அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்
-புன்னியாமீன்
இன்று மே மாதம் 04ம் தேதி.
ஆண்டுதோறும் மே 4ம் தேதியன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் International Firefighters' Day (IFFD) நினைவுகூரப்பட்டு வருகிறது.
தீயணைக்கும் படையினர் எனும்போது ஒரு நாட்டில் இவர்களின் பணி மிக விசாலமானது.. ஆனால், இப்படையினரின் தேவை அடிக்கடி அவசியப்படாமையினால் இவர்களின் முக்கியத்துவம் பெரிதாக உணரப்படுவதில்லை.
இயற்கை அனர்த்தங்களினாலோ அல்லது விபத்துக்களினாலோ அல்லது கலவரங்களினாலோ தீ பற்றும்போது அத்தீயினை அணைப்பதற்காக வேண்டி இவர்களின் சேவை அளப்பரியது. பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து இவர்கள் ஆற்றும் பணி தன்னலமானது. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய கலவர நிலைகளிலும் மேற்கத்திய நாடுகளின் காட்டுத் தீ போன்ற இயற்கை அனர்த்தங்களின்போதும், அதே போல சகல தீ அனர்த்தங்களின் போதும் இவர்களின் செயற்பாடானது மெச்சத்தக்கதே.
இந்த அடிப்படையில் தீயணைப்புப் படையினர் சேவைகளின் பெருமானத்தை மக்களுக்கு உணர்த்துவதுடன், இவர்களின் பங்களிப்புகளுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் மக்கள் மத்தியிலும், தேசிய மட்டத்திலும் அங்கீகாரத்த தன்மையை வழங்கி இவர்களை நன்றி கூருமுகமாக இவர்கள் பற்றி நினைவுகூர்வது இத்தினத்தின் பிரதான எதிர்பார்க்கையாகக் காணப்படுகின்றது. அதாவது, சமூகத்தையும், சூழலையும் பாதுகாக்க முற்படும் இவர்களது சேவைப் பரிமாணங்கள் உணர்த்தப்படுவதும் இவர்கள் கௌரவிக்கப்படுவதும் சமூகத்துக்காகவும், சூழலுக்காகவும் தன்னுயிரைத் தியாகம் செய்த தீயணைப்புப் பிடையினரை நினைவுகூர்வதும் இத்தினத்தின் குறிக்கோளாகும்.
வழக்கமாக இந்நாளன்று ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பும் படையினர் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. இந்நிலையில் 1999 ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பாரிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் ஐந்து தீயணைப்புப் படையினர் உயிரிழந்தனர். இந்நிகழ்வையடுத்து மின்னஞ்சல் மூலமாக மேற்கொள்ளப்பட்ட பரப்புரையினைத் தொடர்ந்து உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவுகூருவதற்கு ஆதரவாக தீயணைப்புப் படையினர் தினத்தினை சர்வதேச ரீதியில் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. இதன் விளைவாகவே மே 4ஆம் திகதி அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு நினைவுகூரப்பட்டு வருகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications