Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரரான இஷான் கிஷன் தனது காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாடலான அதிதி ஹுண்டியா, இஷான் கிஷனை விட மூத்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அதேபோல் டி20 உலகக்கோப்பையை தொடர்ச்சியாக 2 முறை வென்ற முதல் அணி என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.

T20 World Cup 2026

இந்த வெற்றிக்கு பின் இந்திய அணி வீரர்கள் தங்களின் குடும்பத்தினருடன் மைதானத்தில் கொண்டாடினர். அப்போது ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹிகா சர்மாவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்க, மறுபுறம் இஷான் கிஷனும் உலகிற்கு அவரின் காதலியை அறிமுகம் செய்து வைத்தார். ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாடல் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலமான அதிதி ஹூண்டியா உடன் இஷான் கிஷன் காதலில் இருக்கிறார்.

இதையடுத்து இஷான் கிஷன் - அதிதி ஹூண்டியா ஆகியோரின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி பேசுபொருளாகியது. அதிதி ஹூண்டியா ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாடல். இவர் 2017ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று இறுதிப் போட்டி வரை முன்னேறியவர். இதன்பின் 2018ஆம் ஆண்டு மிஸ் டிவா பட்டத்தை வென்றார்.

ஜெய்ப்பூரில் உள்ள செண்ட் சேவியர் கல்லூரியில் படித்த இவர், மாடலிங் துறையில் ஈடுபட தொடங்கினார். சொந்தமாகவே சில பிராண்ட்களை வெளியிட்டு தொழில் முனைவோராகவும் இருக்கிறார். அதேபோல் இஷான் கிஷன் - அதிதி ஹூண்டியா இடையிலான உறவு 2019ஆம் ஆண்டே தொடங்கியது. 2019 ஐபிஎல் தொடரின் போதே அதிதி ஹூண்டியா கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வந்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இஷான் கிஷனை விடவும் 2 வயது மூத்தவர் அதிதி ஹூண்டியா.. இஷான் கிஷனுக்கு 27 வயதாகும் சூழலில், அதிதிக்கு 29 வயதாகிறது. இவர்களின் காதல் உறவு இஷான் கிஷனின் குடும்பத்தினருக்கும் தெரியும் என்று சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் திருமணம் நடக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இஷான் கிஷனின் ஆட்டம் அபாரமாக இருந்தது. இறுதிப் போட்டியில் 25 பந்துகளில் 54 ரன்களை விளாசியதோடு, மொத்தமாக 9 இன்னிங்ஸில் விளையாடி 317 ரன்களை குவித்துள்ளார். இந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சனுக்கு அடுத்த இஷான் கிஷன் இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+