விஜய் கூட சேர்ந்து நடிக்காத காரணமே இதுதான்! நேரடியாக என்கிட்ட அப்படி கேட்டாரு! நடிகை மீனா ஓபன்
சென்னை: நடிகை மீனா 90s காலகட்டத்தில் இருந்து இப்ப வரைக்கும் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய தனித்துவத்தை காட்டி வரும் மீனா சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். ஆனால் விஜய்யுடன் மட்டும் ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இது குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்திருந்தார். அது பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல இருக்கிறது.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஒரு சில நடிகைகள் மட்டும்தான் பல வருடங்களாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் மீனாவும் ஒருவர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அடி எடுத்து வைத்து பிறகு யாருக்கெல்லாம் குழந்தையாக நடித்தார்களோ அவர்களுடனும் ஜோடியாக நடித்து இப்போது முக்கியமான கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கண்ணழகி என்று பலராலும் பாராட்டப்படும் மீனா இப்போது அதிகமாக நடிக்கவில்லை. ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சோசியல் மீடியாவில் அவர் பேசிய ஒரு பேட்டி தான் வைரலாகி வருகிறது. அவர் விஜய்யுடன் மட்டும் எந்த படத்தில் இணைந்து நடிக்கவில்லை.
கால்ஷீட் பிரச்சனை
ஷாஜகான் படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார். அதிலும் சரக்கு வச்சிருக்கேன் என்ற பாடல் அவர் ஆட்டத்தில் பெரிய அளவில் பெயர் வாங்கியது. அது பற்றி மீனா பேசுகையில், நான் விஜய்யுடன் மட்டும் நடிக்கவே இல்லை இது பற்றி எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால் அதற்கு முக்கிய காரணமே கால்ஷீட் பிரச்சனை தான்.
நான் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் எனக்கு விஜய் உடனும் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த சமயத்தில் அஜித்துடன் கூட சில படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் விஜய்யுடன் படவாய்ப்பு வரும் சமயத்தில் நான் வேறு படங்களில் பிஸியாக இருந்தேன். அந்த நேரத்தில் எல்லாம் ஒரே நாளில் மூன்று ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன். தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடித்துக் கொண்டு இருந்ததால் எனக்கு விஜய் படங்கள் வாய்ப்புகளுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாமல் இருந்தது.
மீனா விளக்கம்
விஜயுடன் கௌசல்யா ஒரு படத்தில் நடித்திருப்பாங்க, அந்த பட வாய்ப்பு என்கிட்ட தான் வந்தது. ஆனால் முடியாது என்று சொல்லிவிட்டேன். அதற்குப்பிறகு பிரண்ட்ஸ் படத்தில் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் மலையாளத்தில் நான் தான் நடித்திருந்தேன். அதேபோல தமிழிலும் நடிக்க சொன்னாங்க ஆனால் 20 நாட்கள் கால் சீட் கேட்டாங்க. அப்போதெல்லாம் என்னால் கால் சீட் கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது அதனால் தான் மிஸ் பண்ணி விட்டேன்.
விஜய் கேள்வி
அதற்குப் பிறகு ஷாஜகான் படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட வாய்ப்பு வந்த போது நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால் அந்த நேரத்தில் எல்லாம் ஒரு பாடலுக்கு யாரும் டான்ஸ் ஆட மாட்டாங்க. அதனால நான் முடியாதுன்னு சொன்னேன். அப்புறம் நிறைய பேரு பேசினாங்க, சவுத்ரி சார் எல்லாம் பேசினதால தான் அந்த படத்தில் டான்ஸ் ஆட ஒத்துக்கிட்டேன்.
ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போன பிறகு இந்த பாட்டு வரியை கேட்டதும், எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதுபோல விஜய் என்கிட்ட பேசும்போது, நீங்க என்கூட மட்டும் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க அஜித் கூட மட்டும் மூணு படத்துக்கு மேல நடிச்சு இருக்கீங்க என்று நேரடியாக கேட்டாரு.
அதற்கு நான் கால்ஷீட் பிரச்சனை தான் சார் உங்களுக்கு தான் தெரியுமே ஒரு படம் வரும்போது நாம வேற படத்துல கமிட் ஆகி இருந்தா டேட் கொடுக்க முடியாது என்பதனால தான் முடியாம போயிடுச்சு என்று சொன்னேன். நான் அவர் கூட நடிக்கலனாலும் என் பொண்ணு அவரு கூட தெறி படத்துல நடிச்சிட்டாங்க என்று மீனா அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
-
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்












Click it and Unblock the Notifications