கூடுவாஞ்சேரி ஓட்டலில் காருடன் கடத்தப்பட்ட சிறுமி.. அதிகாலையில் போட்ட சத்தம்.. சீர்காழியில் மீட்பு
மயிலாடுதுறை: சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் ஓட்டல் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் உறங்கிக் கொண்டிருந்த 12 வயது சிறுமியை, காருடன் மர்ம நபர் கடத்திச் சென்றனர். கடத்தப்பட்ட சிறுமி அதிகாலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மீட்கப்பட்டுள்ளார். ஆனால் கடத்தல்காரர்கள் காருடன் தப்பி உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம், கமுதியை சேர்ந்தவர் மலையரசன். இவர் தன்னுடைய குடும்பத்துடன் கூடுவாஞ்சேரியில் உள்ள வல்லாஞ்சேரியில் வசித்து வருகிறார். கூடுவஅதே பகுதியில் ஓட்டல் ஒன்றையும் மலையரசன் நடத்தி வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் வலையப்பட்டி கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு மலையரசன் தனது மனைவி மற்றும் 12 வயது மகளுடன் அண்மையில் சென்றுள்ளார். நேற்று இரவு 11 மணியளவில் திரும்பி வந்தார். அப்போது மலையரசனும், அவரது மனைவியும் தங்களுடைய உணவகம் முன்பு காரை நிறுத்தி விட்டு சென்றனர். மகள் தூங்கியதால் அவரை காரிலேயே விட்டு விட்டு உள்ளே சென்றுள்ளார். மகள் காரில் உறங்கியதால், காரில் ஏ.சி. ஆப் செய்யவில்லை. அத்துடன் ஏசி இயங்கிய காரணத்தால் வண்டியின் என்ஜினையும் அவர் ஆப் செய்ய வில்லை என்று கூறப்படுகிறது.
வீட்டிற்குள் சென்ற மலையரசன், சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்துள்ளார். காரை காணவில்லை.. மகள் உறங்கி கொண்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் காருடன் கடத்தி சென்றுள்ளது தெரியவந்தது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே, கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர். உடனடியாக தமிழ்நாட்டின் அனைத்த மாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். தீவிர சோதனை நடந்தது.
இதனிடையே கடத்தப்பட்ட காரில் சிறுமி இருப்பதை கண்டு கடத்தல்கார்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் சிறுமி தூங்கி கொண்டிருந்ததால் வண்டியை ஓட்டியடிப சென்றுள்ளனர். இந்த சூழலில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள புதிய பஸ்நிலையத்தில் கடத்தல் காரை நிறுத்தி விட்டு ஒரு கடையில் டீ குடித்துள்ளார்கள்.
அப்போது காரில் இருந்து இறங்கிய சிறுமி அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களிடம் காருடன் கடத்தப்பட்டதாக கூறி அழுதுள்ளார். . இதனை கவனித்த கடத்தல் கும்பல் அங்கிருந்து கடத்தல் காருடன் தப்பி சென்றுள்ளார்கள். இதையடுத்து சிறுமியை மீட்ட ஆட்டோ டிரைவர்கள் இதுபற்றி சீர்காழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். மேலும் கூடுவாஞ்சேரி போலீசுக்கும் தகவல் தந்னதர். இதைத்தொடர்ந்து கூடுவாஞ்சேரி போலீசார் சிறுமியை அழைத்து வருவதற்காக சீர்காழி விரைந்தனர்.
இதனிடையே காரின் பதிவு எண் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கடத்தல் காரை மீட்கவும், கடத்தல் காரர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கூடுவாஞ்சேரி மற்றும் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




Click it and Unblock the Notifications
