எப்படியாவது கூட்டிட்டு போயிடுங்கப்பா.. கோவை சிறுவனின் கதறல்.. அட்டைப்பெட்டி கம்பெனி பெண்ணின் கொடூரம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் கள்ளக்காதலுக்கு தொந்தரவாக இருந்த 6 வயது மகனை அடித்துக் கொன்றுள்ளார் பெற்ற தாய்.. சின்னஞ்சிறு பிள்ளையை பொதுவெளியில் மனசாட்சியே இல்லாமல் தாக்கி கொலை செய்துள்ளார்.. இதற்கு அவரது கள்ளக்காதலனும் உடந்தையாக இருந்துள்ளார்.. கோவையை உலுக்கிய இந்த கொலை சம்பவத்தில், நீதிபதி இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளார்.. அதைபற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

கோவை சாய்பாபா காலனி கோவில்மேடு பகுதியில் வசித்து வருபவர் திவ்யா.. 32 வயதாகிறது.. கல்யாணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். திவ்யாவுக்கு அபிஷேக் என்ற 6 வயது மகன், ஒரு 3 வயது மகள் திவ்யா என்ற 2 குழந்தைகள் உள்ளதால், அவர்களுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

Coimbatore Child Murder Court Verdict Child Abuse Case Crime News Tamil Nadu Crime Human Interest

அட்டைப்பெட்டி தயாரிக்கும் கம்பெனி

தான் வசித்து வந்த பகுதிலேயே அட்டைப்பெட்டி தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார்... இவரது 2 குழந்தைகளையும், பிரிந்து சென்ற கணவர் அடிக்கடி வந்து பார்த்துவிட்டு செல்வாராம்.

கணவரை பிரிந்து வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜதுரை (35) என்பவருடன் திவ்யாவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.. எனினும் தங்களது உறவுக்கு 2 குழந்தைகளும் தொந்தரவாக இருப்பதாக இந்த ஜோடி நினைத்து, அந்த குழந்தைகளை அளவுக்கு அதிகமாக டார்ச்சர் செய்து வந்துள்ளனர் திவ்யாவும், ராஜதுரையும்.

அதிலும் திவ்யாவின் 6 வயது மகன் அபிஷேக், கடுமையான டார்ச்சருக்கு ஆளானான்.. ராஜதுரையும், திவ்யாவும் அபிஷேக்கை ஓயாமல் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்கள்.

கெஞ்சிய அபிஷேக்

ஒருமுறை தங்களை பார்க்க வந்த அப்பாவிடம், தனக்கும், தன் தங்கைக்கும் வீட்டில் நடக்கும் கொடுமைகளை சொல்லி அழுதுள்ளான்.. அம்மாவும், வீட்டுக்கு வரும் ஒரு மாமாவும் தன்னை தொடர்ந்து அடித்துத் துன்புறுத்துவதாக கூறி கதறி அழுது, எப்படியாவது இங்கிருந்து தங்களை அழைத்து சென்றுவிடுமாறும் செல்லுமாறு அப்பாவிடம் கெஞ்சியுள்ளான் அபிஷேக்..

இதைக்கேட்டு பதறிய அப்பா, தற்போது வீட்டு வேலை நடந்து வருவதால், அது முடிந்ததுமே அழைத்து செல்வதாக அபிஷேக்குக்கு தைரியம் சொல்லி உள்ளார்..

சாய்பாபா காலனி

அப்பாவிடம் தங்களை பற்றி புகார் சொன்ன விஷயம் திவ்யாவுக்கு தெரிந்து கொந்தளித்தார்.. அபிஷேக்குக்கு டார்ச்சர் இன்னும் அதிகமானது.. கடந்த 2020 ஏப்ரல் 19ம் தேதி, சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஒரு கடைக்கு அபிஷேக்கை, ராஜதுரையும் திவ்யாவும் அழைத்து சென்று, அங்கேயே ஒரு தடிமனான குச்சியால் கொடூரமாக அடித்து தாக்கியிருக்கிறார்கள்..

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், குழந்தையை ஏன் இப்படி அடிக்கிறீங்க? என்று திவ்யாவை கேட்டுள்ளனர்.. ஆனாலும் கள்ளக்காதல் ஜோடி விடாமல் அபிஷேக்கை விளாசி தாக்கி உள்ளது.. ஒருகட்டத்தில் படுகாயமடைந்த சிறுவன் அபிஷேக் திடீரென மயங்கி விழுந்து விட்டான்.

கள்ளக்காதல் கொலை

அங்கிருந்தவர்கள் அவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனாலும் மருத்துவமனை போகும் வழியிலேயே சிறுவன் அபிஷேக்கின் உயிர் பிரிந்தது.. இது குறித்து சாய்பாபா காலனி காவல் துறையினர் உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து, தாய் திவ்யா மற்றும் அவளது கள்ளக்காதலன் ராஜதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்..

இந்தக் கொலை வழக்கின் விசாரணை கோவையில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் ஆஜராகி சாட்சிகளுடன் , தன் தரப்பு வாதங்களை முன்வைத்தார்..

நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் திவ்யா, ராஜதுரை ஆகிய 2 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், இருவருக்குமான தண்டனையை நீதிபதி உறுதி செய்தார்..

சிறுவனை கொலை செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் இரட்டை ஆயுள் தண்டனை தனிதனியாக அனுபவிக்க வேண்டும் என்றும், இதே போல சிறுவனின் தாய்க்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பு கூறினார்... நீதிபதியின் இந்த தீர்ப்பு பலரது கவனத்தை பெற்று வருகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+