Youth Review : யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! கென் கலக்கினாரா? கலங்க வைத்தாரா? ரிவ்யூ இதோ
சென்னை: கென் கருணாஸ் இயக்கி, அவரே ஹீரோவாக நடித்துள்ள யூத் படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் எப்படி இருக்கிறது என்று (Youth movie review) ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.
கென் கருணாஸ் இந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் தனது திறமையை நிரூபிக்க முயன்றுள்ளார். இந்த படத்தில் அனிஷ்மா நாயகியாக நடித்திருக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். குறிப்பாக சம்பளம் கூட வாங்காமல் இந்த படத்துக்காக பணியாற்றியிருக்கிறார் என்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

யூத் படம் எப்படி இருக்கிறது?
முதலில் சொல்ல வேண்டியது இது ஒரு (Youth Review) மாஸ் படம் கிடையாது. முழுக்க முழுக்க இளமை, நட்பு, முதல் காதல், வாழ்க்கையின் உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகரும் ஒரு "feel good" படம்.
முதல் பாதி முழுவதும் பள்ளி வாழ்க்கை, நண்பர்கள், காமெடி, லைட் காதல் போன்ற அம்சங்களுடன் சுறுசுறுப்பாக செல்கிறது. எங்கும் அலட்டலில்லாமல், இயல்பான காட்சிகள் மூலம் பார்வையாளர்களை ஈர்க்கிறது.
இரண்டாம் பாதியில் கதை மெதுவாக உணர்வுப்பூர்வமான திசையில் நகர்கிறது. இளமையில் ஏற்படும் மன அழுத்தங்கள், உறவுகள், பிரிவுகள் போன்றவை நிதானமாக சொல்லப்பட்டு, கிளைமாக்ஸில் மனதை தொடும் விதமாக முடிகிறது.

கென் கருணாஸ் நடிப்பு & தொழில்நுட்பம்
கென் கருணாஸ் ஹீரோவாக மிகவும் இயல்பாக நடித்துள்ளார். ஹீரோயினான அனிஷ்மா தனது எளிமையான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை கவர்கிறார். அனுபவம் வாய்ந்த நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களை நன்றாக செய்து இருக்கிறார்கள். சிறை படத்தை தொடர்ந்து எந்த படத்தில் இருந்தும் தன்னுடைய இன்னொரு விதமான நடிப்பின் மூலமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசை இந்த படத்தின் முக்கிய பலம். பாடல்களும் பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. குறிப்பாக எமோஷனல் சீன்களில் இசை பெரிய பங்கு வகிக்கிறது.
பிளஸ் பாயிண்ட்ஸ்
இளமை உணர்வுகளை நிஜமாக காட்டிய விதம், இயல்பான நடிப்பு, ஜி.வி.யின் இசை, குடும்பத்துடன் பார்க்கக்கூடிய சுத்தமான கதை என்ன பல விஷயங்கள் இருக்கிறது.

மைனஸ்:
அதே நேரத்தில் மைனஸ் என்று சொன்னால் கதை மிகவும் எளிமையானது. இரண்டாம் பாதி சிலருக்கு மெதுவாக தோன்றலாம்.
மொத்த மதிப்பீடு
பெரிய திருப்பங்களோ, அதிரடி அம்சங்களோ இல்லாமல், சின்ன சின்ன உணர்வுகளால் மனதை கவரும் படம் தான் இந்த யூத். இளமை நினைவுகளை மீட்டெடுத்து, ஒரு லைட்டான அனுபவத்தை கொடுக்கும் இந்த படம், நண்பர்களுடனோ குடும்பத்துடனோ சேர்ந்து பார்க்க ஏற்றதாக உள்ளது.
மொத்தத்தில், "யூத் - சிம்பிளான கதையிலேயே நல்ல உணர்வுகளை கொடுக்கும் ஒரு அழகான முயற்சி" என்று சொல்லலாம்.












Click it and Unblock the Notifications