மஞ்சள் தாலி கட்டற நேரத்தில்.. "நீ வந்துட்டியாடா" ஆந்திரா நபரை கட்டிப்பிடித்து மணப்பெண் செய்த காரியம்
சென்னை: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அந்த இளம்பெண்ணின் வாழ்க்கை, ஒரு சில நிமிடங்களில் ஒட்டுமொத்த கிராமத்தையே அதிர வைக்கும் என்று அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை.. கல்யாண மண்டபத்திலிருந்த எல்லாருமே ஒரு செகண்ட் ஆடிப்போய் விட்டார்கள்.. மணமேடையில், அதுவும் தாலி கட்டும் நேரத்தில் நடந்த அந்த ஆச்சரிய சம்பவம் என்ன தெரியுமா?
என்.டி.ஆர் மாவட்டம் மைலாரம் பகுதியை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை உயிருக்கு உயிராகக் காதலித்து வந்தார்..

ஆந்திரா மணப்பெண்
இவர்களது காதல் விவகாரம் ஒருகட்டத்தில் இளம்பெண்ணின் வீட்டிற்குத் தெரியவர, அங்கு புயல் வீசத் தொடங்கியது.. காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், மகளின் சம்மதத்தை பொருட்படுத்தாமல் அவசர அவசரமாக வேறு ஒரு இளைஞரை தேடிப்பிடித்து திருமண நிச்சயதார்த்தத்தை முடித்தனர்..
கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன.. நேற்று முன்தினம் அந்தப் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விழா களைகட்டியது.. மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் என ஒட்டுமொத்த பேரும் கல்யாண மண்டபத்தில் குவிந்தனர்..
மஞ்சள் தாலி
மற்றொருபக்கம் பாட்டு கச்சேரி அமர்க்களப்பட்டது.. இசைக்கு ஏற்றவாறு அங்கிருந்த இளைஞர்களும் இளம்பெண்களும் உற்சாகமாக டான்ஸ் ஆடினார்கள். மொத்தத்தில் மண்டபமே விழாக்கோலம் பூண்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தது..
மறுநாள் காலை, திருமண முகூர்த்த நேரம் நெருங்கியது.. மணமகன் மற்றும் மணமகள் இருவரும் பட்டு உடையில் ஜொலி ஜொலிக்க, மணமேடையில் உட்கார வைக்கப்பட்டனர்..
புரோகிதர்கள் வேத மந்திரங்களை ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க, கெட்டி மேளம் கொட்டும் அந்த உன்னத தருணத்திற்காக அனைவரும் காத்திருந்தனர்.. மணமகன் தாலியை எடுத்து மணமகளின் கழுத்தில் கட்டப்போகும் அந்த விநாடியில், திருமண மண்டபமே ஸ்தம்பிக்கும் வகையில் அந்த சம்பவம் நடந்தது.. திடீரென இளைஞர் ஒருவர் கூட்டத்திலிருந்து ஓடி வந்து மணமேடையின் முன்பாக நின்றார்..
கல்யாண மண்டபம்
அந்த இளைஞரை பார்த்ததுமே மணமேடையில் உட்கார்ந்திருந்த மணப்பெண், சற்றும் யோசிக்காமல் அங்கிருந்து எழுந்து ஓடினார்.. "நீ வந்துவிட்டாயா?" என்று நெகிழ்ச்சியுடன் கேட்டபடி, அந்த இளைஞரை அனைவர் முன்னிலையிலும் இறுக்கக் கட்டியணைத்துக் கொண்டார்.. இதைப் பார்த்த மணமகன் மற்றும் அங்கு திரண்டிருந்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்..
அப்போது அந்தப் பெண், "நான் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இவரைத்தான் காதலிக்கிறேன், இவருடன் மட்டுமே என் வாழ்நாள் முழுவதும் வாழ விரும்புகிறேன்" என்று மண்டபத்தில் உரக்க ஆவேசமாக சொன்னார்.. இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை பிடித்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்..
இளைஞரை கட்டிப்பிடித்த மணப்பெண்
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இளைஞரை மீட்டனர்.. இதையடுத்து அந்தத் திருமணம் உடனடியாக நிறுத்தப்பட்டது..
"எங்களுக்கு ஒரே மகள் என்பதால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து, ஆசை ஆசையாக இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்தோம்.. ஆனால் மகளின் இந்த காரியத்தால், ஊர் முன்னிலையில் நாங்கள் அவமானப்பட்டு நிற்கிறோம்" எனப் பெற்றோர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.. சினிமா காதல் காட்சியையே மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இது இணையத்திலும் பேசுபொருளாகி வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications