டாலரிலிருந்து யூரோவுக்கு மாறும் ரஷ்யா

டாலரின் மதிப்பை உலக பொருளாதார சந்தையில் உயர்த்தி பிடிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது உலகில் பெரும்பாலான நாடுகளின் சேமிப்பு நாணயமாக இருப்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
உலக நாடுகளின் சேமிப்பு செல்வங்களில் 64% டாலரே உள்ளது.சமீபத்தில் வெளியிட பட்ட யூரோ நாணயமும் தன் பங்கை அதிகரித்து 26% என்ற அளவில் முன்னேறி உள்ளது. சமீபத்திய நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்க அரசு தன் கடன்களை வேகமாக அதிகரித்து வருவதால் உலக சேமிப்பு நாணயத்தில் டாலரின் பங்கு குறையும் என ஒரு சில பொருளாதார நிபுணர்களால் கணிக்க பட்டு வந்தது.நிதி நெருக்கடியால் டாலரின் புழக்கம் சர்வதேச சந்தையில் சிறிதளவு குறைந்துள்ளது.
ஆனால் பெரும்பாலான நிதி பரிவர்த்தனைகள் (முக்கியமாக பெட்ரோல்) டாலரிலேயே நடைபெருகிறது.
அதே சமயம் அமெரிக்க அரசின் டிரசரி பாண்டுகள் மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருத படுவதால் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் டாலர் சொத்துக்களை கடந்த சில மாதங்களாக அதிக அளவில் வாங்கி குவிக்க தொடங்கியுள்ளன.
சீனா முதன் முறையாக அமெரிக்க அரசின் செயல்பாட்டால் தங்களது (http://tamilfuser.blogspot.com/2009/03/blog-post_24.html) முதலீட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. ஆனால் அது சேர்த்து வைத்துள்ள டாலர் சொத்துக்களின் மதிப்பை காப்பாற்ற மேன்மேலும் டாலர் சொத்துக்ளை வாங்க வேண்டிய கட்டயத்தில் டாலர் வலையில் வீழ்ந்துள்ளது. அந்த வலையிலிருந்து மீண்டு வர சில முயற்ச்சிகளை எடுக்க தொடங்கி உள்ளது.
இது உலக அரங்கில் ஒரு மாற்றத்தின் தொடக்கமாக கருத பட்டது. தற்போது மற்றொரு மிக பெரிய நாடு இம்மாற்றத்திற்கான முயற்சியில் ஈடு பட தொடங்கி உள்ளது. அதுதான் (http://english.pravda.ru/business/finance/19-05-2009/107581-dollar_russia-0) ரஷ்யா.
கடந்த ஆண்டு வரை தன் சேமிப்பு செல்வத்தில் பெரும் பகுதி டாலர் சார்ந்த சொத்துக்களையே வைத்திருந்தது. ஆனால் தற்போது அது டாலர் சொத்துக்களை பெருமளவு யூரோ சார்ந்த சொத்துக்களாக மாற்ற தொடங்கி உள்ளது. ரஷ்யாவின் 47.5 சதவித சேமிப்பு செல்வங்கள் யூரோ சார்ந்ததாக உள்ளது. ஆனால் டாலர் சார்ந்த செல்வங்களோ 41.5% தான் உள்ளது.
டாலருக்கு மாற்றாக மற்றொரு நாணயம் வளர்வது என்பது உடனடியாக நடக்க கூடிய செயல் அல்ல. கிரிகெட் தர வரிசையில் முதலிடம் மாறுவது போல் இது எளிதாக நடக்க கூடியது அள்ள. ஏனென்றால் பல நாடுகளின் சேம்ப்பின் மதிப்பு இதன் மூலம் குறைய கூடும். ஆனால் இந்த மாற்றத்தின் ஆரம்பம் தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது.
-
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
அமெரிக்க போரில் மேஜர் திருப்பம்.. யுரேனியத்தை வழங்க ஈரான் ஒப்புதல்? பின்னணியில் நடப்பது என்ன? -
மிகப்பெரிய டவிஸ்ட்.. யுரேனியத்தை கைவிடும் ஈரான்.. அமெரிக்காவிடம் தாராளமாக விட்டுக் கொடுக்க முடிவு -
இன்னும் சில மணி நேரத்தில் நல்ல செய்தி.. டெல்லியில் நின்றபடி அமெரிக்கா அதிரடி! கவனிக்கும் உலக நாடுகள் -
"திறக்கப்படும் ஹார்முஸ்.." முடிவுக்கு வரும் அமெரிக்கா ஈரான் போர்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு! -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
"நான் தான் இயேசுவின் அவதாரம்.." வெள்ளை மாளிகையில் துப்பாக்கி சூடு.. அடுத்த நொடி நடந்த பயங்கரம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட்












Click it and Unblock the Notifications