• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீண்டும் சினிமா...

By A K Khan
|

இதன்படி பிளாக்ஹோலை கடந்து இவர்கள் பயணிக்கையில் நேரத்தின் நகர்வு மிக மிக அதிகரிக்கும். பிளாக்ஹோல் அருகே 1 மணி நேரம் என்பது பூமியில் 7 ஆண்டுகள். இவ்வாறாக இவர்கள் பயணிக்க பயணிக்க பூமியில் இவர்களது மகன், மகள், அப்பா, தம்பி, பக்கத்து வீட்டுக்காரருக்கு எல்லாம் வயதாகிக் கொண்டே போக, Endurance கலத்தில் பயணிப்பவர்களுக்கு தங்களது வயதில் சில மணி நேரங்கள் மட்டுமே கூடுகிறது.

வார்ம்ஹோலில் பயணிக்கும்போதும், அடுத்து பிளாக் ஹோல் அருகே பயணிக்கும்போதும் அண்ட சராசரங்களும் காலமும் வளைந்து, சுருங்கி, சுருள்வதும், அதற்கு இணையான இசையும் என மிரட்டி எடுக்கிறார் நோலன்.

Interstellar

இந்தப் பயணத்தில் முதலில் நாஸா விஞ்ஞானி மில்லர் தரையிறங்கிய கிரகத்தை ஆராயச் செல்கின்றனர். Endurance விண்கலத்தில் இருந்து பிரிந்து Ranger எனற சிறிய கலத்தில் இந்த கிரகத்தை அடைகின்றனர். ஆனால், அது முழுக்க முழுக்க தண்ணீர் கிரகம். அது மட்டுமல்ல, தரையே இல்லாத இந்த கிரகத்தை பிளாக்ஹோலின் ஈர்ப்பு விசை காரணமாக மனிக்கு ஒரு முறை இமயமலை உயர சுனாமிகள் தாக்குகின்றன. இங்கே உடன் வந்த ஒரு விஞ்ஞானி உயிரிழக்க மற்றவர்கள் தப்பி அங்கிருந்து கிளம்புகின்றனர். இது மனித இனம் வாழ முடியாத கிரகம். இந்த கிரகத்துக்கு போய்விட்டு 3 மணி நேரத்தில் இவர்கள் திரும்புகின்றனர் Endurance விண்கலத்துக்கு. ஆனால், அதற்குள் நாம் வாழும் பூமியில் 23 வருடம் கடந்து விடுகிறது.

இந் நிலையில் Endurance விண்கலகத்தில் போதுமான அளவு எரிபொருள் இல்லாத நிலையில், அடுத்ததாக Edmund சென்ற கிரகம் அல்லது Mann தரையிறங்கிய கிரகங்களில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமே செல்ல முடியும் என்ற நிலைமை உருவாகிறது. எங்கே போகலாம் என்பதில் முட்டல் மோதல்கள் நடந்து கடைசியில் Mann கிரகத்துக்குச் செல்கின்றனர். Endurance விண்கலத்தில் இருந்து பிரிந்து Lander என்ற துணைக் கலத்தில் இந்த கிரகத்தை மிக மிக ஆர்வத்துடன் அடைகின்றனர்.

காரணம், இந்த கிரகம் ரொம்ப சூப்பர். ஷாப்பிங் மால் மட்டும் தான் இல்லை. மற்ற எல்லாமே இருக்கிறது என்பது மாதிரி இந்த கிரகத்தைப் பற்றி பெரும் புகழ் பாடுகிறார் Mann. இந்த கேரக்டரில் நடித்திருப்பவர் Matt Damon.

Matt Damon

அட்டகாசமான ஹாலிவுட் ஹீரோ. ஆனால், இதில் எதிர்மறை ரோலில் பின்னி எடுக்கிறார். மனித இனத்துக்காக தன்னை தியாகம் செய்யத் தயாராகி இந்த கிரகத்துக்கு வந்தவர், அதில் மேகமும் கூட ஐஸ்கட்டியாக இருப்பதைக் கண்டு, எப்படியாவது பூமிக்குத் திரும்பிவிட திட்டமிட்டு, இந்த கிரகம் மனிதன் வாழ மிக மிகச் சிறந்த கிரகம் என பொய்யான தகவல்களை பூமிக்கு அனுப்பி Endurance விண்கலத்தை வரவழைக்கிறார். இதன்மூலம் தானும் தப்பி மீண்டும் பூமிக்குச் செல்வதே அவரது திட்டம்.

ஒரு ஐஸ் கிரகத்துக்கு தங்களை வரவழைத்தவருடன் Endurance குழு மோதலில் இறங்க, இவர்களை காலி செய்துவிட்டு தப்ப முயலும் Matt Damon தானும் உயிரிழந்து Endurance விண்கலத்தையும் சேதப்படுத்தி விடுகிறார்.

ஆனாலும் ஒரு வழியாக ஹீரோ, ஹீரோயின் குழு சேதமடைந்த விண்கலத்தோடு மிச்சமிருக்கும் இன்னொரு பூமியான Edmunds கண்டறிந்த கிரகத்துக்குச் செல்ல முயல்கின்றனர். வழியில் ஹீரோயினை மட்டும் Edmunds கிரகத்துக்கு Ranger கலத்தில் அனுப்பிவிட்டு ஹீரோ உயிரைப் பணயம் வைத்து பிளாக்ஹோலுக்குள் நுழைகிறார்.

புவி ஈர்ப்பு விசையை மீறி பூமியில் இருந்து மனிதர்களை பெரும் எண்ணிக்கையில் ஏற்றிச் செல்லும் மாபெரும் விண்கலங்களை உருவாக்க, பிளாக்ஹோலின் ஈர்ப்பு விசை குறித்த அதிகமான விவரங்கள் (gravitational singularity) தேவைப்படும் என நாஸா சொல்லி அனுப்பியதால் அந்த வேலையில் இறங்குகிறார்.

`The science of Interstellar: fact or fiction?

பிளாக்ஹோலுக்குள் நுழைந்த ஹீரோ 5வது பரிமாணம் (5th dimension) என்ற ஒரு நிலையை அடைகிறார். "tesseract" என்றழைக்கப்படும் இந்த பரிமாணத்தில் நாம் கடந்து வந்த காலத்தை மீண்டும் எட்டிப் பார்க்க முடியும். அதில் திருத்தங்களையும் செய்ய முடியும். இதன்மூலம் பூமியில் உள்ள விஞ்ஞானியான தனது மகளுக்கு புவி ஈர்ப்பு விசையைத் தாண்டி பெரும் அளவில் மனிதர்களை புதிய பூமிக்குக் கொண்டு வருவது குறித்து பிளாக்ஹோலுக்குள்ளே தான் அறிந்த விவரங்களை அனுப்புகிறார்.

இதை வைத்து மனித இனம் அந்த புதிய பூமியை நோக்கி நகர்வதாக படம் முடிகிறது.

இதில் சனி கிரகத்துக்கு அருகே வார்ம்ஹோல் தானாக உருவாகவில்லை. அதை யாரோ உருவாக்கி அழிந்து கொண்டிருக்கும் நமது பூமியில் இருந்து மனித இனத்தை இன்னொரு பூமிக்குச் செல்ல வழி காட்டி காப்பாற்றுகிறார்கள். அந்த யார் என்பது தான் கதையின் கரு.

அவர்கள் வேற்று கிரகவாசிகள் என்ற கோணத்திலேயே கதை நகர்கிறது.. ஆனால், கடைசியில் அவர்கள் வேற்று கிரகவாசிகள் அல்ல, நமது எதிர்கால மனித சந்ததியினர் தான் என்று முடிகிறது. அதாவது எதிர்கால மனித சந்ததியினரால் காலத்தையும் அண்டவெளியையும் (space time) நினைத்த மாதிரி வளைக்க முடியும் என்கிறது இந்தப் படம்.

ஆனால், இந்தப் படம் நமக்கு பிளாக்ஹோல்கள், வார்ம்ஹோல்கள் பற்றி விளக்கம் தரும் டிஸ்கவரி/நேசனல் ஜியோகிராபிக் டாகுமெண்டரி படம் என்று நினைத்து போகாதீர்கள். இது உங்களை நோக்கி நிறைய கேள்விகளை வீசும் படம்...

இந்தக் கேள்விகளுக்கு பதில்களும் கேள்விகளாக இருக்கப் போகின்றன!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
By the time Christopher Nolan signed up to direct Interstellar and started writing its script, astrophysicist Kip Thorne had been working with Nolan’s brother, Jonathan on getting his ideas onto film for years. When Chris and Thorne met, they quickly found common ground: Thorne wanted science in the story, and Nolan wanted the story to emerge from science. So the Interstellar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more