Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான தினம்

Subscribe to Oneindia Tamil

Desert
தற்போது மீத்தேனின் அளவு 1783 பி.பி.பியன்களாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 37 பி.பி.பியன்கள் அதிகம். காற்று மண்டலத்தில் சுமார் 10 ஆண்டுகள் வரை தங்கி வெப்பத்தை உண்டாக்கக் கூடியது. வெப்பத்தை உண்டாக்குவதில் கரியமில வாயுவைவிட இருமடங்கு சக்தி அதிகம்.60 சதவீத மீத்தேன் பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி உபயோகிப்பதாலும் நெல் வயலிலிருந்தும் கால்நடைகளின் கழிவுகளிலிருந்தும் உற்பத்தியாகின்றது. மீதமுள்ள 40 சதவீதம் சதுப்பு நிலம், தண்ணீர் தேங்கி ஈரமான நிலங்களிலும் மற்றும் கரையான்கள் மூலமாகவும் உற்பத்தி செய்கின்றது.

பூமியிலிருந்து 8 கிலோமீட்டர் வரை உள்ள வாயுமண்டலப் பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. கடந்த 1000 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதிகபட்ச வெப்பம் கடந்த ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளது. புவி வெப்பம் அதிகரிப்பால் தண்ணீர்ப் பற்றாக்குறையும், அதனால் வேளாண்மை உற்பத்தியில் பாதிப்பும் அதிகமாக இருக்கும். ஏழை நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படலாம்.டஇத்தகைய நிலைகளையும் பாலைவனமாவதற்கும், வறட்சிக்கும் எதிரான இத்தினத்தில் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

பாலைவனமாவதற்கும், வறட்சிக்கும் எதிரான இத்தினத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பெண்களுக்கு சிறப்பான முறையில் இதற்கெதிராகப் பாங்காற்ற முடியும் எனக்கூறப்படுகின்றது. குறிப்பாக வளர்முக நாடுகளின் கிராமப்புறப் பெண்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இதற்கெதிரான நடைமுறைகள் பற்றிய நிகழ்வுகளை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வுகளை அதிகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள பல அமைப்புக்கள் முனைகின்றது.

'நிலம் சிதைவடைவதற்கெதிரான செயற்திட்டம் ஒன்று பத்து வருடம் மெற்றிக் நகரில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. பாலைவனமாவதற்கும், வறட்சிக்கும் எதிரான தினம் பற்றி நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்"என ஐ.நா. சபை செயலாளர் "பாங்கி-மூன் தமது செய்தியில் தெரிவித்தார். இத்தினத்தின் வறட்சி நிலப்பிரச்சனையை சர்வதேச சூழல் நிகழ்ச்சி நிரலுக்கு உள்ளடக்க முனைகின்றனர். தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் ஆஸ்திரேலியா, அல்ஜீரியா, கனடா, சீனா, கானா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் சமீபகாலத்தில் இதுசம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தினத்தில் மாத்திரம் பாலைவனமாதல் பற்றி விழிப்புணர்வுடன் செயற்படுவது போதுமானதல்ல.அல்ஜீரியா போன்ற நாடுகள் பாலைவனமாதலை எதித்துப்போராடவும், விவசாய நிலங்களைப்பாதுகாக்கவும் பிரேசில் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் ஒரு தேசிய திட்டத்ததை செயற்ப்படுத்தியுள்ளது. லெபனானில் விவசாய பாதிப்புக்கெதிரான பல முக்கிய செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பாலைவனமாதல் மற்றும் வரடசிக்கெதிரான போராட்டங்கள் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படுகின்றன.

இத்தினம் ஒரு பொது விடுமுறைதினமல்ல. பாலைவனமயமாதல் மற்றும் வறட்சிக்கெதிரான போராட்டதினத்தில் மக்களில் பொது வாழ்வு பாதிக்கப்படுவதில்லை. இங்கு போராட்டம் எனும் போது விழிப்புணர்வு நடவடிக்கையே முதன்மைப்படுத்தப்படுகின்றது.

இத்தினம் தொடர்பான கருப்பொருட்கள் வருமாறு:
2009 - Conserving land and water = Securing our common future
2008 - Combating land degradation for sustainable agriculture
2007 - Desertificaton and Climate Change - One Global Challenge
2006 - The Beauty of Deserts – The Challenge of Desertification
2005 - Women and Desertification
2004 - Social Dimensions of Desertification: Migration and Poverty
2006 - International Year of Deserts and Desertification (IYDD)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+