கொளுத்தி போட்ட மான்யா ஆனந்த்.. தனுஷை சுற்றி பின்னப்படும் சதி வலை? திருந்தவே மாட்டாரா: பிரபலம் பளீர்
சென்னை: தனுஷூக்கு ஏதாவது ஃபேவரான சம்பவம் நடந்தால், உடனே அவருக்கு எதிராக அதிலும் பாலியல் சம்பந்தப்பட்ட செய்திகளும் கூடவே வருவது ஏனோ? என்று தனுஷ் ரசிகர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புவதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.. மேலும், தலைவர் 173 படத்தை தனுஷ் இயக்க போகிறாரா? என்பது குறித்தும் பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார்.
Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "வானத்தை போல, கயல் போன்ற சீரியல்களில் நடித்தவர் மான்யா ஆனந்த்.. இவர் ஒரு பேட்டியில், பிரபலமான கம்பெனியில் நல்ல கதையுடன் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது என்று என்னுடைய செல்போன் வாட்ஸ்அப்-க்கு ஒருநாள் மெசேஜ் வந்தது.
பிறகு தனுஷ் மேனேஜர் ஸ்ரேயாஸ் என்பவர் எனக்கு போன் செய்து, இந்த படத்தில் நடிக்க சம்மதமா என்று கேட்டார். அதற்கு நான், "வல்கராக, அசிங்கமாக இல்லாத சீன் என்றால் நடிக்கிறேன்" என்றேன்..

"அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு ஓகேவா?"
உடனே மேனேஜர், "அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு ஓகேவா?" என்று கேட்டார்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நான், "அசிங்கமாக நடிக்கவே ஒப்புக் கொள்ளாதபோது, அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு எப்படி ஒப்புக் கொள்வேன்? என்றேன்.அதற்கு அந்த மேனேஜர், தனுஷ் படமென்றாலுமா? என்று கேட்டார். யாருடைய படமாக இருந்தாலும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டேன்.
ஒருவேளை அது ஃபோர்ஜரி போன்காலாகவும் இருக்கலாம், எனவே தனுஷ் சார் உஷாராக இருக்க வேண்டும்" என்று பேட்டியில் கூறியிருந்தார்.
திருந்த மாட்டாரா தனுஷ்
தனுஷை பற்றின நடிகை தந்த இந்த பேட்டி இணையத்தில் ஹாட் டாப்பிக்காகிவிட்டது.. எனவே இது குறித்து 2 விதமாக சோஷியல்மீடியாவில் பேசி வருகிறார்கள்.."தனுஷ் திருந்தவே மாட்டாரு.. எந்த ரேஞ்சுக்கு போனாலும் தன்னை மாற்றிக் கொள்ள மாட்டாரு" என்று ஒரு சாராரும், "தனுஷை சுற்றி சதி வலை பின்னப்படுகிறது, தனுஷுக்கு எதிராக பெரிய கும்பலே இறங்கி வேலை செய்கிறது, பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை தனுஷ் மீது திணிப்பதும் இந்த கும்பல்தான்" என்று மற்றொரு சாராரும் பேசி வருகிறார்கள்.
ஸ்ரேயாஸ் அறிக்கை
இந்நிலையில்தான், தனுஷ் மேனேஜர் ஸ்ரேயாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "என் பெயரில் அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரில் வந்த "Casting call" முற்றிலும் பொய்யானது. என்னுடைய படத்துடன் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.. நடிகர், நடிகைகள் தேர்வு என்று வெளியாகியிருந்த விளம்பரம் பொய்யானது, அதனை நம்ப வேண்டாம்" என்று விளக்கம் தந்திருந்தார்.
பின்னப்படும் சதி வலை
தன்னை சுற்றி ஒரு சதி வலை நடப்பதாக ஏற்கனவே ஒரு படவிழாவில் தனுஷ் பேசியிருந்தார்.. "முதுகு பின்னால் என்னை யாரோ குத்த பார்க்கிறார்கள், ஆனால் ஒரு செங்கல்லைகூட உருவ முடியாது" என்று கூறியிருந்தார்.. அப்படியிருந்தும்கூட, இப்படியோரு பரபரப்பு தனுஷை சுற்றி பரவி வருகிறது.
எனினும் இந்த பேட்டியை சீரியல் நடிகை மான்யா ஆனந்த், இப்போது வந்து ஏன் சொல்ல வேண்டும்? ஒருவேளை தெரியாமல் பேட்டியில் சொல்லிவிட்டாரா? அல்லது யாராவது சொல்லித்தந்து அப்படி சொல்கிறாரா? அல்லது உண்மையிலேயே அவருக்கு ஸ்ரேயாஸிடமிருந்து போன் வந்ததா? என்றெல்லாம் இனிதான் தெரியவரும்.
தலைவர் 173 படம்
ஆனால், தனுஷூக்கு ஏதாவது ஃபேவரான சம்பவம் நடந்தால், உடனே அவருக்கு எதிராக அதிலும் பாலியல் சம்பந்தப்பட்ட செய்திகளும் கூடவே வருவது ஏனோ? என்று தனுஷ் ரசிகர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகிறார்கள்.
அதுமட்டுமல்ல, ரஜினி நடிக்கவிருந்த தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதுமே, தனுஷ்தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.. இதுவும் பொய்த் தகவலாகும்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications