"ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து சிஎம் ஆகலை!" 2008 டூ 2024 வரை செய்தது என்ன? "தம்கட்டி" லிஸ்ட் போட்ட விஜய்
சென்னை: ஏதோ ஷூட்டிங்கில் இருந்து நான் நேராக முதல்வராகிவிடவில்லை என்று கூறிய முதல்வர் விஜய், 2008 ஆம் ஆண்டு முதல் என்னென்ன செய்தோம் என்பதையும் அவர் பட்டியலிட்டார்.
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்வர் விஜய் பேசினார். அவர் பேசியதாவது: "இந்த 17-வது மாமன்றத்தில் அதிகப்படியான 12 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். நாம கொள்கை ரீதியாகவும், நிலைப்பாடு ரீதியாகவும் வேறுபட்டு இருந்தாலும், மக்கள் பணி செய்வதுதான் நம்ம எல்லாருக்கும் பிரைமரியா இருக்கிற ஒரே லட்சியம் (Primary Aim). அந்த வகையில் தான் நம்ம எல்லாருமே நம்ம மக்களால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோம்.

அதனால நாம கருத்தால் வேறுபட்டாலும், மக்கள் சேவை என்ற நோக்கத்தில நம்ம மாநிலம் சார்ந்த விஷயங்கள்ல நாம எல்லாரும் ஒன்றிணைந்து பயணிச்சா, நம்ம தமிழ்நாடு என்னைக்கும் எதிலையும் முதன்மை மாநிலமாகத் திகழும்.
அப்புறம் நம்மளோட அரசியல் பயணத்தைப் பத்தியும் கொஞ்சம் பதிவு செய்ய விரும்புறோம். நாம ஏதோ ஷூட்டிங்ல இருந்து நேரா வந்து சி.எம் (CM) ஆன மாதிரியே சில பேர் ஒரு இமேஜ் கிரியேட் பண்றாங்க. அவங்களுக்கு அவங்க ஆசைப்படுற லாங்குவேஜ்லயே சொல்றோம்... அது வெறும் ரியல் (Reel) தான், ரியல் (Real) கிடையாது!
ஒரு சாதாரண நடிகனாதான் நம்ம கெரியர் தொடங்குச்சு. அப்புறம் அப்படியே சின்சியரா உழைச்சு மேல வந்தோம். நம்ம கரியர்ல நாம மேல வந்ததுக்கு இந்த விஜய் ஒருத்தன் மட்டுமே காரணம் இல்லை, அவனோட உழைப்பு மட்டுமே காரணம் இல்லை; இந்த விஜயோட உழைப்புக்கும் உயர்வுக்கும் பின்னாடி இருக்கிற ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களோட அன்பும் அரவணைப்பும் தான் காரணம்.
ஒவ்வொரு வீட்டில இருக்க ஒவ்வொருத்தரும் நம்மள அவங்க வீட்டில ஒருத்தனா ஏத்துக்கிட்டதுதான் நமக்கு கடவுளும் மக்களும் தந்த மிகப்பெரிய வரம். அதுக்காகவே கடவுளுக்கும், கடவுளுக்குச் சமமான நம்மளோட சொந்தங்களான தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி.
இப்படி நம்மள தாய் அன்போடு அள்ளி அரவணைச்ச தமிழ்நாட்டு மக்களுக்கு நாம எப்படி எல்லாம் துணையாக இருந்தோம், எப்படி எல்லாம் மக்களோட மக்களா இருந்தோம்னு சொல்றேன்.
- 1990-களிலேயே ரசிகர் மன்றமா இருந்தப்பவே மக்களுக்கு துணையா நிக்க ஆரம்பிச்சோம். அதுக்கப்புறம் நற்பணி மன்றமாவும், அதுக்கப்புறம் விஜய் மக்கள் இயக்கமாவும் மாறி மக்களோட மக்களா நின்னுகிட்டு இருந்தோம்.
- 2008-ல் ஈழத் தமிழருக்கு ஆதரவா உண்ணாவிரதப் போராட்டம் செஞ்சோம். போர் முடிவுக்கு வரணும், நம்ம தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பான, நிம்மதியான ஒரு வாழ்வு கிடைக்கணும்னு அன்னைக்கே கோரிக்கை வச்சோம்.
- 2009-ல் ஆரம்பிச்ச விஜய் மக்கள் இயக்கம் வழியா நம்மளோட மக்கள் நலப் பணிகளை எக்ஸ்டென்ட் அண்ட் எக்ஸ்பாண்ட் (Extend and Expand) பண்ணிக்கிட்டே வந்தோம்.
- கல்விக்குத் துணையா இருந்தோம், சோசியல் சர்வீஸ் செஞ்சோம், வெள்ள நிவாரணத்தில் துணையா இருந்தோம், கொரோனா காலத்தில் மக்களுக்குத் தோள் கொடுத்தோம்.
- விலையில்லா விருந்தகம், குருதியகம், முட்டை-பால்-ரொட்டி திட்டம், விழியகம், பயிலகம், நூலகம் (தம்கட்டி பேசினார்) இப்படிப் பல வழியில மக்களுக்குத் துணையாக இருந்தோம்.
- அப்புறம் நம்மளோட திரைப்படங்கள்ல நம்மளால முடிஞ்ச வரைக்கும் ஊழல் எதிர்ப்பைச் சொன்னோம், சமூக நீதியைச் சொன்னோம், கல்வியைப் பத்திச் சொன்னோம், அரசியலைப் பத்திச் சொன்னோம். அரசியலைப் பத்திப் பேசுனதுனால நம்ம படங்கள் சந்திச்ச, ஏன் இதுவரைக்கும் சந்திக்கிற பிரச்சனையைப் பத்தி எல்லாருக்குமே தெரிஞ்சதுதான்.
- இதுமட்டுமில்லாம 2011-ல் நாகப்பட்டினத்தில மீனவர் பிரச்சனைகளுக்கு ஆதரவா ஒரு பெரிய பொதுக்கூட்டம் நடத்தினோம். மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் பேசி, அதுல நம்மளுடைய எதிர்ப்பைப் பதிவு செஞ்சோம்.
- 2017-ல் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துல தமிழர் பண்பாட்டு உரிமைக்கான நம்மளோட ஆதரவைத் தெரிவிச்சோம். 2018-ல் ஸ்டெர்லைட் போராட்டம் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட நம்ம சொந்தங்களை நேர்ல சந்திச்சு ஆறுதல் சொன்னோம்.
- 2021-ல் உள்ளாட்சித் தேர்தல்ல விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் போட்டியிட்டு ஜெயிச்சாங்க. கல்வி விருது விழா நடத்திச் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும் பரிசும் கொடுத்தோம்.
- 2024-ல் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பிச்சோம். ஆரம்பிச்ச உடனேயே சி.ஏ.ஏ-வை (CAA) எதிர்த்து அறிக்கை விட்டோம்.
- அரசியல் கட்சி ஆரம்பிச்சு விழுப்புரம் மாவட்டத்தில் விக்ரவாண்டியில நம்மளோட முதல் மாநில மாநாட்டைக் கொள்கைத் திருவிழாவா நடத்தினோம்.
- தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள்னு நம்மளோட ஐந்து கொள்கைத் தலைவர்களை அறிவிச்சோம்.
- இந்தியாவிலேயே இரண்டு பெண் ஆளுமைகளைக் கொள்கைத் தலைவர்களா அறிவிச்ச ஒரே கட்சி நம்ம டி.வி.கே (TVK) மட்டும்தான் என்ற பெருமையோடு அறிவிச்சோம்.
இவ்வாறு விஜய் பேசினார்.












Click it and Unblock the Notifications