உன்னையே தந்துபோகும் குளிர்..
Subscribe to Oneindia Tamil

செவியோரம் சொல்லிப்போன தென்றல்
துளி துளியாய் வந்துவிழும் மழை
சாரலென உன் அருகாமயை அழைத்துவரும்
சில்வண்டுகளின் சப்தம் உன்
கொலுசின் சப்தத்தை சொல்லிப்போகும்
தென்னை ஓலைகளிடையே வந்துவிழும் நிலவும்
மென் தொடுகையாய்
உன்னையே தந்துபோகும் குளிரும்..
நட்சத்திர கனவுகளில் தொலைந்துபோன
என் சித்தம் நீயற்ற வெளிகளில்
எரிக்கும் நிஜமுரைத்து
பாலையில் தள்ளிப்போகும்...என்றாலும்
ஞாபகங்கள் அலைபோல
எப்போதும் ஓய்வதில்லை...
-ரிஷி சேது ([email protected])












Click it and Unblock the Notifications