நீட் தேவையில்லை.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை வேண்டும்! முதல்வர் விஜய் திட்டவட்டம்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்றைய தினம் முதல்வர் விஜய் பேசினார். அப்போது மாநிலத்தில் இரு மொழி கொள்கையே தொடரும் என உறுதியளித்த அவர், +2 அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மேலும், நீட் தேர்வு நீக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் கடந்த இரு நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு இன்று முதல்வர் விஜய் பதிலளித்துப் பேசியிருந்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்தும் முதல்வர் விஜய் விளக்கம் அளித்தார். குறிப்பாக மாநிலத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு தர வேண்டும் என்றும் +2 மார்க் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

முதல்வர் விஜய்
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "அரசு விழாக்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளோடு தொடக்கத்தில் நம்ம தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது தான் வழக்கமாக இருக்கு. தமிழ்த்தாய் வாழ்த்தைப் பொறுத்தவரை நம் அரசு இதில் உறுதியாக இருக்கிறது. நம்மளோட உறுதியான நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு மிகத் தெளிவாக தெரிவிச்சிருக்கு. இதில் மாநில அரசின் கொள்கைக்கு ஏற்ப மத்திய அரசின் அறிவிக்கையில் திருத்தம் மேற்கொள்ளக் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நீட்
நீட் தேர்வைப் பொறுத்தவரை, கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்குச் சமமான வாய்ப்பை வழங்குவதில்லை. மருத்துவக் கல்வியில் சமூக நீதி மற்றும் சம வாய்ப்பை நீட் பாதிக்கிறது என்பதை உணர்கிறோம். எனவே, மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையை 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று நமது அரசு வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசிடம் நீட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications