Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரிஷாவால் விஜய் அரசியலுக்கு பிரச்சனை என பேசிய பார்த்திபன்! நாய் வீடியோவை வைத்து திரிஷா போட்ட போஸ்ட்! புது பஞ்சாயத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் மற்றும் திரிஷா நடிகை Trisha Krishnan தொடர்பான ஒரு சம்பவம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. இந்த நிலையில் திரிஷா பற்றி பார்த்திபன் பேசியதும் பெரிய பரபரப்பில் ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இப்போது திரிஷா தன்னுடைய நாய் வீடியோவை வைத்து ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அது விமர்சனங்களை பெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக வந்திருந்தது இந்த சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. அதிலும் அவர்கள் இருவரும் ஒரே நிறத்திலான உடை அணிந்து ஜோடியாக வந்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

Trisha Vijay Parthiban

விவாகரத்து செய்தியுடன் இணைந்த சர்ச்சை

இதற்கு காரணம், விஜய்யின் மனைவி சங்கீதா (Sangeetha Sornalingam ) விஜயிடம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக வெளிவந்த தகவல்களே. இந்த செய்தி வெளியான சில நாட்களுக்குள் விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக திருமண நிகழ்ச்சிக்கு வந்தது சமூக வலைதளங்களில் மேலும் கவனத்தை ஈர்த்தது.

இருவரும் ஏற்கனவே பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தாலும், இத்தனை ஆண்டுகளில் இப்படியாக ஒன்றாக ஒரு நிகழ்ச்சிக்கு வருவது இதுவே முதல் முறை என பலர் கூற ஆரம்பித்தனர். அதனால் இந்த சம்பவத்திற்கும் விவாகரத்து மனுவிற்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சிலர் வெளிப்படையாக பேச தொடங்கினர். சிலர் இன்னும் நேரடியாக திரிஷாவையே அந்த மனுவில் குறிப்பிடப்பட்ட நடிகை எனவும் குற்றம் சாட்ட ஆரம்பித்தனர்.

ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி

இந்த சம்பவம் குறித்து விஜய்யின் ரசிகர்களிடம்கூட கலவையான எதிர்வினைகள் வெளியாகின. "அரசியலில் நல்ல முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்படியான விஷயங்கள் தேவையா?" என்ற கேள்வியும் எழுந்தது. சிலர் "வீட்டிலேயே பிரச்சனையை சரி செய்ய முடியாதவர் நாட்டை எப்படி பாதுகாப்பார்?" என்ற விமர்சனத்தையும் முன்வைத்தனர். இதில் அரசியல் தரப்பிலும் கருத்துகள் வெளியாக ஆரம்பித்தன. சமீபத்தில் தவெக நிர்வாகிகளில் ஒருவரான ரஞ்சனா நாச்சியார் கூட விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார்.

திரைத்துறையிலிருந்தும் எதிர்ப்புகள்

இந்த விவகாரம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையிலும் பேசப்படும் விஷயமாக மாறியது. சில இயக்குநர்களும் நடிகர்களும் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தனர். இயக்குநர் பாலா, ஆர்.வி.உதயகுமார் ஆகியோரிடம் நடிகர் சமுத்திரகனி இந்த விஷயத்தை பற்றி ஆதங்கத்துடன் பேசிய வீடியோவும் இணையத்தில் வைரல் ஆனது.

பார்த்திபன் கூறிய சர்ச்சையான கருத்து

இதற்கிடையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் (Parthiban) கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் திரிஷா குறித்து கூறிய கருத்து மேலும் சர்ச்சையை கிளப்பியது. ஒரு நிகழ்ச்சியில் திரிஷாவின் புகைப்படத்தை காட்டியபோது பார்த்திபன், "குந்தவை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது. வெளியே வந்தால் பிரச்சனைகள் வருகிறது" என்று கூறியிருந்தார்.

திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் "குந்தவை" என்ற கேரக்டரில் நடித்திருந்ததால் அந்த குறிப்பை வைத்து அவர் இவ்வாறு பேசியதாக கூறப்பட்டது. ஆனால் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரிய எதிர்ப்பை சந்தித்தது.

திரிஷாவின் பதிலடி

இதற்கு பதிலாக திரிஷா தனது சமூக வலைதளத்தில் கடுமையாக பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், "மைக்கில் பேசுவது மட்டும் அதை புத்திசாலித்தனமாக மாற்றாது. மரியாதையில்லாமல் பேசப்படும் வார்த்தைகள் யாரைப் பற்றி சொல்கிறார்களோ அவர்களின் குணத்தை காட்டாது. அதை பேசுபவரின் குணத்தையே காட்டும்" என்று மறைமுகமாக கண்டனம் தெரிவித்தார்.

பார்த்திபன் வெளியிட்ட விளக்கம்

இந்த விவகாரம் பெரிதாகி விட்டதால் பார்த்திபன் பின்னர் இரண்டு காணொளிகளை வெளியிட்டு தனது நிலைப்பாட்டை விளக்கினார்.

அதில் அவர் கூறியதாவது, அந்த நிகழ்ச்சியில் வேகமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. அப்போது திரிஷாவின் புகைப்படத்தை காட்டியபோது என்ன பேசுவது என்று தெரியாமல் திடீரென வார்த்தை விளையாட்டாக அந்த கருத்தை கூறியதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தன்னிடம் எந்தவித தீங்கான நோக்கமும் இல்லை என்றும், அந்த கருத்து சிலருக்கு வருத்தம் அளித்திருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்றும் கூறினார்.

பின்னர் வெளியிட்ட இன்னொரு வீடியோவில், விஜய்க்கு கரூர் பிரச்சனை கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை அப்போது கூட அவருடைய மதிப்பு குறையவில்லை. ஆனால் திரிஷாவுடன் கல்யாண நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதுதான் அவருடைய ரசிகர்களாலே அதிகமாக பேசப்படுகிறது. அவருடைய மதிப்பு குறைந்து இருக்கிறது. விஜய்க்கு திரிஷாவால் அரசியலில் பாதிப்பு ஏற்படும் என்பதால்தான் அவர் வீட்டிலேயே இருந்தால் நல்லது என்று நான் சொன்னேன் என பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும் திரிஷாவிடம் இருந்து இப்படி ஒரு போஸ்ட் வரும் என்று தெரிந்திருந்தால் நான் அவரிடம் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டேன் என்று பேசி இருக்கிறார்.

திரிஷாவின் இன்ஸ்டா பதிவு

இந்த விவகாரம் இவ்வாறு சூடுபிடித்து கொண்டிருக்கும் நேரத்தில் திரிஷா தனது சமூக வலைதளத்தில் மிகவும் சாதாரணமான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் தனது செல்ல நாயை படம் பிடித்து வெளியிட்ட அவர், "கனவுலகில் பூனைகளை விரட்டிக் கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை உடனே ஈர்த்தது.

ரசிகர்களின் கலவையான கருத்துகள்

திரிஷாவின் இந்த பதிவுக்குக் கீழ் விஜய்யின் சில ரசிகர்கள் கடும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். "நாயின் கனவுகளுக்கெல்லாம் கவனம் செலுத்துகிறீர்கள். ஆனால் உங்கள் செயலால் எங்கள் அண்ணாவின் முதலமைச்சர் கனவே சிதைவதற்கான நிலை வந்துவிட்டதே" என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இன்னொரு கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. பார்த்திபன் சமீபத்தில் வெளியிட்ட காணொளி குறித்து பேசப்படும் நேரத்தில் திரிஷா இந்த பதிவை பகிர்ந்திருப்பது ஏதேனும் மறைமுக பதிலா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் இந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து பேசப்படும் வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+