வருணுடன் திருமணத்தை நிறுத்தியது இதனால்தான்! அப்பவே வெளிப்படையாக பேசிய திரிஷா.. காரணம் இதுதானாமே!
சென்னை: சமீப நாட்களாக நடிகை திரிஷா பெயர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டாகிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக நடிகர் விஜய் உடன் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஒரே நிற உடையில் சென்ற சம்பவம் ரசிகர்களிடையே பெரிய பேசுபொருளாக மாறியது. அந்த நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து வந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியதால், திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை மீண்டும் விவாதமாக தொடங்கிவிட்டது.

திரிஷா எங்கேஜ்மென்ட்
இதன் பின்னணியில், பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திரிஷாவின் நிச்சயதார்த்தமும் தற்போது மீண்டும் பேசப்படுகிறது. 2015ஆம் ஆண்டு திரிஷாவுக்கும் தொழில் அதிபரும் தயாரிப்பாளருமான வருண் (Varun Manian) என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களும் வெளியானதால் ரசிகர்கள் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் சில மாதங்கள் கழித்து அந்த திருமணம் நடைபெறாது என்ற தகவல் வெளிவந்தது. அதன்பிறகு அந்த நிச்சயதார்த்தம் முறிந்துவிட்டது என்ற செய்தியும் பரவியது.
திரிஷா பதிவு
அந்த நேரத்தில் "திருமணத்தை நிறுத்தியது யார்?" என்ற கேள்வி அதிகமாக எழுந்தது. சிலர் வருண் மணியன் தான் முடிவு செய்தார் என்று கூற, இன்னொரு தரப்பு திரிஷாதான் அந்த முடிவை எடுத்தார் என்று பேச ஆரம்பித்தனர். இதனால் பலவிதமான ஊகங்கள் சமூக வலைதளங்களில் பரவின. அதற்கு பதிலளிக்கும் விதமாக திரிஷா ஒரு பதிவில் "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், தனியாக இருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
திரிஷா பேட்டி
பின்னர் ஒரு பேட்டியில் அந்த சம்பவத்தை பற்றி திரிஷா ஓபனாக பேசியிருந்தார். திருமணம் செய்ய நினைத்த நபர் தனது நடிப்பு வாழ்க்கையை நிறுத்த வேண்டும் என்று கேட்டதாக அவர் கூறினார். ஆனால் சினிமா தான் தனது வாழ்க்கை என்றும், அதைக் கைவிட முடியாது என்றும் அவர் தெளிவாக சொல்லியிருந்தார். "நடிப்பை நிறுத்துவதற்கு பதில் அந்த திருமணத்தையே நிறுத்திவிட்டேன்" என்ற அவரது பதில் அப்போது பெரிதும் பேசப்பட்டது.
திரிஷாவுக்கு சினிமா மீது இருக்கும் காதல் ரசிகர்களுக்கும் தெரிந்த விஷயம்தான். பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகும் நிலையில், திரிஷா மட்டும் தொடர்ந்து தனது நடிப்பு பயணத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் கூறியதுபோல், கர்ப்பமாகும் நேரத்தில் மட்டுமே சிறிது இடைவெளி எடுக்கலாம், இல்லையெனில் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியிருந்தார்.

சினிமாவை அவர் எவ்வளவு விரும்புகிறார் என்பதை காட்டும் ஒரு விஷயமும் ரசிகர்கள் இடையே அடிக்கடி பேசப்படும். சினிமாவை நினைவூட்டும் வகையில் தனது முதுகில் வீடியோ கேமரா வடிவில் பச்சைக் குத்தியுள்ளார் திரிஷா. அது அவரது தொழிலுக்கு இருக்கும் பற்றை வெளிப்படுத்தும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமானது முதல் இன்று வரை சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் சில காலங்களில் அவரது நடிப்பு வாய்ப்புகள் குறைந்தாலும், ஒரு பெரிய வெற்றி படம் வந்தவுடன் மீண்டும் அவர் முன்னணி இடத்துக்கு திரும்பிவிடுகிறார். இதுபோன்ற ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் அவரது பயணம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
சர்ச்சை
இந்நிலையில் சமீபத்தில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கூறிய கருத்து காரணமாகவும் திரிஷா பெயர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியது. தனது படத்தில் திரிஷா நடித்த "குந்தவை" கதாபாத்திரத்தை பற்றி பார்த்திபன் ஒரு கருத்து கூறியதை திரிஷா சமூக வலைதளத்தில் கண்டித்தார். அதற்கு பதிலளித்த பார்த்திபனும் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்ததால் அந்த விவகாரம் சில நாட்கள் பேசப்பட்டது.
அந்த வீடியோ வெளியான பிறகு திரிஷா தனது நாய் இஸ்ஸியுடன் எடுத்த ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ வெளியான நேரத்தை பார்த்த ரசிகர்கள், இது பார்த்திபன் சர்ச்சைக்கு பதிலாகவா என்ற கேள்வியையும் எழுப்பினர்.
இப்படி கடந்த சில நாட்களாக பல்வேறு காரணங்களால் திரிஷா பெயர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எல்லா சர்ச்சைகளுக்கும் நடுவிலும், சினிமாவை விட்டு விலகாமல் தொடர்ந்து தனது நடிப்பு பயணத்தை முன்னெடுத்து வருவது தான் திரிஷாவின் தனிச்சிறப்பாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள்












Click it and Unblock the Notifications