234 இல்ல.. முதலில் எங்க டார்கெட் இதுதான்! சர்ச்சைக்கு மத்தியில் ஓபனாகவே பேசிய நடிகர் தனுஷ்
சென்னை: நடிகர் தனுஷ் நடித்த ஓம் படத்தின் பிரமோஷனில் அவர் பேசிய விஷயம் தான் இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. ஏற்கனவே சமீப காலமாக அவர் பற்றி அரசியல் சர்ச்சைகள் பரவி வருகிறது, அதற்கெல்லாம் பதில் கொடுக்காமல் சிரித்தபடியே சென்று கொண்டிருக்கும் தனுஷ், இப்போது 234 தொகுதியிலும் படிக்க மாணவர்களுக்கு ஏசி டியூஷன் சென்டர் தொடங்கபோவதாக பரவி வந்த தகவல்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
தனுஷிடம் கேட்கப்பட்ட கேள்வி
அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர், 234 தொகுதிகளிலும் மாணவர்களுக்கான ஏசி டியூசன் சென்டர்கள் தொடங்க போவதாக வெளியான தகவல் குறித்து தனுஷிடன் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த தனுஷ், "234 தொகுதிகளிலும் என்று இல்ல, தமிழ்நாடு முழுவதும் ஏசி டியூஷன் சென்டர் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் மொத்தமாக உடனே செய்து விட முடியாது. இப்போதைக்கு சென்னையில் 3 இடங்களிலும், கன்னியாகுமரி 1 இடத்திலும் தொடங்கப் போகிறோம். அதுதான் உண்மை. படிக்கிற குழந்தைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் செய்யலாம் என்று நினைக்கிறோம்" என்று சொல்லி இருக்கிறார்.

தனுஷ் கொடுத்த விளக்கம்
அதாவது, முதற்கட்டமாக 4 இடங்களில் மையங்களை தொடங்கி அதற்கு பிறகு படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பதுதான் திட்டம். 234 தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் தொடங்குவது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்பதையும் தனுஷ் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். முன்னதாக வெளியான செய்திகளில் 234 தொகுதிகளுக்கும் ஏசி டியூஷன் சென்டர் தனுஷ் அமைக்க போகிறார் என்பது பெரிய அளவில் கவனம் பெற்ற நிலையில் இப்போது தனுஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சர்ச்சைக்கு பதில்
அதுபோல இந்த நிகழ்ச்சியில் தனுஷ் டியூஷன் சென்டர் பற்றி மட்டும் பேசாமல், சமீப காலமாக தன்னை பற்றி விமர்சனங்கள் பரவி வரும் சூழ்நிலையில் தன்னை யார் இயக்குகிறார்கள்? தனக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? என்று பேசப்படுவது குறித்தும் பதில் கொடுத்து இருக்கிறார். அதாவது "என்னை இவர் இயக்குகிறார், அவர் இயக்குகிறார், என் பின்னால் இவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அப்படி எல்லாம் யாரும் இல்லை. என்னை இயக்குவது இறைவன் .என் பின்னால் இருப்பது ரசிகர்கள். மக்கள் என்பக்கம் இருக்கிறார்கள். எண்ணம் போல் வாழ்க்கை" என்று அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியதும் கவனம் பெற்றது.
ரசிகர்கள் கேள்வி
ஏற்கனவே தனுஷ் சமீபத்தில் நடந்த ரசிகர்கள் சந்திப்பின்போது வெள்ளி விளக்கு கொடுத்தது சர்ச்சையானது. அதுவும் விளக்கின் அடிப்பகுதியில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததால் இவர் பாஜக ஆதரவாளரா? பாஜக இவரை இயக்குகிறதா? இவர் பின்னால் பாஜக இருக்கிறதா? என்ற விமர்சனமும் ஒரு பக்கம் கொடிகட்டி பறந்தது. அதற்கெல்லாம் இப்போது தனுஷ் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
மேலும் மழைக்காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்றும் தனுஷ் கேட்டுக்கொண்டார். தேவைப்படும் இடங்களில் உணவு அத்தியாவசிய பொருள்கள் போன்ற உதவிகளை செய்ய ரசிகர்கள் முன்வர வேண்டும் என்று அவர் சொன்னதும், அவருடைய நற்பணி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து மீண்டும் கவனம் திரும்பி இருக்கிறது.
தனுஷின் இந்த அறிவிப்பைகளை பார்க்கும்போது ரசிகர்கள் மத்தியில் இயல்பாகவே பல கேள்விகள் எழுதுகின்றன. ஏசி வசதியுடன் கூடிய டியூசன் சென்டர்கள் என்பது வெறும் அறிவிப்பாக இல்லாமல் உண்மையாக செயல்பாட்டுக்கு வரும்போது மாணவர்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கும் என்பதுதான் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications
