யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்..! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: பார்வதா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் கருப்பையா சி.ராம் மற்றும் சுலோச்சனா குமார் தயாரிப்பில், கென் கருணாஸ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள யூத் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் நிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் தேவதர்ஷினி மற்றும் சூரஜ் வெஞ்சாரமூடு நடித்துள்ளனர்.
படம் வெளியான முதல் நாளிலேயே சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்துக்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால், வசூல் மேலும் உயரும் என சினிமா வட்டாரங்கள் கணிக்கின்றன.

ஏன் இந்த படத்துக்கு முன்னரே எதிர்பார்ப்பு?
இந்த படம் ரிலீஸுக்கு முன்பே பல காரணங்களால் கவனம் ஈர்த்தது. கென் கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என்பதோடு, அவர் இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல பொறுப்புகளை ஏற்றிருந்தார்.
மேலும் ஜி.வி. பிரகாஷ் குமார் சம்பளம் வாங்காமல் இசையமைத்ததாக கூறப்பட்டது. "முட்டை கலக்கி" உள்ளிட்ட பாடல்கள் படம் வெளியாகும் முன்பே ஹிட்டானது. இதுவும் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
கதை - காதல், குழப்பம், வாழ்க்கை
படத்தின் மையக்கரு, "எதிர்பார்த்து வரும் காதல் இல்லை... எதிர்பார்க்காமல் வரும் காதல்தான் உண்மையானது" என்பதுதான். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் - அப்பா பேக்கரி நடத்துபவர், அம்மா வீட்டுத்திருமதி. படிப்பில் அதிக ஆர்வம் இல்லாத அவன், சராசரி மதிப்பெண்களுடன் பள்ளியை கடக்கிறான். ஆனால் அம்மாவுக்கு அவன் பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசை.
ஆனால் நாயகனின் கவனம் முழுவதும் காதலில்தான். தன்னை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற மனநிலையுடன் இருக்கும் அவன், பள்ளியில் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அந்த காதல் தொடரும் நிலையில், இன்னொரு பெண் அவனை காதலிக்கிறாள். அதற்கும் அவன் சம்மதிக்கிறான். இதனால் முதல் காதல் முறிந்து விடுகிறது. பின்னர் மூன்றாவது பெண்ணிடம் காதலை சொன்னபோது, அது காதல் இல்லை, நட்பு என்று சொல்லப்படுவதால் அவன் மனமுடைந்து விடுகிறான்.
இதற்குப் பிறகு அவன் வாழ்க்கை என்ன ஆகிறது, படிப்பில் முன்னேறுகிறானா, உண்மையான காதல் கிடைக்கிறதா என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிப்பு மற்றும் தொழில்நுட்பம்
கென் கருணாஸ் ஹீரோவாக மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். முகபாவனை, நடனம், குரல் ஆகியவை கவனிக்கப்படுகின்றன. நாயகிகளாக நடித்த மீனாட்சி தினேஷ், அனிஷ்மா அனில் குமார், பிரியான்ஷி யாதவ் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்துள்ளனர்.
சூரஜ் வெஞ்சாரமூடுக்கு பெரிய வாய்ப்பு இல்லாதது குறையாக பேசப்படுகிறது. அதே நேரத்தில் தேவதர்ஷினி தனது அனுபவத்தால் காட்சிகளை தாங்கியுள்ளார். ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் நல்ல தரத்தில் உள்ளன. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியதாவது: "படத்தின் முதல் பகுதி சுமாராகத்தான் உள்ளது. குறிப்பாக கதையின் நிறைய இடங்களில் இவர்களுக்கு ஏற்றார் வளைச்சு வளைச்சு எடுத்திருக்கிறார்கள். இடைவேளை சீன் இவர்களுக்கு ஏற்றார்போல கம்போசிங் செய்திருக்கிறார்கள்.
ஆனால் இரண்டாம் பாதி நன்றாகவே உள்ளது. லவ், படிப்பு, ஃபேமிலி என கலந்து கொடுத்திருப்பதால் இறுதி வரை நன்றாகவே உள்ளது. முதல் படத்திலேயே கென் கருணாஸ் ஒரு ஹீரோவாகவும் இயக்குநராகவும் வெற்றி பெற்றிருக்கிறார். சிம்பு மாதிரி விரல் வித்தையெல்லாம் காட்டி குரங்கு சேட்டை எல்லாம் செய்கிறார். இந்த படம் ஓகே ரகம்தான். தாராளமாக ஃபேமிலியுடன் பார்க்கலாம்." என்று கூறினார்கள்.
ரசிகர்கள் கருத்து
படம் வெளியான பிறகு ரசிகர்கள் தரப்பில் கலவையான ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. சிலர் "இது ரியல் லைஃப்ல நடக்கிற விஷயமாதிரி இருக்கு, இளைஞர்களுக்கு கனெக்ட் ஆகுது" என்று பாராட்டுகின்றனர்.
மற்றொரு தரப்பு "முதல் பாதி சற்று நீளமாக இருக்கு, ஆனா இரண்டாம் பாதி நல்லா காப்பாத்துது" என்று கூறுகின்றனர். பாடல்கள், குறிப்பாக "முட்டை கலக்கி" போன்ற பாடல்கள் திரையரங்கில் நல்ல ரெஸ்பான்ஸ் பெறுகின்றன.
மொத்தத்தில் யூத் படம் இளைஞர்களை மையமாகக் கொண்ட காதல், குடும்பம், உணர்ச்சி கலந்த ஒரு படமாக அமைந்துள்ளது. முதல் பாதி சற்று மந்தமாக இருந்தாலும், இரண்டாம் பாதி படம் முழுக்க சுமந்து செல்லும் வகையில் அமைந்துள்ளது. புதிய முயற்சியாக கென் கருணாஸ் எடுத்துள்ள இந்த படம், தற்போது வசூலிலும் பேசுபொருளாகவும் இருந்து வருகிறது.
-
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications