மின் பற்றாக்குறை இல்லை.. சிலரின் செயலால்தான் மின்வெட்டு!.. சட்டசபையில் விஜய் பரபரப்பு பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. தமிழகத்தில் ஆங்காங்கே ஏற்படும் மின்வெட்டுப் பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய் வேண்டுமென்றே சிலரின் நடவடிக்கையால் மின்வெட்டு ஏற்படுவதாகவும், விரைவில் இந்த மின்வெட்டு நிலைமை அறவே நீக்கப்படும் என்று கூறினார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்வெட்டு பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்த நிலையில், எதிர்க்கட்சிகள் மின்வெட்டுக்கான காரணங்கள் மற்றும் அதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

power-cuts-in-tamil-nadu-due-to-deliberate-acts-by-some-situation-will-be-resolved-soon-cm-vijay

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை இல்லை என்றும், பராமரிப்பு மற்றும் விநியோகக் கோளாறுகளுடன் சிலரின் வேண்டுமென்ற செயல்பாடுகளும் மின்தடைக்கு காரணமாக இருப்பதாக விளக்கம் அளித்தார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்தாலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகளும், மின்சார சாதனங்கள், மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதாலும், வேண்டுமென்ற சிலர் செய்யும் நடவடிக்கைகளாலும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மின் விநியோக மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக எதிர்பாராத விதமாக இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடங்கல்களை சரிசெய்யும் வகையில் 10 உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள், 125 சிறப்பு மின்தடை நீக்க ரோந்து நீக்க வாகனங்கள் வழங்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

77 புதிய மின் தடை நீக்க மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மின்வெட்டு நிலைமை அறவே நீக்கப்படும் என்று கூறினார். தமிழகத்தில் நிலவுவது மின் பற்றாக்குறை அல்ல, மாறாகப் பராமரிப்பு மற்றும் விநியோகக் கோளாறுகள் மட்டுமே என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+