''மீண்டும் சேர்த்து வைக்கிறது நீ கொடுக்கும் ஏமாற்றம்..''
Subscribe to Oneindia Tamil

என்று சொன்னதும்
மனம் மகிழ்ந்த தருணத்தில்
என் செயலையே மறந்தேன்...
உன்னுடன் எப்படி பேசலாம்
என்று ஒத்திகை நடக்கும் கனவில்
உன்னை நான் நேசிக்கும் இடங்களுக்கு
அழைத்து செல்ல விருப்பங்கள் துடிக்க
உன் பார்வை பட
பிரபஞ்சமும் நானும் தவிக்கிறோம்...
எல்லாம் வழக்கம் போல் கனவில்
நடந்தேறியது அரங்கேற்றம்...
மறு நாள் விடியலில் எனக்கே
எனக்கானது என்று மகிழ்தேன்...
எப்பொழுது சந்திப்பது என்று
ஒரு தகவலும் இல்லை உன்னிடம்
இருந்தும் காத்திருப்பின் அவஸ்தையை
அனுபவிக்கிறேன் இருகொல்லி எறும்பாய்...
முடிவில் தகவல் இல்லாமல்
மவுனமாகி விட என் தனிமை
எனக்கு ஆறுதல் சொன்னது
அதன் உறவு முறை கண்ணிரோடு...
கனவில் நடந்தேறிய கற்பனை
என் நினைவில் நிறைவேறாத
விருப்பங்களை மீண்டும்
சேர்த்து வைக்கிறது நீ
கொடுக்கும் ஏமாற்றம்...












Click it and Unblock the Notifications