பிஎஸ்என்எல் வழங்கும் வயர்லெஸ் டெக்னாலஜி படிப்பு
வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வயர்லெஸ் டெக்னாலஜி சான்றிதழ் படிப்பை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடப்படும் இந்த புதிய படிப்பு டிசம்பர் மாதம் தொடங்கப்படவுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்ட தலைமை பொது மேலாளரும், சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளருமான டி.வரதராஜன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் ஆகியோர் முன்னிலையில் பல்கலைக்கழக பதிவாளர் சண்முகவேல், ராஜீவ்காந்தி நினைவு தொலைத்தொடர்பு பயிற்சி மைய முதல்வர் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதன்படி இரு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து வயர்லெஸ் டெக்னாலஜியில் 2 வார கால சான்றிதழ் படிப்பை வழங்கும்.
இந்த படிப்பில், செல்போன் ஜி.எஸ்.எம். டெக்னாலஜி, சி.டி.எம்.ஏ, வைபி, வைமாக்ஸ் உள்பட வயர்லெஸ் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட அனைத்து பாடங்களும், செல்போன் தொழில்நுட்பங்கள் குறித்தும் சொல்லித் தரப்படும்.
இதற்கான தியரி மற்றும் செய்முறை பயிற்சி வகுப்புகள் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ராஜீவ்காந்தி நினைவு தொலைத்தொடர்பு பயிற்சி மையத்திலும் குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியிலும் நடைபெறும்.
பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகமும், பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இணைந்து சான்றிதழ் வழங்கும்.
இதுபற்றிய அறிவிப்பை முன்னணி நாளிதழிகளில் வெளியாகும். மேலும், இதுபற்றிய அறிவிப்புகள் பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்ட இணையத் தளமான http://tamilnadu.bsnl.co.in -ல் வெளியிடப்படும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications