நடிகை மிருணாளினிக்கு எளிமையான திருமணம் முடிந்தது.. நெகிழ்ச்சியாக போட்ட போஸ்ட்! அழகான போட்டோஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிக் டாக் வீடியோவில் சின்ன சின்ன முக பாவனைகள், அழகான ரியாக்ஷன்கள் மூலம் சோசியல் மீடியாவில் தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகை மிருணாளினி ரவி. பின்னர் சினிமாவிலும் நுழைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது அவருடைய வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கி இருக்கிறது. நடிகை மிருணாளினி திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் அவர் பகிர்ந்திருக்கும் திருமண போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Mrinalini

மிருணாளினி திருமண போட்டோக்கள்

மிருணாளினியின் திருமண போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திருமணத்திற்கு முன்பாகவே அவருடைய மெஹந்தி, சங்கீத் உள்ளிட்ட கொண்டாட்டங்கள் தொடர்பான போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி வந்தன. அவருடைய பங்ஷனில் ஃப்ரெண்ட்ஸ் டான்ஸ் ஆடிய வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலானது. இப்போது திருமண போட்டோக்களை பகிர்ந்ததும் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

7 வருட காதல்

மிருணாளினியின் காதல் பயணம் 7 வருஷங்களுக்கு முன்பே தொடங்கி இருக்கிறது. ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணுவுடன் 7 வருஷங்களாக இருந்த நட்பு காதலாக மாறியதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். அந்த பதிவுக்கு கூட, "ஒவ்வொரு பிறவியிலும் உன்னை தான் தேர்ந்தெடுப்பேன்" என்று அர்த்தத்தில் அவர் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியதும் அந்த நேரத்தில் வைரலானது.

Mrinalini

மிருணாளினி பதிவு

ஏற்கனவே மகாவிஷ்ணு சோசியல் மீடியாவில் சில கருத்துக்கள் பேசி சர்ச்சைகளை ஏற்படுத்தியவர், அதனால் அவருக்கும் நடிகைக்கும் கல்யாணமா? என்று பலர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர். ஆனாலும் திருமணம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அவருடைய பதிவில் கேட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று நவம்பர் 15ல் இவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. அந்த புகைப்படங்களை இன்று பகிர்ந்திருக்கிறார். மேலும் அந்த பதிவில், " Of all the prayers life could answer, you were my most beautiful one♥️ 15.11.2026 - The day we became us 💍 " என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். மிருணாளினியின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகை சார்ந்தவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மெரினாவில் நீயே பொருத்தவரை அவருடைய சினிமா பயனுமே கொஞ்சம் சுவாரசியமானது தான் சோசியல் மீடியாவில் அவர் வெளியிட்ட டப்ஸ்மாஷ் வீடியோக்கள் பலரையும் கவர்ந்தது அந்த வீடியோக்கள் மூலமாக தன் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது அதிலும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதைத் தொடர்ந்து சாம்பியன் எனிமி எம்ஜிஆர் மகன் ஜாங்கோ கோப்ரா ரோமியோ என ஒவ்வொரு படத்தில் ஒவ்வொரு விதமான கேரக்டரில் நடித்து வந்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்திருந்தார் இவர் எத்தனையோ படத்தில் நடித்திருந்தாலும் விஷாலுடன் நடித்த எளிமை படத்தில் இடம்பெற்ற டும் டும் பாட்டு மெரினாவில் இன்னிக்கி அதிகமான ரசிகர்களை கொண்டு சேர்த்தது இப்போது கூட அவருடைய திருமண போட்டோக்களில் இந்த பாட்டை போட்டு தான் பலர் ஸ்டோரி வைத்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+