பராசக்தி படத்திற்கு விளம்பரம் தேடி தரும் விஜய் ரசிகர்கள்.. சிவகார்த்திகேயனுக்கு சாபம்லாம் விடுறாங்க!
சென்னை: பொங்கல் வெளியீடாக டான் புரொடக்ஷன்ஸின் 'பராசக்தி' திரைப்படமும், ஜனநாயகனின் 'ஜனநாயகன்' திரைப்படமும் வெளியாகவிருந்தன. ஆனால், 'பராசக்தி' திரைப்படம் 15ம் தேதிக்கு பதிலாக 10ம் தேதியே ரிலீசாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு. அதாவது ஜனநாயகன் வெளியாகும் அடுத்த நாளே பராசக்தி வெளியாகிறது.
விஜய் படங்கள் பெரிய வசூல் செய்யாவிட்டாலும், சமூக வலைத்தளங்களில் ஹாலிவுட் பட வசூலை மிஞ்சும் அளவுக்கு போலி பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்களை உருவாக்குவது வழக்கமாக உள்ளது. ஆனால், போட்டிக்கு வேறு படங்கள் வரும்போது, இந்த போலி கணக்குகள் அம்பலமாகிவிடுகிறது. பெரும்பாலான கிளாஷ்களில் விஜய் படம் தோல்வியடைந்துள்ளது. பீஸ்ட் படம், அடுத்த மாநில கேஜிஎப் 2விடம் தோற்றது. சச்சின் படம், சந்திரமுகியிடம் தோற்றது. துணிவு படத்தோடு களமிறங்கிய வாரிசு மட்டும் டீசன்டான போட்டியை தந்தது. பிற நேரங்களில் ஸ்ரீகாந்த் என்ற பழைய ஹீரோ படத்தை வீழ்த்தியதே தவிர பெரிய ஹீரோக்கள் படத்தை விஜய் படம் வீழ்த்தியது இல்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எனவேதான், ஸ்ரீகாந்த்தை வீழ்த்தி உச்சத்திற்கு வந்தவர்தான் விஜய் என்று சமூக வலைத்தளங்களில் திமுகவினர் கேலி செய்கிறார்கள். மேலும் 'ஜனநாயகன்' படம் கேசரி படத்தின் ரீமேக் என்று கூறப்படுவதால், ஏற்கனவே பாதி பேர் பார்த்திருப்பதால் வரவேற்பு குறைவாக இருக்கலாம்.
சிவகார்த்திகேயன் இதில் ஒரு கருவிதான். பட தயாரிப்பு குழுதான் ரிலீஸ் தேதியை முடிவு செய்கிறது. ஆனால் விஜய் ரசிகர்களோ சிவகார்த்திகேயனை திட்டி தீர்த்து வருகிறார்கள். சிலர் கோபம் கொண்டு, "நீ வந்தா உனக்கு சூனியம் வச்சிருவேன்" என்று சாபம் விடுகிறார்கள். அதே நேரத்தில், பராசக்தி படத்திற்கு மிகப்பெரிய விளம்பரம் தேடித் தருவது இந்த குழுதான் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
வள்ளுவர் கோட்டத்தில் கூட ஹிந்தி எதிர்ப்பை மையமாக வைத்து டென்ட் கொட்டாய் அமைத்து விளம்பரம் செய்தது நல்ல வரவேற்பைப் பெற்றது, தினசரி அங்கு கூட்டம் அள்ளுகிறது. விஜய் கூட தனது பேச்சில் வள்ளுவர் கோட்டத்தை குறிப்பிட்டு கவர்ன்மென்ட் நடத்துறீங்களா, கண்காட்சி நடத்துறீ்களா என்று கோபத்தை கொட்டித் தீர்த்தார் என்பது நினைவிருக்கலாம்.
ஆனால், இதைவிடவும், விஜய் ரசிகர்கள்தான் பராசக்தி என்று அடிக்கடி கூறி அதற்கு விளம்பரம் தேடித் தந்தபடி உள்ளனர்.












Click it and Unblock the Notifications