ஈரானிடம் சிக்கிய அமெரிக்கா! அலறும் இஸ்ரேல்! ட்ரம்புக்கு வந்த அவசர போன்! மிடில் ஈஸ்ட் ‘திக் திக்’
டெல் அவிவ்: "என்னப்பா இது... நீயே ஒரு வழியைக் கண்டுபிடிச்சு இந்த போரை முடிச்சுடு!" - இதுதான் இப்போது இஸ்ரேலிடமிருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்புக்குப் போயிருக்கும் ரகசிய மெசேஜ். 'ஈரானை ஒரு கை பார்ப்போம்' என்று கிளம்பிய இஸ்ரேல், இப்போது அடிவாங்கிய புலி போல பதுங்கத் தொடங்கியிருக்கிறது.
இதோ, மத்திய கிழக்கில் நடக்கும் இந்த 'பகீர்' திருப்பங்களின் பின்னணி!
ட்ரம்புக்கு அழுத்தம்: "நமக்கு ஒரு 'எக்சிட் பிளான்' வேணும்!"
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆலோசகர்கள் இப்போது கடும் கவலையில் இருக்கிறார்கள். ஒரு பக்கம் விண்ணைத் தொடும் கச்சா எண்ணெய் விலை, இன்னொரு பக்கம் 'இது எப்போது முடியும்?' என்றே தெரியாத போர். "இந்த போர் இப்படியே நீண்டால், அது அமெரிக்காவின் அரசியலில் நமக்கே பெரிய 'பேக்லேஷ்' (Backlash) ஆகிவிடும். அதனால், ஈரானுடனான இந்தப் போரிலிருந்து வெளியேற ஒரு எக்சிட் பிளான் (Exit Plan) தயார் செய்யுங்கள்" என்று ட்ரம்பை அவரது டீம் நச்சரிக்கத் தொடங்கியிருக்கிறது.

'யார் யாருக்கு ஆர்டர் போடுவது?' - இஸ்ரேலின் பீதி!
பொதுவாக, இஸ்ரேல் என்ன சொல்கிறதோ அதைத்தான் அமெரிக்கா கேட்கும் என்பது உலகறிந்த ரகசியம். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ்! ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் மற்றும் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, இஸ்ரேலே இப்போது "எப்படியாவது இந்த போரை நிறுத்த வழி இருக்கா?" என்று 'எக்சிட் ரேம்ப்' (Exit Ramp) தேடி அலைகிறது.
"நாங்க நினைச்ச மாதிரி இது இல்லையே!" என்பதுதான் இஸ்ரேலின் இப்போதைய மைண்ட் வாய்ஸ். ஈரானை அதிரடியாகத் தாக்கத் திட்டமிட்ட இஸ்ரேல், இப்போது ஒரு பெரிய 'சுழலில்' சிக்கிக்கொண்டது. ஈரானின் ஒவ்வொரு அடியும் இஸ்ரேலை அதலபாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இஸ்ரேலை மொத்தமாக முடக்கி போட்டுள்ளது.
'ஃபாஃபோ' (FAFO) என்றால் என்னவென்று புரிந்ததா?
இணையத்தில் 'FAFO என்றொரு வார்த்தை உண்டு. அதாவது, "ஏடாகூடமாக எதையாவது செய்துவிட்டு, அதன் விளைவை அனுபவிப்பது". இஸ்ரேல் இப்போது அதே நிலைமையில் தான் இருக்கிறது.
ஆரம்பத்தில் ட்ரம்ப் "இந்த போரை சீக்கிரம் முடிப்பேன்" என்று சொன்னபோது, அவர் ஈரானுக்கு எதிராகப் பேசுகிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இஸ்ரேலே இந்த போரால் கடும் பீதியில் (Panic) இருக்கிறது. அதனால், அவர்கள் சொன்னதைத்தான் ட்ரம்ப் அப்படியே செய்துகொண்டிருக்கிறார்.
தேஹ்ரானின் கையில் சாவி!
இங்கே ஒரு முக்கியமான விஷயம்... இப்போது போரை நிறுத்துவதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் இஸ்ரேலிடமோ அல்லது அமெரிக்காவிடமோ இல்லை. அந்த காலம் எல்லாம் கடந்துவிட்டது. அந்த 'ரிமோட் கன்ட்ரோல்' இப்போது ஈரான் தலைநகர் தேஹ்ரானிடம் இருக்கிறது. "அமெரிக்கப் படைகள் இந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தை விட்டு வெளியேறும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை" என்பதில் ஈரான் மிக உறுதியாக இருக்கிறது. ஈரான்தான் இந்த போர் எப்போது முடியும் என்று முடிவு செய்யும் .
மொத்தத்தில், ஒரு 'சர்ப்ரைஸ் அட்டாக்' மூலம் ஈரானை மடக்க நினைத்த இஸ்ரேல், இப்போது தங்களது இருப்பே கேள்விக்குறியாகும் அளவுக்கு ஒரு மாபெரும் போருக்குள் சிக்கியுள்ளது.
-
குவைத் நாட்டில் ஈரானின் வெறியாட்டம்! விமான சேவை மொத்தமாக முடக்கம்.. ஜோர்டானில் மட்டும் 12 ஏவுகணைகள் -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கப்பலேறிய மானம்! அமெரிக்க வங்கியில் காப்பீட்டு ஆவணத்தில் ₹950 கோடி? மகேந்தர் மகிஜனி சிக்கியது எப்படி -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி












Click it and Unblock the Notifications