Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கத்தை வாங்கி குவிக்கும் செளதி அரேபியா

Subscribe to Oneindia Tamil

Gold Coins
-சதுக்கபூதம்

1989ம் ஆண்டு உலக சேமிப்பு செல்வத்தில் (Reserve) தங்கத்தின் பங்கு 32.7 சதவீதம். யூரோ அறிமுகபடுத்த பின் ஐரோப்பிய மத்திய வங்கிகள் தங்கத்தை சிறிது சிறிதாக விற்க ஆரம்பித்தன.

ஆசிய வங்கிகளோ அமெரிக்க கடன் பத்திரங்களை (டாலர்) அதிக அளவில் சேமிப்பு செல்வமாக வாங்கி குவிக்க ஆரம்பித்தன. அதன் விளைவாக தங்கத்தின் பங்கு சேமிப்பு செல்வத்தில் 10.3 சதவீதமாகக் குறைந்தது.

அரசுகளால் அடிக்கப்படும் பணம் மற்றும் பணம் அடிப்படையிலான செல்வங்களுக்கு மாற்றாக இருக்கும் சேமிப்பு செல்வமாக (anti-dollar) தங்கத்தை கருதலாம்.

சமீபத்திய நிதி நெருக்கடி காரணமாக மத்திய வங்கிகள் பணப் புழக்கத்தை அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் கூடிய விரைவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற கணிப்பு பல பொருளாதார வல்லுனர்களிடம் உள்ளது.

அதனால் பணவீக்கத்திலிருந்த ஓரளவு பாதுகாப்பு பெற அனைவரும் தங்கத்தை நாடுவது வழக்கம். அதன் விளைவாக தற்போது ஐரோப்பிய மத்திய வங்கிகள் தங்கத்தை விற்கும் வேகத்தை சிறிதளவு குறைத்துள்ளன.

தற்போது ஆசிய மற்றும் பிற வளரும் நாடுகளின் வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளன. இந்தியா 200 டன் தங்கத்தை சர்வதேச நிதி நிறுவனத்திடமிருந்து வாங்கியது. ஆனால் சீனாவோ கடந்த 6 ஆண்டுகளில் கமுக்கமாக தன் தங்க கையிருப்பை இரு மடங்காக்கிவிட்டது.

சீனா மறைமுகமாக மேலும் அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவிப்பதாக வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்தியா சீனா மட்டுமின்றி ரஷ்யா, வெனிசூலா, மெக்சிகோ மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளன.

இந்தியா, சீனா போன்ற நாடுகள் தங்கத்தை அதிக அளவு வாங்கினாலும் அந்த நாடுகளின் சேமிப்பு செல்வத்தில் தங்கத்தின் பங்கு 2 முதல் 6 சதவீதம் மட்டுமே.

ஆனால், அமெரிக்காவிடம் தான் உலகின் மொத்த சேமிப்பு செல்வத்தில் உள்ள தங்கத்தில் 77 சதவீதம் கையிருப்பு உள்ளது குறிப்பிடதக்கது.

இந்த வரிசையில் சமீபத்தில் வெளி வந்துள்ள செய்தி செளதி அரேபியா பற்றியது. செளதி அரேபியாவின் தங்க கையிருப்பு 322.9 டன்கள் என்று தெரிய வந்துள்ளது.

இது சவுதி அரேபியா வைத்திருந்ததாக கருதபட்ட தங்கத்தின் அளவை விட (143 டன்கள் ) இரு மடங்குக்கும் அதிகம்.

வளைகுடா நாடுகள் இணைந்து பொது நாணயத்தை வெளியிட முயற்சி செய்து வருகின்றன. இந்த வருடம் அந்த நாணயம் வந்திருக்க வேண்டும். யூரோ பிரச்சனையாலும் பிற காரணங்களினாலும் அது மேலும் 5 ஆண்டுகளுக்கு தள்ளிப் போய்விட்டது.

அந்தப் பொது நாணயம், தங்க கையிருப்பை கொண்டு, தங்க மாற்று நாணயமாக இருக்கலாம் என்ற வதந்தியும் உலவி வந்தது. இந் நிலையில் தான் செளதி தங்கத்தை வாங்கிக் குவித்துள்ள விவரம் வெளியில் வந்துள்ளது.

சீனா மிக அதிக அளவு தங்கத்தை வாங்கினால் தங்கத்தின் விலை அதிகம் உயர்ந்து, அதற்கு மாற்றான அமெரிக்க டாலரின் மதிப்பு ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.

சீனாவின் சேமிப்பு பெருமளவு டாலராக இருப்பதால், இது சீனாவுக்கு பெரிய பாதிப்பாக அமைய வாய்ப்புள்ளது. உலகில் அதிகமாக உபரி டாலரை வைத்துள்ள சீனா, இதனால் அதிக அளவு தங்கத்தை குறைந்த கால இடைவெளியில் வாங்குமா என்பதும் சந்தேகமே.

அதே நேரத்தில் மேற்கு நாடுகளின் தங்க கையிருப்பு குறைந்து வருவதால் அந்நாடுகள் மரபு சாரா முறைகளில் எதாவது உத்தியை கொண்டு தங்கத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வாய்ப்பு எப்போதும் உள்ளது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+