக கல்யாணத்துக்கு வந்து புதுமண தம்பதிகளை ஆசீர்வதிச்சாங்க.
சாஹில் ரெட்டியின் பின்னணி
சாஹில் ரெட்டி அரசியல் களத்தில நேரடியாக இல்லாதவர். சென்னையிலேயே பள்ளிப்படிப்பை முடிச்சவர். சிஷ்யா ஸ்கூல்ல படிச்சிருக்கார். அதற்க்கப்புறம் அமெரிக்காவுக்கு போய், டிபால் யூனிவர்சிட்டில 'Entrepreneurship' (தொழில் முனைவு) படிச்சவர்.
தற்போது சென்னையில் 'Bubbl.cards'ன்னு ஒரு டெக் ஸ்டார்ட்அப்பை நடத்திட்டு இருக்கார். டிஜிட்டல் விசிட்டிங் கார்டு மாதிரி ஒரு புதிய ஐடியாவோட இந்த நிறுவனம் இயங்குது. இதுக்கு முன்னாடி ரியல் எஸ்டேட் துறையில் சோசியல் மீடியா மேனேஜராகவும் வேலை பார்த்த அனுபவம் அவருக்கு இருக்கு.
அதனால் தான் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சாஹில் ரெட்டி ஒரு "பிஸினஸ் - கார்ப்பரேட்" பேக் கிரவுண்ட்ல இருக்கிற இளைஞர்.
கல்யாணம் நடந்த இடம்
2026 பிப்ரவரி 7-ம் தேதி, சென்னையில் இருக்கும் லக்ஷரி ஹோட்டல் லீலா பேலஸில் தான் சாஹில் ரெட்டி - வேதிகா திருமணம் நடந்தது. சாதாரண குடும்ப கல்யாணமா இருந்திருக்க வேண்டியது தான். ஆனா வந்திருந்த விருந்தினர் பட்டியலே இதை ஒரு பெரிய அரசியல் நிகழ்வாக மாற்றிடுச்சு.
ஒரே மேடையில் ஜெகன் - ஸ்டாலின் - விஜய்
இந்த கல்யாணத்தில், ஜெகன் மோகன் ரெட்டி, மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், டிவிகே தலைவர் விஜய், நடிகர்கள் சூர்யா, கார்த்தி இப்படி எல்லாரும் ஒன்றாக வந்து கலந்து கொண்டது தான் மக்களுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.
ஏற்கனவே ஆந்திர அரசியலில் முக்கிய முகமாக இருந்த ஜெகன் ரெட்டி, தமிழ்நாட்டில் முதல்வராக இருக்கும் ஸ்டாலின், இப்போ அரசியலுக்குள் வந்த நடிகர் விஜய் - மூவரும் ஒரே கல்யாண மண்டபத்தில சந்திச்சது அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாகி இருக்கு.
"இது வெறும் குடும்ப நிகழ்ச்சியா?" "அல்லது அரசியல் நட்பு, பிஸினஸ் தொடர்பு எல்லாம் கலந்த ஒரு சின்ன கூட்டமா?" என சமூக வலைதளங்களில் பலரும் தங்களோட கருத்துக்களை பகிர்ந்து வர்றாங்க.

அரசியல் வட்டாரங்களும் குவிந்த கல்யாணம்
இந்த கல்யாணத்துக்கு ஆந்திராவில் இருந்து பல YSR காங்கிரஸ் கட்சி தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் வந்திருந்தாங்க. அதனால் தான் சிலர் இதை, "ஒரு கல்யாணம் இல்ல, மினி அரசியல் சந்திப்பு" என்றே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.
சுனில் ரெட்டி ஏற்கனவே ஜெகன் ரெட்டிக்கு நெருங்கியவர். அரசியல், பிஸினஸ் விஷயங்களில் பின்னணியில் இருந்தவர். அதனால் அவருடைய மகன் கல்யாணம் பெரிய அளவில் முக்கியத்துவம் பெறுவது இயல்பான விஷயம் தான்.
இந்த சம்பவம் ஒரே ஒரு விஷயத்தை நமக்கு நினைவுபடுத்துது. இந்திய அரசியல் குடும்பங்களில் நடக்கும் திருமணங்கள், வெறும் குடும்ப விழாவா மட்டும் இருக்க மாட்டேங்குது. அது அரசியல், அதிகாரம், நட்பு, பிஸினஸ் எல்லாம் சேரும் ஒரு பெரிய மேடையாக மாறிடுது.
-
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம்












Click it and Unblock the Notifications