ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம் பாஜக வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?
டெல்லி: அசைக்க முடியாத சக்தியாக பாஜக இருக்கிறது என்று அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறும் நிலையில்தான், பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளன எதிர்க்கட்சிகள். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது தான் அந்த பிரம்மாஸ்திரத்தின் பெயர்.
இந்துத்துவா என்ற பெயரில் அனைத்து ஜாதியினரையும் ஒரே வாக்கு வங்கியாக மாற்றி வருகிறது பாஜக. இதனால் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும் தான் பலன் கிடைக்கிறது என்பதை காட்டுவது போல் அமைந்துவிட்டது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு. இதை அனைத்து மாநிலங்களும் செய்யும்போது "இந்துவாக ஒன்றிணைவீர்கள்" என்ற பாஜகவின் கோஷம் வலு இழக்க தொடங்க கூடும்.

இதன் வீரியத்தை உணர்ந்துதான் "இந்தியாவை ஜாதி ரீதியாக எதிர்கட்சிகள் பிளவு படுத்துகின்றன" என்று பேசி அதிரடியை அடுத்த நாளே ஆரம்பித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
வட இந்தியாவின் பல மாநிலங்களிலும்.. தென்னிந்தியாவின் சில மாநிலங்களிலும் கூட, நரேந்திர மோடியின் செல்வாக்கு வளர்ந்து விட்டதாக பல கருத்துக்கணிப்புகள் கூறும் நிலையில், ஜாதி வாரி கணக்கெடுப்பு இதை வீழ்த்தி விட முடியுமா என்பதுக் கேள்விக்குறிதான். ஆனால் அசைத்து விட முடியும் என்று நம்புகின்றன எதிர்க்கட்சிகள்.
இதை அப்படியே கடந்து சென்று விட வேண்டும் என்று நினைக்கிறது பாஜக. ஆனால் 5 மாநில தேர்தல் நெருங்கும்போது நாடு முழுக்க இந்த குரல் எழுந்தால் என்ன செய்ய, அதற்கு பதில் என்ன, என்று தேடுதலையும் தொடங்கி இருக்கிறது. சில பந்துகளை அடிப்பதா, அப்படியே விடுவதா என்ற குழப்பம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்படும். பாஜகவிற்கு இந்த விஷயம் அப்படித்தான்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது, பாஜகவுக்கு எதிரான ஆயுதம் என்பதை உணர்ந்துதான் பீகாரில் ஜாதிவாரி கணக்கு வெளியான உடனேயே, நாடு முழுவதும் இந்த மாதிரியான கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். பிரியங்காவும் இதை லேசில் விடுவதாக இல்லை.
5 மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தலில் இந்த விவகாரம் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பை தடுக்குமா , தடுக்காதா, அல்லது சீட் எண்ணிக்கையில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமா, உங்கள் கருத்து என்ன பதிவிடுங்கள் பார்க்கலாம்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications