பண வீக்கமும் முதலீடுகளின் மதிப்பும்!

உலகில் உள்ள வரிகளிலேயே கடுமையான வரி, பண வீக்கம் தான். பண வீக்கத்தால் நமக்கு வருமானத்தை விட கூடுதலாக ஆகும் செல்வை அரசு வரியாக போட்டிருந்தால் யாரும் அதை ஏற்று கொள்ளாமல் போராட்டம் நடத்தி வாபஸ் பெற வைத்திருப்பர்.
ஆனால் நம் கண்ணுக்கு நேரிடையாகத் தெரியாமல் மறைமுக வரியாக வருடந்தோரும் வருமானத்தை மிஞ்சும் பண வீக்கம் பற்றி அவ்வளவாக நாம் கவலைபடுவதில்லை.
சூடான வெந்நீரில் ஒரு தவளையை தூக்கி போட்டால் அது உடனே முயற்சி செய்து வெளியே குதித்து தப்பி விடும். ஆனால் அதே தவளையை சாதாரண நீரில் போட்டு சிறிது சிறிதாக கொதிக்க விட்டால் அது தப்பிக்க முயலாமல் இறந்து விடும்.
பண வீக்கம் என்பது இரண்டாவது வகையை சேர்ந்தது. பண வீக்கம் என்பது குறைவான பொருளை நிறைய பணம் துரத்துவது எனலாம். கடந்த சில காலமாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பணத்தை வரலாறு காணாத அளவில் அடித்து வெளியிடுவதால் கூடிய சீக்கிரம் மிக பெரிய பண வீக்கம் வர கூடிய வாய்ப்புகள் உள்ளன.
1990களில் ஜப்பானில் இது போன்ற பொருளாதார நெருக்கடி வந்தபோது ஜப்பான் அரசு எடுத்த நடவடிக்கைகளை ஒத்தே தற்போது மற்ற நாட்டு அரசுகள் செயல்படுகின்றன.
. தற்போது அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கையால் இருவகை விளைவுகள் ஏற்படும் என பொருளாதார வல்லுனர்கள் கணிக்கினர்.
1. Price Inflation (வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவை பொருட்கள் வாங்குவது போன்றவற்றின் மதிப்பு அதிகரித்தல்)
2. Asset Deflation (வீடு, நிலம் மற்றும் பங்கு சந்தை போன்ற முதலீடுகளின் மதிப்பு குறைதல்).
அதாவது நாம் அன்றாட தேவைகளுக்கு வாங்கும் பொருளின் விலை அதிகரிக்கும் ஆனால் நம்முடைய முதலீட்டின் விலை அந்த அளவுக்கு உயராது. இந்த நிலை தற்போதே இந்தியாவில் தொடங்க உள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை மேலை நாடுகளில் ஏற்படுத்த போகும் தாக்கத்தை விட இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைவாக இருக்கும். ஆனாலும் இதை பற்றி தற்போதைய நடுத்தரவயதினர் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
நீங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெரும் காலத்தில் செலவிட என்று பல முதலீடுகளை செய்து வைத்திருப்பீர்கள். அதாவது நிலம், வீடு,மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்கு சந்தை முதலீடு என்று. ஆனால் அவற்றின் உண்மயான மதிப்பு பண வீக்கத்தை வைத்து பார்க்கும் போது மிகவும் குறைந்திருக்கும். அப்போதைய விலைவாசியும் மிக அதிகமாக இருக்கும்.
இது போன்ற நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்பட போவது பணி ஓய்வு பெற்றவர்களாக இருப்பர். அமெரிக்காவில் தற்போதைய பொருளாதார சரிவால், பணியிலிருந்து ஓய்வு பெற நினைத்தவர்கள் போதிய பணம் இல்லாததால் இன்னும் நிறைய ஆண்டுகள் தங்கள் தள்ளாத வயதில் வேலை செய்ய வேண்டி உள்ளது.
இத்தகைய நிகழ்வு பற்றி டேனியல் அமெர்மேன் என்னும் பொருளாதார வல்லுனர் கூறுவதை கேளுங்கள், If Your asset doubles in price, but a dollar will only buy what a quarter used to, then you didn"t double your money, you just lost half your savings, and any measures that doesn"t pick up on the difference isn"t worth using.
இது போன்ற நிகழ்வுகளால் மக்கள், பொருட்களின் பண வீக்கம் (price inflation) மற்றும் சேமிப்பு பண வடிதல் (asset deflation) ஆகிய இரண்டாலும் பாதிக்கபடுவர்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications