இப்போது பிளாக் ஹோல் பற்றி கொஞ்சம் பார்ப்போம்..
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்ன General relativity தியரியின்படி ஒரு மாபெரும் நட்சத்திரம் உருக்குலைந்து, வெடித்துச் சிதறாமல், உள் வெடிப்புக்கு உள்ளாகி, தனக்குள்ளேயே தன்னை சமாதி செய்து கொள்ளும்போது உருவாவது தான் பிளாக் ஹோல். இந்த பிளாக் ஹோல்களை பார்க்க முடியாது. ஆனால், அதைச் சுற்றி நடக்கும் வானியல் நிகழ்வுகளை வைத்து அருகே பிளாக் ஹோல் இருப்பதை உணர முடியும். அப்படி என்ன நிகழ்வுகள் நடக்கும்?.
பிளாக் ஹோலின் ஈர்ப்பு விசை கணக்கிட முடியாத அளவுக்கு வலியது. இதனால் இது தன்னருகே உள்ள நட்சத்திரங்களின் ஒளியை விழுங்கும், அண்டத்தின் கதிர்வீச்சுகளை விழுங்கும், ஈர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நட்சத்திரங்களையும் கூட விழுங்கிவிடும். தன் அருகே உள்ள விண்வெளிப் பகுதிகளையும் நேரத்தையும் கூட (Space time) வளைத்துவிடும். இது தான் பிளாக்ஹோல்.
நீளம், அகலம், ஆழம் என்ற மூன்றை அடக்கியது தான் முப்பரிமாணம். இதில் நேரத்தையும் சேர்த்தால் வருவது தான் 4வது பரிமாணம். இது தான் 'ஸ்பேஸ்டைம்'.
அதே நேரத்தில் எல்லா பிளாக்ஹோல்களும் தன்னருகே உள்ளவற்றை சாப்பிட்டு ஏப்பம் விடுபவை இல்லை. சில gentle பிளாக்ஹோல்களும் உள்ளன. இவை தனக்குள் நுழையும் பொருட்களை சேதப்படுத்தாமல் பத்திரமாக அனுப்புவதும் உண்டு. இந்த 'நல்ல' பிளாக்ஹோல்களை "gentle singularity" என்கிறது நவீன இயற்பியல். இந்தப் படத்தில் காட்டப்படுவதும் அது மாதிரியான ஒரு பிளாக்ஹோல் தான்.
மீண்டு்ம் சினிமா பக்கம்...
ஆக, சனி கிரகத்துக்கு அருகே உருவான வார்ம்ஹோல் வழியாக பிளாக்ஹோலுக்கு அருகே உள்ள 3 பூமிகளிலும் தரையிறங்கி ஆய்வு செய்த 3 விஞ்ஞானிகளிடம் இருக்கும் முழுத் தகவல்களையும் திரட்டி வரும் வேலையை செய்ய நாஸா திட்டமிடுகிறது.
இதற்காக Endurance விண்கலகத்தை அனுப்புகிறது. அதில் ஹீரோ மேத்யூ மெக் கொனாஹே, ஹீரோயின் அன்னா ஹாத்வே, இரண்டு உண்மையான ஹீரோ/ஹீரோயின்களான TARS, CASE என்ற இரு ரோபோக்களும் பயணிக்கின்றன. உடன் மேலும் இரு விஞ்ஞானிகள். மற்றும் ஆயிரக்கணக்கான சினையாக்கப்பட்ட மனிதக் கரு முட்டைகளையும் எடுத்துச் செல்கின்றனர். மனித இனத்தை அங்கே விதைக்க....
மறுபடியும் சயின்ஸ்...
பிளாக்ஹோலில் ஈர்ப்பு விசை மிக மிக மிக அதிகம். அதிகமான ஈர்ப்பு விசையால் Gravitational time dilation என்ற ஒரு சம்பவம் நடக்கும் என்கிறார் ஐன்ஸ்டைன். அதாவது ஈர்ப்பு விசை அதிகரிக்க அதிகரிக்க நேரம் மிக மிக வேகமாக ஓடும்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications