முத்தம்
Subscribe to Oneindia Tamil
முத்தம் தந்த நீ இல்லை
நீ தந்த முத்தம் மட்டும்
நினைவில் முள்ளாய்...
பருவச்சுமை பூசப்பட்ட
அந்நாளின் முத்தம்
கனவுகளைக் கொடுத்துப்போனது
பித்தனாய் நான்...
அன்புள்ள என ஆரம்பித்து
எப்போதும் முத்தங்களுடன்
என்று முடியும் உன் கடிதங்களை
அறிவியல் தின்றுவிட்டது
என்றாலும்,
உன் குறுஞ்செய்தி
சுமந்து வரும் விரல்களின் ஸ்பரிசங்கள்...
அப்பிரிவின் இறுதி நொடிகளில்
நாம் பகிர்ந்துகொண்ட முத்தம்
மரணம்வரை கூடவரும்...
எதுவானால் என்ன
அந்த முதல் முத்தம் பற்றி
சொல்லாமலே விடுகிறேன்
அவ்வுணர்வுசொல்ல வார்த்தைகளிலில்லை...












Click it and Unblock the Notifications