தனித்தமிழ் அறிஞர் தா.சரவணத்தமிழன் மறைந்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலக்கண நூல் ஆசிரியரும் தனித்தமிழ் அறிஞருமான தா.சரவணத்தமிழன் நேற்று இரவு 8 மணி அளவில் சென்னைப் போரூரில் உள்ள இராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். அவரது உடல் மருத்துவமனை வளாகத்திலேயே இறுதி வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.

அவர் உடலை மருத்துவ ஆய்வுக்குக் கொடையாக வழங்கிருப்பதால், இன்று மாலை 4 மணி அளவில் அவரது உடல் அதே மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கப்பட உள்ளது.

திருவாரூரில் இயற்றமிழ்ப் பயிற்றகம் என்ற அமைப்பினைத் தொடங்கி பல்வேறு புலவர்களையும், படைப்பாளிகளையும், உருவாக்கியவர் சரவணத்தமிழன் என்பது குறிப்பிடத்தக்கது.

த.ச.தமிழன் அவர்கள் தமிழறிஞர் திரு.விக.அவர்களுக்குத் திருவாரூரில் சிலை நிறுவியவர். தமிழன் பதிப்பகம், இயற்றமிழ்ப் பயிற்றகம் நிறுவிப் பல நூல்களை வெளியிட்டவர்.இவரின் தமிணூல்,தனித்தமிழ் நாவலரின் கனித்தமிழ்க் கட்டுரைகள்,இருநூல் பிழிவு,பழமையிலே பூத்த புதுமை மலர்,யாப்பு நூல் உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன.

அடியார்க்குமங்களம் அவரது ஊர். த.சரவணத்தமிழன் அவர்களின் மனைவி பெயர் சுசிலா தமிழச்சி. சில ஆண்டுகளுக்கு முன்பு இதய நோயால் இறந்துபோனார். இவர்களுக்கு இல்லற வாழ்வில் மொத்தம் பிறந்தது எட்டுக் குழந்தைகள். நான்கு குழந்தைகளே பிழைத்தனர்.

மூத்த மகன் பெயர் குறழேந்தி. இவருக்கு ஐந்து மகள்கள். தற்போது காந்தாவனம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். தமிழறிஞரின் மூன்று மகள்களில் இரண்டு மகள்கள் விதவையாக வாழ்கின்றனர்.

மூத்தமகள் தமிழரசியின் கணவர் ராமையன். சென்னையில் குளிர்சாதன பெட்டி பழுது நீக்குபவராக தொழில் செய்து வாழ்ந்தவர், சரியான நேரத்துக்கு உண்ணாமல் வயிற்றுப்புண் வந்து திருமணமான ஏழு ஆண்டில் இறந்துபோனார்.

அதன் பிறகு மகளுக்கு துணையாகச் சென்னைத் தாம்பரம் அருகில் உள்ள கரிசங்கால் கிராமத்தில் பக்கவாதம் பாதித்த நிலையில் வாழ்ந்துவந்தார்.

அடுத்த சில ஆண்டுகளில் அவரது இரண்டாவது மகள் மெய்யறிவின் கணவர் இறந்துபோனார். இருச்சக்கர பழுது நீக்குபவராக தொழில் செய்து வந்தவர், தன்னிடம் இருந்த நுரையீரல் பிரச்சினைக்கு சரியாக சிகிச்சை எடுக்காததால் அவரும் மறைந்தார். பலவகை இழப்புகளுக்கு நடுவிலும் கொண்ட கொள்கையில் மாறாமல் தனித்தமிழ் ஈடுபாட்டுடன் வாழ்ந்தவர்.

பல்வேறு புலவர்களையும், படைப்பாளிகளையும், உருவாக்கியவர் சரவணத்தமிழன். அவர்களில் முன்னாள் அமைச்சர் மதிவாணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி - முனைவர் மு. இளங்கோவன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+