ஓபாராவை சந்திக்க யு.எஸ். எல்லை கடந்த தமிழ் இளையோர்
அமெரிக்க சிகாக்கோ மாநகரில் உள்ள ஹார்போ கலையகம் நோக்கித் தங்கள் அறுபது நாள்கள் பயணத்தைத் தெடங்கிய மாணவர்கள் வின்சர் டெட்ராய்ட் எல்லையைக் கடந்து அமெரிக்காவினுள் கடந்த வெள்ளிக்கிழமை சென்றுள்ளனர்.
இலங்கைத் தீவிலே இலங்கை அரசினால் முன்னெடுக்கப்படும் மனித அவலத்தை ஒபரா வின்ப்ரேயின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி அந் நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மாணவர்கள் சிலர் இந் நடைப் பயணத்தினை கடந்த மாதம் 4ம் தேதி ஆரம்பித்திருந்தனர்.
“ஒபரா வின்ப்ரேயின் நிகழ்ச்சியில் நான் நிச்சயமாக பங்கெடுப்பேன். 1000 கிலோமீட்டருக்கு மேல் நடந்து வந்த எம்மைச் சந்தித்துக் கதைக்க முடியாது என்று நிச்சயமாகச் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் ஒரு மனிதாபிமானத்தை மிகவும் நேசிக்கும் சிறந்த பெண்மணி. நாம் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பார் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு" இவ்வாறு சிகாக்கோவிற்கான நடைபயணத்தில் ஈடுபட்டிருக்கும் கண்ணன் சிறீகாந்தா தெரிவித்தார்.
மார்ச் மாதம் 4ம் தேதி டொரண்டோவிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னாள் ஐந்து மாணவர்களால் தொடங்கப்பட்ட இப் பயணம், ஒன்டோரியோ மாகாணத்தில் கடுங் குளிரையும் தாங்கிக்கொண்டு 33 நாட்களாகத் தொடர்கிறது.
தங்களது நடைபயணத்தின்போது பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களிற்கு இலங்கைத் தீவின் தற்போதைய நிலை தொடர்பாக தகவல்களை வழங்குகின்றனர். தங்களது பயணம் பற்றி மர்லன் ராஜா விவரிக்கையில்,
“நாங்கள் நடக்காது தூங்காது இருக்கும் போதும் பலதரப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது. எமது இணையத்தளத்தைத் தொடர்ந்து தகவல்களை தரவேற்றிப் பராமரிப்பது, ஊடகங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களிற்கு பதிலளிப்பது, அத்துடன் ஹார்ப்போ கலையகத்தில் உள்ள தனிப்பட்டவர்களுடன் தொடர்புகொள்வது போன்று பலவற்றைச் செய்கிறோம்" என்று தெரிவித்தார்.
“இதுவரை 600 கிலோமீட்டருக்கு மேல் நடந்துள்ளோம். எமது இலக்கை அடைய இன்னும் கிட்டத்தட்ட 450 கிலோமீட்டரளவில் நடக்கவேண்டியுள்ளது. எனினும் இன்றை ஈழத்தின் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு எவ்வளவு விரைவாகச் செல்லமுடியுமோ அவ்வளவு விரைவாக சிகாக்கோ நகரிற்குச் செல்ல எண்ணியுள்ளோம். தேவையேற்படும் போது 24 மணி நேரமும் நடப்பதற்குத் தயாராகவுள்ளோம்" என்று நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவரான கிரிஸ் பாலசிங்கம் தெரிவித்தார்.
ஏற்கனவே அரைவாசிக்கு மேற்பட்ட தூரத்தைக் கடந்துள்ள இவர்கள், மற்றவர்களைச் சந்தித்துக் கருத்துச் சொல்வதை விடுத்துத் தனியே நடப்பதில் மட்டும் கவனமெடுப்பின் 10 நாட்களில் இலக்கை அடையமுடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இப்பயணத்தில் உள்ள கண்ணன் சிறீகாந்தா கூறுகையில், “தமிழ் மக்கள் சமாதானம் பற்றிப் பேசும் போது அது செவிடன் காதில் ஊதிய சங்குபோல் சர்வதேச சமூகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந் நிலையில் ஒபரா வின்ப்ரேயின் நிகழ்வினூக நாம் விடுக்கவுள்ள வேண்டுகோளினை அடிவானில் தெரிவும் நம்பிக்கை நட்சத்திர ஒளியாகக் காண்கின்றார்கள்" என்றார்.
தங்களின் இப் பயணம் வெற்றிபெற உலகெல்லாம் பரந்துவாழும் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட ஆதரவினை இம் மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள். கீழேயுள்ள இணைப்பினூடாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழர்களல்லாத அனைவரையும் ஒபரா வின்ப்ரேயிற்கு மின்னஞ்சல் அனுப்புமாறு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களிடமிருந்து இதுவரை எவ்வித உறுதிமொழியும் கிடைக்காத இந்நிலையில், அனைவரும் மின்னஞ்சல் மூலம் இவர்களது குரல்களின் ஊடாக இலங்கைத் தீவில் நிலவும் மனித அவலத்தை உலகிற்குக் கொண்டுவர சந்தர்ப்பம் வழங்கவேண்டும் ஒன்று ஒபரா வின்ப்ரேயிற்கு மின்னஞ்சல் அனுப்புமாறு அனைவரையும் வேண்டுகிறார்கள்.
மின்னஞ்சலில் நடைப்பயணம் மேற்கொள்ளும் பின்வரும் மாணவர்களின் பெயர்களையும் இணைக்கவும்:
கண்ணன் சிறீகாந்தா (Kannan Sreekantha)
கிறிஸ் பாலசிங்கம் (Kris Balasingam)
மார்லன் இராஜா (Marlan Raja)
இறமணன் திருக்கேதீஸ்வரநாதன் (Ramanan Thirukketheeswaranathan)
விஜய் சிவநேஸ்வரன் (Vijay Sivaneswaran)
மின்னஞ்சல் இணைய இணைப்பு:https://www.oprah.com/ord/plugform.jsp?plugId=216
-
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
ஸ்விஸ் வங்கியில் பணம், லண்டனில் பல ஆயிரம் கோடியில் வீடு! ஈரான் புதிய தலைவர் சொத்து மதிப்பு எவ்வளவு? -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"ஈரான் போர் சீக்கிரமே முடிந்துவிடும்.." டிரம்ப் சொன்ன வார்த்தை.. ஆனால் அடுத்த வரியிலேயே ட்விஸ்ட் -
ஈரான் போருக்கும்.. LPG சிலிண்டருக்கும் என்ன தொடர்பு? எப்படி தட்டுப்பாடு வந்தது? சிக்கலின் ஆதி புள்ளி -
உலகையே திரும்பி பார்க்க வைத்த.. 'மிஸ்டரி' போன் கால்.. புடினிடம் போனை போட்ட கெஞ்சிய டிரம்ப்? -
LPG சிலிண்டர் தட்டுப்பாடு.. சென்னையில் நிலைமை எப்படி இருக்கு? ஹோட்டல்கள் மூடப்படுமா? பின்னணி -
LPG சிலிண்டர் தட்டுப்பாடு டீசர்தான்.. மெயின் பிரச்சனையே இனிதான்.. கவனமா இருங்க.. வரப்போகும் சிக்கல் -
ஈரானிடம் சிக்கிய அமெரிக்கா! அலறும் இஸ்ரேல்! ட்ரம்புக்கு வந்த அவசர போன்! மிடில் ஈஸ்ட் ‘திக் திக்’ -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்













Click it and Unblock the Notifications